முதலில் நான் மனிதனாக இருக்க விரும்புகிறேன்..சிபிஎஸ்இ தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியின் மிரள வைத்த பதில்!

பாஸ் அயிடுவோமா? நல்ல மதிப்பெண்கள் வருமா? குறைந்த மதிப்பெண்கள் வந்தால் என்ன செய்வது?

சிபிஎஸ் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கும் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாணவி ஸ்ரீலட்சுமி வருங்கால லட்சியம் என்ற கேள்விக்கு மிரள வைக்கும் பதிலை கூறி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களை பார்த்தால் தெரியும் அவர்களின் மனதில் எவ்வளவு கேள்விகள் ஓடிக் கொண்டிருக்கும் என்று. பாஸ் ஆயிடுவோமா? நல்ல மதிப்பெண்கள் வருமா? குறைந்த மதிப்பெண்கள் வந்தால் என்ன செய்வது? கட் அவுட் மார்க் குறைந்தால் கேட்ட குரூப் கிடைக்குமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகளை மனதில் சுமந்துக் கொண்டே ஒவ்வொரு நாளையும் கடப்பார்கள்.

தேர்வு முடிவுக்கு முந்தைய நாட்கள் சில மாணவர்கள் தூங்கவே மாட்டார்கள். இதை அனுபவித்தவர்களும் உண்டு. நேரில் பார்த்தவர்கள் உண்டு. அதே போல் நன்றாக படித்த மாணவர்கள் மாநிலத்தில் முதலிடம் வந்து விட்டால் மறுநாள் காலை எல்லா ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக மாறிவிடுவார்கள். செய்தியாளர்கள் வழக்கம் போல் அவர்களிடம் வருங்காலத்தில் என்னவாக ஆசை? என்று கேட்பாளர்கள். மாணவர்கள் அவர்களின் விருப்பத்தை தெரிவிப்பார்கள்.

சி.பி.எஸ்.இ 10- வகுப்பு சென்னை 2 ஆவது இடம்

இதே கேள்வி தான், நடந்து முடிந்த சிபிஎஸ் 10 வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்ற கேரள மாணவி ஸ்ரீலட்சுமிடமும் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அளித்த பதில் “எனக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. யார் வேண்டுமானலும் மருத்துவர் ஆகலாம். ஆனால் எல்லோராலையும் நல்ல மனிதராக முடியாது. முதலில் நான் நல்ல மனிதராக இருக்கவே ஆசைப்படுகிறேன்” என்று கூறி அனைவரின் கைத்தட்டலையும் பெற்றுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close