Advertisment

கோபத்தினால் அன்று கொலையாளியானவர்.. இன்று கிட்னியை தானமாக தந்து ஒரு குடும்பத்தை வாழ வைக்கிறார்!

சிறைவாசம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை கைதி என்பது தெரிய வந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கேரளா சுகுமாரன்

கேரளா சுகுமாரன்

கேரளாவில் சொத்துத் தகராறில் கொலையாளியாக ஜெயிலுக்கு சென்றவர், இன்று தனது நண்பனின் குடும்பத்திற்கு கிட்டினியை தானமாக வழங்கி அனைவரின் நெஞ்சங்களிலும் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளார்.

Advertisment

கேரள சுகுமாரன்:

கேரளாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு, `லிம்கா' சாதனை அனைவராலும் பேசப்பட்ட ஒன்று. ஆர்ய மகரிஷி என்ற ஆன்மீகவாதியும், அவரது மனைவியும் ஒரே நேரத்தில் தங்களது கிட்னிகளை தானமாக தந்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்.

இந்த சம்பவம் சிறையில் மரண தண்டனை கைதியாக இருக்கும் சுகுமாரின் எண்ணத்தையே மாற்றியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஜெயிலுக்கு இருந்தப்படி இந்த சம்பவத்தை செய்தித் தாளில் வாசித்த சுகுமாரன் தாமுன் இதுப்போல் செய்து எதாவது ஒரு குடும்பத்தை வாழ வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். கடைசியில் சுகுமாரின் நண்பர் குடும்பத்திற்கே இந்த வாய்ப்பு கிடைத்தது. அவரின் நண்பரின் தங்கை பெண்ணான 19 வயது பிரான்சிக்கு சுகுமாரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.

சொத்து தகராறில் சொந்த்த சித்தப்பாவை கொன்ற குற்றத்திற்காக சுகுமாரன கேரள ஜெயிலில் அடைக்கப்பட்டார்.ஒரு நிமிட கோபத்தினால் அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் மாறியது. மனைவி, மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த சுகுமாரன் இன்று சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக வாழ்ந்து வருகிறார். இத்தனை துன்பத்திலும் அவர் செய்த இந்த செயல் இன்று அவரை ஊரே வியந்து பேசும் அளவிற்கு மாற்றியுள்ளது.

சிறை வாழ்க்கையை தனக்கான தண்டனை என புரிந்துக் கொண்ட சுகுமாரன் தினமும் சிறையில் உள்ள நூலகத்திற்கு செல்வது, செய்தித்தாள்களை படிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அப்போது தான் லிம்கா சாதனை குறித்து செய்தித்தாளில் படித்து தானுக் சிறுநீரக தானம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அதற்காக சுகுமாரன் எடுத்த முதல் முயற்சி 2015 ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்தபோது பாலக்காட்டில் உள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று `யாருக்காவது சிறுநீரகம் தேவை உள்ளதா?' என்று கேட்டறிந்தார்.அவரின் செயலைக்கண்டு திகைத்த மருத்துவர்கள் உடனே சுகுமாரிடம் விசாரித்தனர். அப்போது தான் அவர் சிறைவாசம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை கைதி என்பது தெரிய வந்தது.

இதைக் கேட்டு அதிர்ச்சிஅடைந்த மருத்துவர்கள் உடனடியாக பின் வாங்கினர். காரணம், சிறைக்கைதிகள் உடல் உறுப்பு தானம் செய்ய, சட்டத்தில் இடமில்லை. சுகுமாரனை மருத்துவர்கள் திருப்பி அனுப்பினர். இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத சுகுமாரன் மனமுடைந்தார். `சிறைக்கைதி என்ற ஒரே காரணத்துக்காக உடல் உறுப்பு தானம் செய்வதைத் தடுப்பது எந்தவிதத்தில் நியாயம்? என்று தனக்குள்ளே கேள்வி கேட்காமல், அந்த கேள்வியை அப்போதைய முதலமைச்சராக இருந்த உம்மன்சாண்டியிடம் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

சுகுமாரனின் நன்னடத்தை பற்றி விசாரித்த முதல்வர், `சுகுமாரன் தன் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே சிறுநீரகம் தானம் செய்யலாம்’ என்று ஆணையிட்டார். அதன் பின்பு, நெட்டுபல்தேரி என்ற இடத்தில் உள்ள திறந்தவெளிச் சிறைக்கு மாற்றப்பட்ட சுகுமாரன் தனது ஆசையை பற்றி அங்கிருந்த சிறை கைதிகளிடம் பகிர்ந்தார்.

இதைக் கேட்டு கண்கலங்கிய மற்ற சிறைக் கைதிகள் 6 பேரும் சீறுநீரகம் தானம் செய்ய முன்வந்தனர். இவர்கள் தங்களது ஆசையை கேரள சிறைத்துறை டி.ஐ.ஜி ஸ்ரீலேகாவிடமும் கூறியிருந்தனர். இதைக் கேட்டு பூரிப்படைந்த ஸ்ரீலேகா கேரள முதலமைச்சரின் பார்வைக்கு ஸ்பெஷல் கடிதம் ஒன்றை எழுதினார். அப்போது கேரளாவில் ஆட்சி மாறி பினராயி விஜயன் முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.

கடந்த மே மாதத்தில் கேரளச் சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, `சிறைக்கைதிகள் விரும்பினால், யாருக்கு வேண்டுமானாலும் உடல் உறுப்பு தானம் செய்யலாம்' என்று விதி மாற்றப்பட்டது. இந்த செய்தியைக் கேட்டு சந்தோஷம் அடைந்த சுகுமாரன் பிரான்ஸின் என்ற 19 வயது பெண்ணிற்கு தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி கேரளாவிலேயே சிறுநீரகம் தானமாக வழங்கிய முதல் கைதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு சுகுமாரனின் ஆசையும் நிறைவேறியது. மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ள சுகுமாரன் மன நிம்மதி அடைந்து விட்டதாக மற்ற கைதிகளிடம் கூறி பூரித்து வருகிறார். அடுத்த முறை பரோல் கிடைத்தால் பிரான்ஸியை நேர்ல் சென்று பார்க்கவும் திட்டமிட்டுள்ளார்.

சுகுமாரன் கொலை செய்து சிறை சென்ற காரணக்த்தினால் அவரது மனைவி மற்றும் மகள் அவரை பிரிந்து விட்டு சென்றனர். பிரான்ஸியை சுகுமார் தற்போது தனது மகளாக பார்த்து வருகிறார்.

Kerala State
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment