கிராம்பை சாப்பிடுவதால் நமது உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கிறது 100 கிராம் கிராம்பில் உள்ள சத்துகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
கலோரிகள் – 286
4.76 கிராம் புரத சத்து
14.29 கிராம் கொழுப்பு சத்து
66.67 கிராம் கார்போஹைட்ரேட்
33.3 கிராம் நார்சத்து
476 மில்லி கிராம் கால்சியம்
8.57 மில்லி கிராம் இரும்பு சத்து
190 மில்லி கிராம் மெக்னீஷியம்
1000 மில்லி கிராம் பொட்டாஷியம்
286 மில்லி கிராம் சோடியம் உள்ளது
தொற்றுகளில் இருந்து தப்பிக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி நோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும். மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
வாய்வழி ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க கிராம்பு உதவுகிறது. இதில் உள்ள பண்புகள் பேக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டது. வாயில் ஏற்படும் பிளேக், ஈறு வளர்ச்சி மற்றும் பிற ஈறு நோய்களின் தீவிரத்தை குறைக்கவும் இது உதவுகிறது. ஈறு நோய்கள் ஏற்பட காரணமாக இருக்கும் நான்கு வகையான பாக்டீரியாக்களில் வளர்ச்சியைத் தடுக்க கிராம்பு உதவுகிறது.
இதில் உள்ள பையோ ஆக்டிவ் கலவை கல்லீரலில் ஏற்படும் காயங்களை சரி செய்ய உதவுகிறது. இதில் யூஜெனால் இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. இந்த கலவை குளுக்கோஸ் மற்றும் பீட்டா செல்கள் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
செரிமான பிரச்சனைகளுக்கு கிராம்பு தீர்வாக இருக்கும். செரிமானமாகும் என்சைமை கிராம்பு தூண்டி செரிமான முறையை வேகப்படுத்துகிறது. வாயுத் தொல்லை, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
கிராம்பில் உள்ள எத்தில் அசிட்டேட் சாறு கட்டிகளை ஏற்படாமல் பார்த்துகொள்கிறது. மேலும் புற்றுநோய் சிகிச்சையில் இது கூடதலாக உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதில் மூச்சுக்குழாயில் அலர்ஜி, ஆஸ்துமா, சளி மற்றும் இரும்பல் போன்ற சுவாச சுகாதார பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாசக் குழாயில் ஏற்படும் வீக்கம் எளிதில் குறைய உதவுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“