இரவு சாப்பிடும் முன்பு இதைச் செய்யுங்க… சிம்பிளான இம்யூனிட்டி சூப்!

homemade immune booster turmeric soup in tamil: மஞ்சள் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற மருத்துவ மதிப்புக்காக பொக்கிஷ பண்புகளைக் கொண்டுள்ளது.

immunity booster drink in tamil: nutritionist-approved raw turmeric soup in tamil

immunity booster drink in tamil: நம்முடை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் முக்கியத்துவத்தை கொரோனா தொற்று நம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளது என்றால் நிச்சயம் மிகையாகாது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது நோயை உண்டாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிரான உடலின் முதல் இயற்கை பாதுகாப்பு ஆகும். வலுவான நோய் எதிர்ப்பு சக்தி நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது.

இந்த நேரத்தில், நம்மில் பலர் நமது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடற்திறனை அதிகரிக்க பல்வேறு விஷயங்களை முயற்சிக்கும்போது, ​​நாங்களும் எங்களுடைய இணைய பக்கத்தில் அன்றாட சில நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளை பரிந்துரை செய்து வருகிறோம்.

அந்தவகையில் இன்று சுலபமாக தயாரிக்கக்கூடிய மற்றும் சுவையாக இருக்கும் சூப் ஒன்றின் எளிமையான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம். இந்த அற்புதமான மஞ்சள் கலந்த சூப்பை ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கணேரிவால் பரிந்துரை செய்துள்ளார்.

மஞ்சள் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற மருத்துவ மதிப்புக்காக பொக்கிஷ பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், நீங்கள் சமீபத்தில் தடுப்பூசி போட்டிருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சூப்பை நிச்சயம் சாப்பிடலாம் என்கிறார் முன்முன் கணேரிவால்.

மஞ்சள் சூப் செய்யத் தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி – நெய்
1 – வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
1 தேக்கரண்டி – பூண்டு (பொடியாக நறுக்கியது)
2 அங்குல துண்டு-மஞ்சள் (அரைத்தது)
1.5 தேக்கரண்டி – இஞ்சி, (அரைத்தது)
3 – கேரட், (பொடியாக நறுக்கியது)
4 கப் – வெஜிடபிள் ஸ்டாக்
1 – எலுமிச்சை துண்டு

செய்முறை:-

*ஒரு கடாயை எடுத்து சிறிது நெய்யை சூடாக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

*அரைத்த பூண்டு, புதிதாக அரைத்த பச்சை மஞ்சள் (கச்சி ஹால்டி), இஞ்சி போன்வற்றை அவற்றுடன் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

*பின்னர் கேரட் சேர்த்து மீண்டும் வதக்கவும். அடுத்து, வெஜிடபிள் ஸ்டாக் சேர்த்து 20 நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க விடவும்.

*ஒரு பிளெண்டரின் உதவியுடன் அல்லது ஒரு கரண்டியின் பின்புறத்தை பயன்படுத்தி சூப் நன்கு கொதிக்கிறதா என்று சோதிக்கவும்.

*அவை நன்கு தயாரானதும் அவற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறி சுவைக்கவும்.

இந்த சுவை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சூப்பை மாலையில் (மாலை 4-5 மணியளவில்) சாப்பிடவும். அல்லது இரவு உணவிற்கு முன் உணவாகவும் சாப்பிடலாம் என முன்முன் கணேரிவால் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Immunity booster drink in tamil nutritionist approved raw turmeric soup in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com