Advertisment

International Yoga Day 2018 : மாதவிடாய் பிரச்சனையை விரட்டும் யோகா!

Yoga Day 2018: பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையில் துவங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரச்னையாக உருவாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
International Yoga Day:Saudi Arabia now declares yoga as sports

பெண்களைப் பொறுத்தவரை மாதம் தோறும் நடக்கும் சகஜமான ஒரு நிகழ்வுதான் மாதவிடாய் சுழற்சி. பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல பிரச்னைகளை சமாளிக்க வேண்டியுள்ளது. இளம் பெண்கள் தொடங்கி வேலைக்கு செல்லும் பெண்கள் வரை அனைவரையும் தாக்கக் கூடிய ஒரு பிரசனை என்னவென்றால் அது முறையற்ற மாதவிடாய் பிரச்ச்னை.

Advertisment

ஒழுங்கற்ற உதிரப்போக்கு, அதிக உதிரப்போக்கு அந்த நேரங்களில் மட்டும் கடுமையான இடுப்புவலி மற்றும் வயிற்றுவலி என அனைத்திற்கும் ஒரே மருந்தாக இருப்பது தான் யோகா பயிற்சி.

பெண்களின் உடல்ரீதியான பெரும்பாலான பிரச்னைகளுக்கு ஹார்மோன்களே முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோட்டோசோன் போன்றவை சரியான நிலையில் வேலை செய்யவில்லை என்றால் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னையில் துவங்கி தொடர்ச்சியாக ஒவ்வொரு பிரச்னையாக உருவாகும். கீழே குறிப்பிட்டுள்ள சில யோகாக்களை மட்டும் தினமும் செய்து பாருங்கள்.. பின்பு பயனை அடைவீர்கள்.

பரத்வாஜாசனம்:

இதைச் செய்வதால் உடலில் உள்ள செரிமான உள் உறுப்புகள் அதன் வேலையினை சரியான முறையில் செய்யத் துவங்கும். வயிற்றில் உள்ள அழுக்குகள் வெளியேறும். அதிக ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும். அட்ரீனல் சுரப்பியை வேலை செய்ய வைக்கும். வயிறு தொடர்பான அனைத்து பிரச்னைக்கும் இந்த ஆசனம் ஏற்றது.

அதோமுக சுவானாசனம்

பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் மாதவிடாய் நிற்கும் நிலையில் வியர்க்கும். தூக்கமின்மை, மன அழுத்த பிரச்னை இருக்கும். இது எல்லாவற்றையும் இந்த ஆசனம் சரிசெய்யும்.

பரிவர்த திரிகோணாசனம்

சிறுகுடல், கல்லீரல், கணையம், சிறுநீரகங்கள் போன்ற உள் உறுப்புகளின் வேலையை சமநிலைப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கைகட்டுப்படுத்துகிறது.

International Yoga Day Yoga
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment