கலர்ஸ் தமிழ் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் சீரியல் இதயத்தை திருடாதே. பிப்ரவரி 14, 2020 அன்று ஒளிபரப்பான இந்த சீரியல், சமீபத்தில் 1000 எபிசோட்களைக் கடந்தது. இதயத்தை திருடாதேயில் ஹிமா, பிந்து நவின் குமார், ஆல்யா, மௌனிகா தேவி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இதில், சகானா’வாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் ஹிமா பிந்து.
ஹிமா பிந்து, சமீபத்தில் தனது அழகு பராமரிப்பு குறித்து ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்; காலை, நைட்-னு ஷூட்டிங் போறதால டார்கிள் சர்கிள்ஸ் வந்தது. அப்போ டீ பேக்ஸ், வெள்ளரி, கீரிம் எல்லாம் டிரை பண்ணேன். ஆனா, எதுவும் வேலை செய்யல. டார்கிள் சர்கிள்ஸ் போகணுனா நல்ல தூங்கணும். ஆனா, சீரியல்ல இருக்கிறவங்களுக்கு அது ரொம்ப கஷ்டம். ஷூட் முடிஞ்சு நைட் வீட்டுக்கு போகவே ரொம்ப லேட் ஆகும். அப்புறம் மேக்கப் ரிமூவ் பண்ணிட்டு, குளிச்சுட்டு தூங்குறதுக்குள்ள விடிஞ்சுடும்.
அதேமாதிரி மேக்கப் நிறைய யூஸ் பண்றதலா, முகப்பரு வரும். அப்போ, சந்தனம், பெட்நோவேட் கிரீம் வைக்கலாம். ஐஸ் கியூப்ஸ் பெஸ்ட். ஆனா, நீங்க என்ன பண்ணாலும் பரு உடனே போகாது. ஒரு 2-3 நாள் ஆகும்.
எனக்கு காம்பினேஷன் ஸ்கின். பொதுவா என்னோட ஸ்கின் கேர்க்கு மாய்ஸ்சரைசர், ஷியா பட்டர், கற்றாழை ஜெல், ஐஸ் கியூப்ஸ் யூஸ் பண்ணுவேன். ஷூட் இல்லாத டைம்ல, முல்தானி மட்டி, அரிசி மாவு, தயிர் இல்லன்னா ரோஸ் வாட்டர்ல கலந்து ஃபேஸ் பேக் போட்டுப்பேன்.
நிறைய பேரு அழகா இருக்கனும்னு பார்லர் போவாங்க. அதுதான் பெரிய பிரச்சனை. அது பிஸினஸ். பார்லர் போனா, இன்ஸ்டண்ட் லுக் உடனே கிடைக்கும். ஆனா அது ஹெல்தி இல்ல. எல்லாமே கெமிக்கல்ஸ் தான். முக்கியமா முடிக்கு தான் சொல்லனும். நான் கலரிங் பண்ணிட்டு, ஹேர் ஸ்ட்ரைட், ப்ளோ டிரை அது, இதுன்னு பண்ணி நல்லா இருந்த முடிய ஃபுல்லா டேமேஜ் பண்ணிட்டேன்.
பொண்ணுங்களுக்கு முடிதான் அழகு. அதை பத்திரமா பாத்துகணும், ஹேர் கலரிங் மட்டும் பண்ணவே பண்ணாதீங்க.
எனக்கு விக்டோரியா சீக்ரெட் பர்ஃப்யூம் ரொம்ப பிடிக்கும். கலோசல் காஜல் தான் யூஸ் பண்றேன். ஹிமாலாயா நீம் ஃபேஸ் வாஷ், ஷீ பட்டர் பாடி லோஷன், கலர்பார், பிஏசி லிப்ஸ்டிக், பிஏசி மாய்ஸ்சரைசர் என்னோட ஃபேவரைட். முடிக்கு, நார்மல் பாராசூட் ஆயில், மொரோக்கன் ஷாம்பூ, வெலா சீரம் யூஸ் பண்றேன். ஆனா, kerastase ஷாம்பூ எனக்கு பிடிக்கும் என ஹிமா பிந்து தனது அழகு பராமரிப்பு குறித்து பேசினார்..
முன்னதாக ஒருமுறை, ஹிமா பிந்து தனது முடி பராமரிப்பு குறித்து அதே ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது, முடிக்கு நெய் வைக்கலாம். நெய் வைக்கும் போது முடி இன்னும் பிரகாசமா மாறும். பொடுகு தொல்லைக்கு, எலுமிச்சையும், தயிரும் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், அது சரியாகி விடும் என பல குறிப்புகளை பகிர்ந்து கொண்டார். அதையும் படிக்க:
முடிக்கு நெய் யூஸ் பண்ணுவேன்.. ஹிமா பிந்து பியூட்டி சீக்ரெட்ஸ்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.