Advertisment

பெரிய நடிகர் படத்துல சான்ஸ்.. அட்ஜஸ்ட் பண்ண சொன்னாங்க.. 'செந்தூரப் பூவே' ஸ்ரீநிதி!

இந்த சீரியலுக்கு எதிர்பார்த்த அளவு டிஆர்பி ரேட்டிங் கிடைக்கவில்லை. இதனால் இந்த இந்த சீரியல் எந்த முடிவும் இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
srinithi

I am also face casting couch problem said serial actress srinithi

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'செந்தூரப் பூவே' சீரியல் மூலம் பிரபலமானவர் இளம் நடிகை ஸ்ரீநிதி. 22 வயதான ஸ்ரீநிதி, அந்த சீரியலில் ரோஜாவாக நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

Advertisment

பாண்டவர் பூமி, பீஷ்மர், நேசம் புதுசு போன்ற படங்களில் நடித்து திரையுலகில் முத்திரை பதித்த நடிகர் ரஞ்சித் செந்தூர பூவே சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இது மரியாதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்த துரைசிங்கம் பற்றிய கதை. அவருக்கு கயல் மற்றும் கனி என இரண்டு அழகான சிறிய மகள்கள் இருந்தனர். மனைவி அருணா இறந்த பிறகு, துரைசிங்கம் மறுமணம் பற்றி யோசிக்காமல் இருந்தார்.

சூழ்நிலைகள் மாறும்போது, ​​துரைசிங்கம், வயது வித்தியாசம் இருந்தபோதிலும், அவரது மகளின் பள்ளி ஆசிரியை ரோஜாவை திருமணம் செய்து கொள்கிறார். அவர்கள் பழக முயற்சிப்பதும், திருமணத்திற்குப் பிறகு அவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.

பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பான போது, இந்த சீரியல் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பிக்பாஸ் முடிந்த பிறகு, மீண்டும் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால் இந்த சீரியலுக்கு எதிர்பார்த்த அளவு டிஆர்பி ரேட்டிங் கிடைக்கவில்லை. இதனால் இந்த இந்த சீரியல் எந்த முடிவும் இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டது.

இதில் நடித்த ஸ்ரீநிதி சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அதில் தனது படங்கள், ரீல்ஸ், போட்டோஷூட் என அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

இந்நிலையில் ஸ்ரீநிதி ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமா துறையில் காஸ்டிங் கவுச் அச்சுறுத்தலை தானும் அனுபவித்ததாக தெரிவித்துள்ளார்.

அது பெரிய நடிகர், பெரிய பட்ஜெட் படம். என்னை ஆடிஷனுக்கு கூப்பிட்டாங்க. நானும், என் அம்மாவும் போயிருந்தோம். அப்போ எல்லாமே நீங்க அட்ஜஸ்ட் பண்ணனும் சொன்னாங்க. அப்போ அம்மா இருந்தாங்க. அட்ஜஸ்ட் தானே, நம்மெல்லாம் பயங்கரமா அட்ஜஸ்ட் பண்ணுவோம். டீ வேணாம். சாப்பாடுனாலும் அட்ஜஸ்ட் பண்ணுவோம் சொன்னோம்.. அப்போ அவங்க இல்ல, அந்த அட்ஜஸ்ட் கிடையாது. நாங்க அட்ஜஸ்மெண்ட் பத்தி பேசுறோம். எனக்கு புரியல. அப்புறம் என் அம்மாதான் அவங்க கேட்க வரத புரிஞ்சுட்டு, மன்னிச்சுடுங்க. நாங்க நல்ல குடும்பத்துல இருந்து வர்றோம் சொன்னாங்க. அப்போ அவங்க பொண்ணு இல்லன்னா கூட பரவாயில்லை. அம்மா வந்தா கூட ஓகே தான் சொல்லுவாங்க. அந்த சம்பவத்துக்கு பிறகு அப்படிப்பட்டவர்களை கையாள்வதில் கவனமாக இருப்பதாக ஸ்ரீநிதி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment