Advertisment

இம்யூனிட்டிக்கு எளிய ரெசிபி… குக்கரில் சாதம் இப்படி செய்யுங்க!

Immune boosting foods in tamil: நோயில் இருந்து விரைவில் மீண்டு வர போதுமான ஊட்டச்சத்து மற்றும் சராசரி ஓய்வு அவசியமான ஒன்று என வல்லுநர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

author-image
WebDesk
New Update
immunity rich foods Tamil News: Ayurvedic recipes to build strength, immunity

immunity rich foods in Tamil: நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை கொரோனா தொற்று அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. இது போன்ற தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க சரியான மருந்துகள் மற்றும் முக்கிய மருந்துகளின் தொடர்ச்சியான கண்காணிப்புடன், வைட்டமின்கள், புரதங்கள், தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். மேலும், இவை நமது உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

Advertisment

இருப்பினும், ஒருவருக்கு காய்ச்சல், உடல் வலி, வாசனை மற்றும் சுவை இழப்பு ஏற்படும் போது பசியை உணராமல் இருப்பது பொதுவானது. ஆனால், நோயில் இருந்து விரைவில் மீள போதுமான ஊட்டச்சத்து மற்றும் ஓய்வு எடுப்பது அவசியம் என வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இப்படி நாம் ஓய்வு எடுக்கும் காலங்களில் நமது உடலுக்கு தேவையான சத்தான உணவுகளை தேர்வு செய்து எடுத்துக்rகொள்ள வேண்டும் என ஆயுர்வேத பயிற்சியாளர் டாக்டர் அபர்ணா பத்மநாபன் தனது இன்ஸ்டா கூறியுள்ளார். மேலும், அவர் சில குறிப்புகளையும் வழங்கியுள்ளார்.

நீங்கள் முயற்சிக்கக்கூடிய சில ஆயுர்வேதத்தால் ஈர்க்கப்பட்ட கொரோனா பராமரிப்பு சமையல் குறிப்புகள் இங்கே:-

சமையல் குறிப்பு:1

தேவையான பொருட்கள்

50 கிராம் - அரிசி

800 மிலி - தண்ணீர்

உப்பு

1 தேக்கரண்டி - சீரக தூள்

2 சிட்டிகை - உலர்ந்த இஞ்சி தூள்

செய் முறை

மேலே வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு குக்கரிலோ அல்லது பாத்திரத்திலோ இட்டு சமைத்து ருசிக்கவும்.

சமையல் குறிப்பு :2

தேவையான பொருட்கள்

30 கிராம் - அரிசி - சாதம்

20 கிராம் - பாசிப்பருப்பு (800 மில்லி கிராம் தண்ணீரில் வேகவைத்தது)

உப்பு

2 சிட்டிகை - உலர்ந்த இஞ்சி தூள்

1 தேக்கரண்டி - கொத்தமல்லி தூள்

2 சிட்டிகை - மிளகு தூள்

நெய், கடுகு மற்றும் அஸ்பெடிடாவுடன் தாளிக்கவும்

செய்முறை

முதலில் தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து, பின்னர் அவற்றுடன் பருப்பு சேர்த்து பிறகு சாதம் சேர்த்து சமைக்கவும்.

சமையல் குறிப்பு: 3

தேவையான பொருட்கள்

50 கிராம் - வறுத்த மற்றும் கரடுமுரடான தூள் கோதுமை மற்றும் பார்லி

800 மிலி - தண்ணீர்

ஓமம்

இஞ்சி

உப்பு மற்றும் சாதத்தை சேர்க்கவும்

சீரகம்

1 தேக்கரண்டி - நெய்

செய் முறை

அரிசி, தண்ணீர் மற்றும் மசாலாப் பொருட்களை சமைக்கவும்.

சமையல் குறிப்பு: 4

தேவையான பொருட்கள்

20 கிராம் - பொரித்த அரிசி

300 மிலி - தண்ணீர்

மாறுபாடு 1 - கல் சர்க்கரை,

1 தேக்கரண்டி - சீரக தூள்

ஏலக்காய் பொடி சிட்டிகை

செய் முறை

தண்ணீர் மற்றும் மசாலாப் பொருட்களுடன் பிரஷர் சமைக்கவும்.

spices, immunity booster, covid-19, ayurveda, indian express lifestyle

மாறுபாடு 2

உப்பு

2 சிட்டிகை - சீரக தூள்

2 சிட்டிகை - இஞ்சி தூள்

செய் முறை

அரிசி, தண்ணீர் மற்றும் மசாலாப் பொருட்களை சமைக்கவும்.

சமையல் குறிப்பு 5: பச்சைப்பயிறு சூப் அல்லது சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்

பச்சைப்பயிறு அல்லது கோழி

மசாலா

செய்முறை

பச்சைப்பயிறை தண்ணீரில் ஊற வைக்கவும். அல்லது கோழியை தண்ணீரில் சமைக்கவும். உப்பு, கருப்பு மிளகு, உலர்ந்த இஞ்சி தூள், இலவங்கப்பட்டை மற்றும் பட்டை இலைகளைப் போடவும்.

covid care

சமையல் குறிப்பு 6 - சூடான எலுமிச்சை/ஆரஞ்சு சாறு

தேவையான பொருட்கள்

1 கப் - சூடான நீர்

எலுமிச்சை துண்டு

சளி, இருமல் மற்றும் தொண்டை புண் போது சளியை அகற்ற ஒரு சிட்டிகை உப்பு

செய்முறை

பொருட்களை ஒன்றாக கலக்கவும்

தேவையான பொருட்கள்

1 கப் - சூடான நீர்

அரை ஆரஞ்சு

உப்பு

மிளகு

செய்முறை

பொருட்களை ஒன்றாக கலக்க்கி ருசிக்கவும்

நீங்கள் பராமரிப்பாளராக இருந்தால், விரைவாக குணமடைய இந்த எளிய சமையல் குறிப்புகளை முயற்சிக்கவும்.

Lifestyle Healthy Life Tamil Lifestyle Update Healthy Food Tamil News 2 Tamil Health Tips Boost Immunity Immunity
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment