ஹைதராபாத் பிரியாணி.... சொல்வதற்கு வார்த்தையே இல்லை!!!

ஹைதராபாத் பிரியாணி கிடைக்கும் என்று போட்டப்பட்டிருக்கும் போர்ட்டுகளை பார்த்திருப்போம்.

பிரியாணி என்ற பெயர் கேட்டதுமே பலருக்கும் பசி எடுக்க ஆரம்பித்து விடும். என்னதான் நம் வீட்டிலேயே பிரியாணி சமைத்து சாப்பிட்டாலும், ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கே சென்று சாப்பிட்டாலும் பாய் வீட்டு பிரியாணிக்கு எப்போவுமே ஒரு தனிச்சுவை இருக்க தான் செய்யும். அதுலையும் பாய் வீட்டு ஹைதராபாத் பிரியாணி என்றால் சொல்வதற்கு வார்த்தையே தேவை இல்லை…

பொறித்த வெங்காயத்தை பரபரவென தூவி, அது மேல கொத்தமல்லிய அள்ளிப் போட்டு கொண்டு வந்து வைத்தால் அரை மணி நேரத்தில் அண்டா காலி. ஹைதராபாத் முஸ்லிம் மக்கள் மொஹல் ஸ்டைல பிரியாணி பண்ணுறதுதான் இந்த சூப்பர் டேஸ்டுக்கு காரணம்.

பொதுவாக பிரியாணி என்றாலே அதில் காரமும், எண்ணெய்யையும்தான் பிரதானம் என்ற காலம் போய்விட்டது. தற்போது விதவிதமாக பிரியாணிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இருந்தாலும் ஹைதராபாத் பிரியாணிக்கு ஒரு தனி கூட்டமே இருக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.. லோக்கல் கடைகளில் இங்கு ஹைதராபாத் பிரியாணி கிடைக்கும் என்று போட்டப்பட்டிருக்கும் போர்ட்டுகளை பார்த்திருப்போம்.

அதை நம்பி போய் சாப்பிட்ட உண்மையாகவே அது ஹைதராபாத் பிரியாணி போல இருக்குமா?? இதுவே ஹைதராபாத் போயிட்டு வந்தவ கிட்ட கேட்டா..”இது என்னப்பா ஹைதரபாத் பிரியாணி எல்லாம் போலி.. ரியல் ஹைதராபாத் பிரியாணி சும்மா எப்படி இருக்கும் தெரியுமா” என்பார்கள். அப்ப எதுதாண்டா ஹைதராபாத் பிரியாணி என்று குழம்பிய கூட்டத்தில் நானும் ஒருத்தி. இது எல்லாத்துக்கும் முடிவு கட்டும் விதமாக ரியல் ஹைதராபாத் பிரியாணி வீட்டிலீயே எப்படி செய்யலாம்- ன்ற ரகசியத்தை கண்டுப்பிடித்திட்டோம். இதோ அந்த சீக்ரெட் ரெசிபி..

biryani

biryani

தேவையான பொருட்கள்:

1. மட்டன் – கிலோ
2. பாஸ்மதி அரிசி – 1 கிலோ
3. பெரிய வெங்காயம்
4. பச்சை மிளகாய்
5. சீரகம்
6. கரம்மசாலாத் தூள் – 2 ஸ்பூன்
7. மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
8. ரோஸ் வாட்டர்
9. இஞ்சி-பூண்டு விழுது
10.தயிர்
11. முந்திரி
12. மஞ்சள் தூள்
13.குங்குமப்பூ
14. கொத்தமல்லித்தழை
15.புதினா இலை
16. காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
17. நெய்
18.பட்டை
19. எலுமிச்சைப்பழம்
20.பிரிஞ்சி இலை

செய்முறை:

1. முதலில் அரிசியைக் கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுக்க வேண்டும்.

2.பின்பு, பாத்திரத்தில் நெய் ஊற்றி பட்டை,பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, அதில்பாஸ்மதி அரிசிதேவையான தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும்.

3. பின்பு மற்றொரு பாத்திரத்தில் ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, தயிர், மட்டன் உப்பு சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

4. இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய், சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் கரம்மசாலாத் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

5. பின்பு, மட்டன் கலவையை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

6. இத்துடன் வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா, குங்குமப்பூ, முந்திரி தூவி மூடவும். அடுப்பில் ஒரு பெரிய தோசைக்கல்லை வைத்து தீயை முற்றிலும் குறைத்து, அதன் மேல் பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும்.

7. இப்போது சூடான, டேஸ்ட்டாக ஹைதராபாத் பிரியாணி ரெடி!!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close