செல்லப் பிராணிகள் அளிப்பது மகிழ்ச்சி மட்டும்தானா?

இருதய நோயாளிகளை ஓராண்டுக்குப் பின் மீண்டும் சோதித்ததில் நாய் வளர்ப்பவர்கள், நாய் வளர்க்காதவர்களைவிட நலமுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

ராஜலட்சுமி சிவலிங்கம்

செல்லப் பிராணிகளை வளர்ப்பது என்பது மனிதர்களுக்கு உளவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நன்மை பயக்கக்கூடியது. செல்லப் பிராணிகளால் உடல் நலத்திற்கு நன்மை பயக்குமா என்பது குறித்து அமெரிக்க உடல் நலக் கழகம் (National Institute of Health) ஆய்வு நடத்திய ஆய்வு, நன்மை பயக்கும் என்று தெரிவிக்கிறது. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 421 இருதய நோயாளிகளை ஓராண்டுக்குப் பின் மீண்டும் சோதித்ததில் நாய் வளர்ப்பவர்கள், நாய் வளர்க்காதவர்களைவிட நலமுடன் இருப்பது கண்டறியப்பட்டது.

நாயுடன் நடைப் பயிற்சி

நடுத்தர வயதினரில் நாயுடன் நடைப் பயிற்சிக்குச் செல்பவர்கள் ஒப்பீட்டளவில் உடல் பருமனின்றி நல்ல ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் உள்ளனர். சற்று வயது முதிர்ந்தவர்களைப் பரிசோதித்த இன்னொரு ஆய்வின்படி செல்ல நாயுடன் வழக்கமாக நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் பொதுவாகவே தசை, மூட்டுப் பிடிப்பின்றி இயல்பாக நடமாட முடிகிறது என்பதும் தெரியவந்தது.

இப்படி இவர்கள் வெளியே போவது உடலுக்கும் மனதுக்கும் தெம்பு தரும். நண்பர்கள், தெரிந்தவர்களிடம் மனம் விட்டு பேசவும், நட்புறவை வளர்த்துக்கொள்ளவும் இது வழிகோலுகிறது.

விடுமுறைக் காலப் பிரச்சினைகள்

விடுமுறைகளில் குடும்பத்தாருடன் எங்காவது செல்வது வாடிக்கையான விஷயம். ஆண்டு முழுவதும் இதற்காகவே திட்டமிட்டு சுற்றுலா செல்பவர்களும் உண்டு. ஆனால், வீட்டில் செல்லப் பிராணி வளர்ப்பவர்களுக்கு இது மிகப் பெரிய பிரச்சினை. அவற்றை நம்மோடு அழைத்துச் செல்லவும் முடியாது, வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வேறு நம்பிக்கையான யாரையாவது இதற்காக விட்டுச் செல்லவும் முடியாது. நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. சொந்தக்காரர்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியாவது விட்டுச் செல்வோம். வரும்போது அதற்கு ஏதாவது, நேர்ந்துவிட்டால், நமக்கும் கஷ்டம், உதவி செய்தவர்களையும் ஒன்றும் கேட்க முடியாது.
இதற்குத் தீர்வாக தமிழகத்திலேயே முதன் முறையாகத் தொடங்கப்பட்ட செல்லப் பிராணிகளுக்கான டெய்ல்ஸ் லைஃப் (Tails life) உள்ளிட்ட சில செயலிகள் உள்ளன. இவற்றைப் பாதுகாப்பது, பராமரிப்பது, எப்போது, என்ன தேவை, எந்த உணவு பொருந்தும்? என்ன உணவு பொருந்தாது இப்படி அடுக்கான சந்தேகங்கள், கேள்விகள் உள்ளன. இவை அனைத்திற்கும் மட்டுமல்லாமல், செல்லப் பிராணிகளுக்கான ஒட்டுமொத்த தேவைகளையும் கருத்தில் கொண்டும் இது தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு, “செல்லப் பிராணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் எங்குள்ளன? பிராணிகளுக்கான ஸ்பா எங்கிருக்கிறது? அங்கு என்ன சேவையெல்லாம் கிடைக்கின்றன? விடுப்பில் வெளியூர் செல்லும்போது பிராணிகளை எங்குவிட்டு செல்லலாம்?” இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இந்த செயலியில் பதில் கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சேவை குறித்து ஒரே கிளிக்கில் பட்டியலைப் பார்க்க முடியும். சேவை வழங்குபவர்களிடம் நேரடியாகப் பேசலாம். நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற முடியும்.

எச்சரிக்கையும் அவசியம்

வெளிநாடுகளில் வளர்ப்புப் பிராணிகளுக்குத் தகுந்த பயிற்சியும், நோய்த் தடுப்பு மருந்துகளும் ஊசிகளும் கொடுப்பார்கள். இந்தியாவில் பொதுவாக அப்படி இல்லை. எனவே வளர்ப்புப் பிராணி வைத்திருப்பவர்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இருதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் செல்லப் பிராணி வளர்ப்பது நல்லது.
*

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close