Advertisment

உலகில் அதிக நேரம் உழைக்கக் கூடியவர்கள் இந்தியர்கள் தான் - அறிக்கை வெளியிட்ட சர்வதேச அமைப்பு

71 % மக்கள் தங்களின் வேலையானது தங்களின் சொந்த வாழ்வினை பாதிக்கும் வகையில் இருப்பதாக வருத்தம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அதிகம் உழைக்கும் இந்தியர்கள், Hard working indians, International study on work space

அதிகம் உழைக்கும் இந்தியர்கள்

அதிகம் உழைக்கும் இந்தியர்கள் : உழைப்பு ஒரு மனிதனின் வாழ்வில் பெரும்பங்கினையும் அதிக நேரத்தினையும் எடுத்துக் கொள்கிறது. சமுதாயம், குடும்பம், நண்பர்கள் என அனைத்து சூழலிலும் சொல்லிக் கொள்ளும்படியான வேலைக்கு செல்வது என்பது மதிப்பைத் தருவதாகவே நாம் உணர்கிறோம்.

Advertisment

அதிகம் உழைக்கும் இந்தியர்கள் - சர்வதேச கருத்துக் கணிப்பு

சர்வதேச அளவில் இந்தியர்கள் தான் கடுமையான உழைப்பாளிகளாக இருக்கிறார்கள் என ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது. க்ரோனோஸ் இன்கார்ப்பரேட்டட் என்ற சர்வதேச வொர்க்ஃபோர்ஸ் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்று இந்த ஆய்வினை மேற்கொண்டு அதன் முடிவினை கூறியிருக்கிறது.

ஐந்து நாட்களுக்கு வேலைக்கு செல்ல விரும்பும் மக்களின் சதவீதம்

இந்தியாவில் இருக்கும் 69% முழு நேர ஊழியர்கள் / தொழிலாளர்கள் வாரம் முழுமைக்கும் அல்லது குறைந்த பட்சம் 5 நாட்களிற்காவது வேலை பார்க்க விரும்புகிறார்கள்.

இந்தியாவைத் தொடர்ந்து 43% மெக்சிக்கோவாசிகள் ஒரு வாரத்திற்கு 5 நாட்கள் வேலைக்கு செல்ல விரும்புகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து அமெரிக்கா 27%, ஆஸ்திரேலியா 19% மற்றும் ஃபிரான்ஸ் 17% என ஐந்து நாட்கள் வேலைக்கு செல்ல இருப்பவர்களுக்கான சதவீதத்தையும் நாட்டினையும் பட்டியலிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

நான்கு நாட்களுக்கு மட்டும் வேலைக்கு செல்ல விரும்பும் மக்கள்

சர்வதேச அரங்கில் வேலைக்குச் செல்பவர்களில் 34% பேர் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலைக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். 20% பேர் மூன்று நாட்களுக்கு மட்டுமே வேலைக்கு போக விரும்புகிறார்கள். 20% பேர் வாரத்தில் ஒரு நாளுக்கும் குறைவாக வேலைக்குப் போவதையே விரும்புகிறார்கள்.

வாரத்தில் 40 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்பவர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்திருக்கிறார்கள் அமெரிக்காவினர். அவர்களைத் தொடர்ந்து இந்தியர்களும், ஜெர்மனியர்களும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர். 71 % மக்கள் தங்களின் வேலையானது தங்களின் சொந்த வாழ்வினை பாதிக்கும் வகையில் இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment