Advertisment

காரசாரமான பொடி இட்லி… 5 நிமிஷத்தில் அசத்தலாக ரெடி!

How to make podi idli in tamil: சுவையான மற்றும் காரசாரமான பொடி இட்லியை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
idli recipe in tamil: How to make podi idli in tamil

Idli recipe in tamil: நம்முடைய உணவு வகைகளில் இட்லி மற்றும் தோசை பிரபலமான காலை உணவாக உள்ளன. இவை இரண்டிலுமே பல வகைகள் இருக்கின்றன. அந்த வகையில் பல்வேறு இட்லி வகைளில் பொடி இட்லியும் ஒன்று. இந்தபொடி இட்லி செய்வதற்கு நிறைய நேரம் நீங்கள் செலவிட தேவையில்லை.

Advertisment

அப்படிப்பட்ட சுவையான மற்றும் காரசாரமான பொடி இட்லியை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இட்லி- 4 அல்லது அதற்கு மேல்

வெங்காயம் -1

கறிவேப்பிலை

இட்லி பொடி - 2 தேக்கரண்டி

காஷ்மீர் சிவப்பு மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி

கடலை பருப்பு- 1 தேக்கரண்டி

கொத்துமல்லி தழை

முந்திரி பருப்பு - 10

கடுகு- 1 தேக்கரண்டி

எலுமிச்சை- 1/4

நெய்

எண்ணெய்

நீங்கள் செய்ய வேண்டியவை

செய்முறை

சூடான வாணலியில், 1 தேக்கரண்டி எண்ணெய், 1 டீஸ்பூன் நெய், 1 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி சனா பருப்பு, 10 முந்திரி பருப்பு சேர்க்கவும். நீங்கள் விரும்பினால் வேர்க்கடலையும் சேர்க்கலாம். அவற்றை நன்றாக வதக்கவும்.

நன்கு வறுத்ததும், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இட்லி பவுடர் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.

வெங்காயம் கோல்டன் பிரவுனுக்கு மாறியதும், 2 தேக்கரண்டி இட்லி பவுடரைச் சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கவும். மேலும் பயன்படுத்தப்படும் இட்லிக்கு ஏற்ப இட்லி பொடியை அதிகரிக்கவும். இந்த தருணத்தில் அடுப்பை மிதமான தணலில் வைக்ககும்.

1/2 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் சேர்க்கவும், இது பொடி இட்லியின் அமைப்பையும் சுவையையும் மேம்படுத்தும். காஷ்மீரி தூளைச் சேர்ப்பது குழந்தைகளுக்கு அதிக மசாலா சுவை சேர்க்காது.

இந்த கலவையுடன் இட்லிகளை நன்றாக கலக்கவும், இட்லிகளின் அனைத்து பக்கங்களும் முழுமையாக ஒட்ட வேண்டும். நெய், வெங்காயம் மற்றும் இட்லி பவுடர் ஆகியவற்றின் நறுமணம் ஒன்றாக இருக்கும்.

வெங்காயத்தை பொன்னிறமாகப் பெற நன்கு வறுத்தெடுக்க வேண்டும். 1/4 எலுமிச்சை சாறு நீங்கள் விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.

இதை நன்றாக கலந்து, இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவினால் சுவையான பொடி இட்லி தயாராக இருக்கும். உங்கள் குழந்தைகளின் சுவைக்கு ஏற்ப நீங்கள் அதை காய்கறிகளுடன் சேர்த்து கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment