Advertisment

கரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா? தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
importance and uses of sugarcane juice - கரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா? தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க!!

importance and uses of sugarcane juice - கரும்பு சாற்றின் மகத்துவம் தெரியுமா? தெரிந்தால் இனி சும்மா இருக்க மாட்டீங்க!!

அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன் மூலமாகவே நீங்கள் அந்த பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முழுமையான சக்தியை பெறலாம்... இனிப்பு சுவையில் கரும்பை மிஞ்ச வேறு எந்த ஒரு பொருளாலும் முடியாது.

Advertisment

இது தொற்று நோய்களை குணப்படுத்த உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இரும்பு, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் நிறைந்திருக்கும், எனவே இது நீரிழப்புக்கு நல்லது. இது பொதுவான சளி மற்றும் பல தொற்று நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

நீங்கள் மிகவும் தாகமாக இருந்தால் கரும்பு சாறு அருந்தும் போது அது உங்களுக்கு புத்துயிர் அளித்து உங்கள் மன நிலையை புதுப்பிக்கிறது.

சிறுநீரக தொற்றுகள் சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டை உறுதி செய்வதற்கு உதவுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய்த் தண்ணீரில் கலந்த கரும்பு சாறு எடுத்துக் கொள்ளுங்கள். உடலில் இருந்து நச்சுக்களை நீக்குகிறது கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்குவதால் படிப்படியாக உங்கள் உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

செரிமான பிரச்சனைக்கு நீங்கள் செரிமான துயரத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், ஆரோக்கியமான மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கைக்கு நீங்கள் தினமும் கரும்பு சாறு உட்கொள்ள வேண்டும். கரும்பு சாற்றில் உள்ள பொட்டாசியம் உங்கள் வயிற்றின் அளவுகளை சமன்செய்ய உதவுகிறது, மற்றும் செரிமான சாறுகள் சுரக்கவும் உதவுகிறது.

வாய் துர்நாற்றம் மற்றும் பல் சிதைவு வாய் துர்நாற்றம் இருப்பது சமூகத்தில் நம்மை தாழ்த்தி விடுகிறது. உங்களுக்கு வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் பட்சத்தில், நீங்கள் கரும்பு சாற்றை ஒரு தீர்வு தரும் பானமாக கருதி கொள்ள வேண்டும். கரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமங்களை கொண்டிருக்கிறது, இது உங்கள் பற்களின் பற்சிப்பியை உருவாக்க உதவுகிறது. மேலும் இது பற்சிதைவை தடுத்து உங்கள் பற்கள் வலுவடைய உதவுகிறது.

பற்களுக்கு வலிமை சிலருக்கு பற்கள் வலிமை இழந்து காணப்படும். பற்களின் ஈறுகள் மிகுந்த சேதமடைந்து இருக்கும். இவர்கள் கரும்பு சாப்பிடுவதால் பற்கள், ஈறுகளுக்கு வலிமை அளிக்கிறது. உடலில் உள்ள நீர்ச்சத்தை குறையாமல் தடுக்கிறது.

Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment