Advertisment

வீட்டில் இருந்து அலுவலக வேலைகளைப் பார்க்க இடம் தயாரா?

கவனச்சிதறல்கள் மற்றும் உண்மையான வேலை இடம் ஆகியவற்றுக்கு இடையே போதுமான வேறுபாட்டின் தன்மையை நீங்கள் உணர்ந்திருந்தால் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையைப் பார்ப்பது என்பது, பெரிதும் சிறந்ததாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
increase productivity work from home, wfh coronavirus, coronavirus pandemic wfh, indian express

increase productivity work from home, wfh coronavirus, coronavirus pandemic wfh, indian express

கவனச்சிதறல்கள் மற்றும் உண்மையான வேலை இடம் ஆகியவற்றுக்கு இடையே போதுமான வேறுபாட்டின் தன்மையை நீங்கள் உணர்ந்திருந்தால் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையைப் பார்ப்பது என்பது, பெரிதும் சிறந்ததாக இருக்கும்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு அலுவலகங்கள், பள்ளிகள், ஜிம் உள்ளிட்ட பொது இடங்கள், பூங்காக்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் பலனாக, பல இடங்களில் பணியாற்றும் நபர்கள், வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருக்க வீட்டில் இருந்தபடியே அலுவலகப் பணிகளை கவனிக்கத் தொடங்கி இருக்கின்றனர். அலுவலகத்தில் இருந்து தூரமாக ஒரு இடத்தில் இருந்து பணியாற்றும்விருப்பம் என்பது பெரும் சுமையை தணிப்பதாக இருக்கிறது. உண்மையில் வீட்டில் இருந்து பணியாற்றுவது என்பதை கடினமானதாக பலர் உணர்கின்றனர். ஏனெனில் வீட்டு சூழலில் பணியாற்றுவது என்பது தொழில்முறை செயல்பாடுகளான மீட்டிங்குகள், கான்ஃபரன்ஸ் அழைப்புகள் மேற்கொள்வது ஆகியவற்றுக்கு ஏற்றதாக இருக்காது என்று அவர்கள் நினைக்கின்றனர்.

கவனச்சிதறல்கள் மற்றும் உண்மையான வேலை இடம் ஆகியவற்றுக்கு இடையே போதுமான வேறுபாட்டின் தன்மையை நீங்கள் உணர்ந்திருந்தால் வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையைப் பார்ப்பது என்பது, பெரிதும் சிறந்ததாக இருக்கும். வசதிக்குறைபாடு, காரணமாக முக்கியமான வேலைகளைத் தவற விடுதல், தொந்தரவுகள் என்பது நீங்கள்விரும்பும் கடைசி விஷயமாக இருக்கும். இதற்கு பதில், உங்கள் வீட்டிலேயே ஒரு அலுவலகம் என்பது, நீங்கள் விரும்பிய எல்லா வசதிகளையும் கொண்ட உணர்வை எதிரொலிப்பதாக இருக்கும்,” என்கிறார் மும்பையில் உள்ள இன்டீரியர் டிசைன் நிறுவனமான ஹிப்கோச் துணை நிறுவனரான பங்கஜ் போததார்.

வீட்டில் இருந்து வேலை பார்ப்பதற்கான, உங்கள் இடத்தை சரியானபடி உருவாக்கி கொள்வதற்கான ஒரு சில டிப்ஸ்களை கீழே அவர் குறிப்பிடுகிறார்.

சரியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள்

எங்கே உட்கார்ந்து நீங்கள் பணியாற்ற விரும்புகிறீர்கள் என்று நீங்கள் தேர்ந்தெடுப்பது என்பதுதான் வீட்டில் அலுவலகம் என்பதில் உள்ள பல்வேறு பயன்களில் ஒன்றாகும். உங்கள் தினத்தில் பெரும்பாலான நேரத்தை செலவிடபோகும் அந்த இடத்துக்கு வந்தபிறகு, உங்களுக்குள் நீங்கள் சிரமத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

“உங்களுடைய விருந்தினர் அறை அல்லது வாழும் அறையையோ நீங்கள் உபயோகிப்பது சிறந்தாக இருக்கும். தேவைப்படும் பட்சத்தில், அது பெரும்பாலும் காலியாக இருக்கட்டும். வேலை பார்க்கும்போது உங்களுக்கு தனிமை இருக்கும்பட்சத்தில் வேலை சிறப்பாக இருக்கும்,” என்கிறார் போததார். அறை முழுவதும் சாத்தியமானதாக இல்லை என்றால் வீட்டில் அமைதியாக இருக்கும் ஒரு மூலையைத் தேர்ந்தெடுங்கள், நீங்கள் இரவு நீண்டநேரம் பணியாற்றக் கூடியவராக இருந்தால், சாப்பாடு மேஜை கூட சாத்தியமான யோசனையாக இருக்கும்.

உங்களுக்குத் தேவையான ஏற்ற ஃபர்னிச்சர்களை தேர்வு செய்யவும்.

உங்கள் நோக்கத்துக்கு ஏற்ப செயலாற்றும் ஃபர்னிச்சரை தேர்வு செய்யுங்கள். ஒரு நல்ல இருக்கை வேண்டும் என்பதில் சமரசம்செய்து கொள்ளாதீர்கள். ஒரு தின அலுவல்களை புண்பட்ட மன உணர்வுடன் முடிக்காமல் இருக்க, நன்றாக வடிவமைக்கப்பட்ட பணிச்சூழலுக்கு ஏற்ற நல்ல நாற்காலியை தேர்வு செய்யும் போது, உங்களின் சில விருப்பங்களை வெளிப்படுத்துங்கள்.

துணைபொருட்கள் உங்கள் பார்வையை சிறந்த தாக்குகின்றன

வேலை என்பது வேடிக்கையாக இருக்கூடாது என்று யார் சொன்னது. உங்கள் வீட்டு அலுலகம் உங்கள் உணர்வுகளை விரிவடைய செய்யும் வகையிலான துணை பொருட்களை நீங்கள் தேர்ந்தெடுங்கள். காஃபி மக், வித்தியாசமான குறிப்பேடுகள், ஒட்டும் துண்டு சீட்டுகள் ஆகியவை நல்ல யோசனையாக, வேலை செய்யும்போது வசதியாக இருக்கும். “உண்மையில், நீங்கள் பணியாற்றும்போது நீங்கள் சிறப்பாக உணர முடியும். குறிப்பாக, உங்கள் வீட்டு அலுவலகத்தை வடிவமைக்கும் முன்னுரியை நீங்கள் கொண்டிருந்தால், உங்கள் செயல் திறனை அது அதிகரிக்கும். உங்களை சோம்பலாக மாற்றாது,” என்கிறார் போததார். வீட்டில் இருப்பது போன்ற சூழலை உருவாக்குதல், உங்கள் பணியில் பரிச்சயமான உணர்வை வழங்கும். உங்கள் செயல்திறனை அதிகரிக்கும்.

உங்களை ஈர்க்கும் குறிப்புகள், உங்களை பாதுகாக்கும்.

“வீட்டில் இருந்து பணியாற்றுவது, உங்களைக் கொஞ்சம் சோம்பேறியாக்கும். நீங்கள் சோம்பலோடு இருக்கா விட்டால், நாள் முழுவதும் உங்களை இயக்குவதற்கான செய்ய வேண்டிய வேலைப் பட்டியலை தயார் செய்து கொள்ளுங்கள். இது உங்கள் செயல் திறனை முன்னெடுப்பதில் உதவும். தினசரி செய்ய வேண்டிய லிஸ்ட்டில், சில உத்வேகம் தரும் மேற்கோள்களை உங்கள் மேஜைக்கு மேலே சிறு குறிப்புகளாக ஒட்டி வைக்கவும் அல்லது பின் போர்டு ஒன்றை உபயோகிக்கலாம்” என்கிறார் போததார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment