Advertisment

ஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி?

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகவலின்படி , ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க 90 நாட்கள் ஆகலாம். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி?

ஆதார் அட்டையில்  உள்ள முகவரியை மாற்ற வேண்டுமா? அரசு அலுவலகத்தில் நீண்ட வரிசையில் நிற்க வேண்டும் என்று சிதைக்காதீர்கள்.

Advertisment

ஆதார் அட்டை தொடர்பான மாற்றங்களை ஆன்லைனில் செய்வதற்கான  ஏற்பாட்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) அறிமுகப்படுத்தியுள்ளது.

நீங்கள் ஆணையத்தின்  அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் முகவரியை மாற்றலாம் .

ஆப்லைனில் - அஞ்சல் மூலமாகவும், ஆதார் பதிவு மையத்திற்கு சென்றும் ஆதார் முகவரியை மாற்றலாம்.

ஆதார் அட்டை: ஆன்லைனில் முகவரியை மாற்றுவது எப்படி?

1- ஆணையத்தின் அதிகாரப்பூர்வ uidai.gov.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும் .

2- ‘Update your address online’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும் .

3- உங்கள் 12 இலக்க ஆதார் எண் (மற்றும்) கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.பிறகு, நீங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வந்த OTP- குறியீட்டையும் உள்ளிட வேண்டும்.

4- தேவையான சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.

6- உங்கள் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, நிலையைக் கண்காணிக்க ஒரு எண் உங்களுக்கு வழங்கப்படும். இந்த எண்ணை வைத்து "ஆன்லைன் முகவரி புதுப்பிப்பு தற்போதைய நிலையென்ன" என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். எனவே, ஆன்லைனில் முகவரியை மாற்ற வேண்டுமெனில்,  ஆதார் அட்டையுடன்  பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணை வைத்திருக்க வேண்டும்.

ஆதார் அட்டை பதிவு மேம்பாடு மையத்தில் ஆதார் முகவரியை மாற்றுவது எப்படி?

சமீபத்தில் உங்கள் பெயர் அல்லது மொபைல் எண்ணை மாற்றினீர்களா? உங்கள் பிள்ளைக்கு 5 அல்லது 15 வயதாகிவிட்டதா? அருகில் உள்ள பதிவு / புதுப்பித்தல் மையத்தில் உங்கள் ஆதார் விவரங்களை (மக்கள்தொகை மற்றும் உயிரியளவுகள்) திருத்தலாம்/புதுப்பிக்கலாம் .

ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு  சென்று அருகிலுள்ள ஆதார் அட்டை பதிவு மேம்பாடு மையத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஆதார் அட்டை: அஞ்சல் மூலம் முகவரியை மாற்றுவது எப்படி?

அதிகாரப்பூர்வ யுஐடிஏஐ வலைத்தளத்திற்கு சென்று, ஆதார் அட்டை புதுப்பிப்பு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

அந்த படிவத்தில் அனைத்து தகவல்களையும் நிரப்ப வேண்டும்

புதுப்பிக்கப்பட்ட விவரங்களுடன்  படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளில்  அனுப்பவும்:

இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

அஞ்சல் பெட்டி எண் 10

சிக்கிந்வாராவில்,

மத்தியப் பிரதேசம்- 480001

இந்தியா.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

அஞ்சல் பெட்டி எண் 99

பஞ்சாரா ஹில்ஸ்,

ஹைதராபாத்- 500034

இந்தியா

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகவலின்படி , ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க 90 நாட்கள் ஆகலாம்.

Aadhaar Card Aadhaar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment