Advertisment

நீரிழிவு நோயாளிகள் தூக்கத்தில் குறட்டை விடுவது ஆபத்தா?

நுரையீரல் நோய் பற்றிய (Pulmonology) ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நீரிழிவு நோயாளிகளுக்கு சீரற்ற தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் அடிக்கடி இணைந்திருக்கும் பொதுவான கோளாறுகள் என்று கூறுகிறது.

author-image
WebDesk
New Update
sleep apnea diabetes, sleep apnea risk factor diabetes, நீரிழிவு நோயாளிகளுக்கு குறட்டை ஆபத்தா, குறட்டை, நீரிழிவு நோய், snoring diabetes, snoring health imapcts, sleep apnea, sleep apnea harms, sleep apnea health, diabetes, health news, Tamil indian express, sleep 101

நுரையீரல் நோய் பற்றிய (Pulmonology) ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நீரிழிவு நோயாளிகளுக்கு சீரற்ற தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் அடிக்கடி இணைந்திருக்கும் பொதுவான கோளாறுகள் என்று கூறுகிறது.

Advertisment

தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீரிழிவு நோய்

வயது மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களால், ஒருவர் லேசான மற்றும் நாள்பட்ட தூக்கக் கோளாறுகளுக்கு ஆளாகிறார். சுவாசம் மீண்டும் மீண்டும் நிறுத்தப்பட்டு தொடங்கும் மிகவும் பொதுவான தீவிரமான கோளாறுகளில் ஒன்று தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகும். தூக்கத்தில் மூச்சுத்திணறலின் சில தெளிவான அறிகுறிகள் சத்தமாக குறட்டை விடுவது, முழு இரவு தூக்கத்திற்குப் பிறகும் சோர்வாக உணர்வது ஆகியவை ஆகும். நிபுணர்களின் கருத்துப்படி, சிகிச்சையளிக்கப்படா விட்டால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் மிகவும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதுபோல, தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளதா? என்றால் நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்!

டாக்டர் சமித் ஏ ஷெட்டி இதை விளக்குகிறார். ஸ்பேர்ஷ் மருத்துவமனையின் நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் சமித் ஏ ஷெட்டி கூறுகையில், “நீரிழிவு மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல் சில பொதுவான ஆபத்தான காரணிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று உடல் பருமன். உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தி மோசமாக்குகிறது - இதுதான் நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணம். ஒரு நீரிழிவு நோயாளிக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருந்தால், உடல் பருமன் பொதுவான ஒரு காரணமாக இருக்கும். இது நீரிழிவு நோய்க்கான ஆபத்தான காரணியாகும்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

“நீரிழிவு நோய்க்கான ஒரு முக்கிய ஆபத்தான காரணி, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மாற்றுகிறது. இன்சுலின் எதிர்ப்பை ஊக்குவிக்கிறது. எனவே, 2வது வகை நீரிழிவு நோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. அது வேகமாகவதில் உடல் பருமன் அதை மிதப்படுத்துகிறது.” என்று டாக்டர் சமித் ஏ ஷெட்டி கூறுகிறார்.

“நாள்பட்ட தூக்கமின்மை இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தக்கூடும், இது நீரிழிவு மற்றும் உயர் இரத்த சர்க்கரை அளவை ஏற்படுத்தக்கூடும். பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் நீண்ட கால தூக்கமின்மையால் பாதிக்கச் செய்யலாம்.” என்று குருகிராம் பாராஸ் மருத்துவமனைகள், உள் மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் சஞ்சய் வர்மா கூறுகிறார்.

மோசமான தூக்கம் மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும் லெப்டின் அளவு குறைதல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பைக் காட்டும் ஆராய்ச்சியை அவர் மேற்கோள் காட்டினார். இந்த இணைப்பை மேலும் சிறப்பித்து டாக்டர் வர்மா கூறினார், “சீரற்ற தூக்கத்தில் மூச்சுத்திணறல் எனப்படும் பரவலான கோளாறு, நீங்கள் தூங்கும்போது மேல் சுவாசப்பாதை உறுதியற்ற தன்மையால் வகைப்படுத்தப்படுகிறது. இதனால் காற்றோட்டம் கணிசமாகக் குறைகிறது அல்லது இல்லாமல் போகிறது. வழக்கமான ஆக்ஸிஜன் குறைபாடு, இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பில் சுழற்சி மாறுபாடுகள் மற்றும் மெதுவான அலை இழப்பு மற்றும் விரைவான கண் அசைவு தூக்கம் போன்ற தூக்கக் கட்டமைப்பில் இடையூறுகள் இந்த அத்தியாயங்களில் அடிக்கடி காணப்படுகின்றன.

“எனவே, தூக்கம் தொடர்பான பல பிரச்சனைகள் 2வது வகை நீரிழிவு நோயின் தொடக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கக்கூடும் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2வது வகை நீரிழிவு நோயின் நிகழ்வு குறுகிய தூக்கம் மற்றும் சர்க்காடியன் ரிதம் அசாதாரணங்களுடன் தொடர்புடையது” என்று டாக்டர் வர்மா கூறுகிறார்.

நுரையீரல் நோய் ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நீரிழிவு நோய் மற்றும் சீரற்ற தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகியவை அடிக்கடி இணைந்திருக்கும் பொதுவான கோளாறுகள் என்று கூறியது.

மாறாக, சில நீரிழிவு நோயாளிகள் தூக்கத்தில் மூச்சுத்திணறலை உருவாக்க முனைகிறார்கள். 4 நீரிழிவு நோயாளிகளில் ஒருவருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையின் உள் மருத்துவக் கூடுதல் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தியாகி கூறினார்.

“நீரிழிவு நோய்க்கு கூடுதலாக, தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்ற நாள்பட்ட சுகாதார நிலைமைகளுக்கும் வழிவகுக்கும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் போன்ற பெரிய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஒரு முழு இரவு தூக்கத்தில் இருந்தாலும், சிகிச்சை அளிக்கப்படாத தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் தூங்கும்போது தொடர்ந்து சுவாசத்தை நிறுத்துகிறது, இதன் விளைவாக சத்தமாக குறட்டை விடுவது மற்றும் பகல்நேரத்தில் சோர்வு ஏற்படுகிறது” என்று டாக்டர் வர்மா கூறினார்.

இது பலவீனம், ஆர்வமின்மை, மனநிலை மாற்றங்கள் மற்றும் எரிச்சல் ஆகியவற்றிற்கும் வழிவகுக்கும். “ஒருவர் இரவில் தூங்கும்போது, ​​​​உறுப்புகள் ஓய்வில் வைக்கப்பட வேண்டும். பெரும்பாலான உறுப்புகள் இரவில் தானாகவே செயல்படாது. அவர்கள் ஓய்வு எடுக்க வேண்டும். எனவே, குறைந்த செயல்பாட்டு திறன்களில் வேலை செய்ய வேண்டும். எனவே, இரவில் குறட்டை விடும்போது உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் போய்விடும். குறட்டை விடாதவர்களுக்கு இது நடக்காது. ஒரு நபர் குறட்டை விடும்போது, ​​நுரையீரல் மற்றும் இதயம் மீண்டும் துடிக்க வேண்டும். அவை காலையில் எவ்வாறு செயல்படுகின்றனவோ அது போல் செயல்பட வேண்டும். அதாவது அவர்கள் ஓய்வெடுக்கும் கட்டத்தில் வேலை செய்யத் தொடங்குகிறார்கள். உடல் சிறிது நேரம் ஈடுசெய்ய முயற்சிக்கிறது. பின்னர் கைவிடுகிறது” என்று டாக்டர் ஷெட்டி விளக்கினார்.

என்ன செய்ய வேண்டும்?

தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது நீரிழிவு நோய் மற்றும் பிற நாள்பட்ட உடல்நலக் கவலைகளுக்கு ஒரு முக்கிய ஆபத்தான காரணியாக இருப்பதால், நிபுணர்கள் பரிந்துரைக்கும் இந்த நடவடிக்கைகளைப் பின்பற்றுங்கள்.

  • பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள்.
  • நிலைமையை மிக விரைவில் கண்டறியுங்கள்.
  • நீரிழிவு நோயாளி உடல் பருமனாக இருந்தால், அவர்களிடம் குறட்டை விடுகிறார்களா என்று கேட்கலாம்.

தவிர்க்க வேண்டிய விஷயங்களை டாக்டர் வர்மா பரிந்துரைத்துள்ளார்:

  • மதியம் மற்றும் மாலையில் காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். காபியால் உடல் 8 மணி நேரம் வரை பாதிக்கப்படலாம்.
  • மாலையில் மது அருந்துதல் தவிர்க்கப்பட வேண்டும். மாலையில் மது அருந்துவது தூக்க சுவாசத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது விழித்தெழுந்த பின் தூக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
  • இரவில் அதிகம் சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். தாமதமாக சாப்பிடுவது ஒரே இரவில் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து அஜீரணத்தை உருவாக்கும்.
  • பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். உறங்கும் நேரம் வரும்போது, ​​அது உங்களை சோர்வடையச் செய்யும்.
  • நிகோடின் முழுவதுமாக தவிர்க்க வேண்டும். அது காபி போல செயல்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Healthy Life Diabetes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment