Job Loss How to overcome Mental illness Tamil News : தொற்றுநோய் பலரின் வேலைகளை இழக்கச் செய்துள்ளது. இதனால் அவர்களுடைய நிதிப் பாதுகாப்பு மிகவும் பாதித்துள்ளது. ஒருவர் வேலையை இழந்தால், அவர்கள் பணம் மட்டுமல்ல கவலை, மனநிலை மாற்றங்கள், நம்பிக்கையற்ற உணர்வுகள் போன்ற மன ரீதியான பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். இதனால் ஒருவர் வேலையை மட்டும் இழப்பதில்லை, தன்னம்பிக்கையையும் இழக்கிறார்.
ஒருவர் தன்னுடைய வேலையை இழந்துவிட்டால், இனி என்ன செய்யப் போகிறோம் என்கிற எண்ணங்கள் அவருடைய மனதில் அடுக்கடுக்காக தோன்றும். திடீரென்று, நம்மிடம் இருந்த நம்பிக்கை அனைத்தும் மறைந்துவிடும். கடந்த கால தோல்விகள் அனைத்தும் மீண்டும் உங்களை வேட்டையாடவும், உங்களைத் தாழ்த்தவும் செய்யும். கூடுதலாக, நீங்கள் தினமும் பின்பற்றி வந்த வாழ்க்கைமுறை திடீரென்று காற்றில் பறந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்படும்.
அத்தகைய சூழ்நிலையில் ஒரு நபர் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
உங்களுக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்
முதலில் உங்களுக்கு நீங்கள் ஆதரவாக இருங்கள். இதைச் செய்வதை விட சொல்வது எளிதானதுதான். ஆனால், வேலை இழப்புக்கு உங்களை நீங்களே குற்றம் சொல்லிக்கொள்ளாதீர்கள். உங்களைச் சுற்றிப் பார்த்து, நாம் அனைவரும் தற்போது அசாதாரண சூழ்நிலைகளுக்கு நடுவில் இருக்கிறோம் என்பதை உணருங்கள்.
நம் வாழ்க்கையின் பெரும்பகுதி உண்மையில் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். தளர்வான மணலைப் பிடித்துக் கொள்வதில் ஒருவர் எவ்வளவு முயற்சி செய்கிறாரோ, அவ்வளவு வேகமாக அது நழுவிச் செல்லும். கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் தீர்வுகளைக் கொண்டு வருவதற்கு ஆற்றலைச் சிறப்பாகப் பயன்படுத்துங்கள். நம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிட்டுவிடாதீர்கள்.
நீங்கள் உங்களுடைய மிகப்பெரிய சொத்து
நிதி அழுத்தம் உண்மையானது என்பதை ஏற்றுக்கொண்டு, நீங்கள் மீண்டும் சம்பாதிக்கும் காலத்திற்குத் திரும்பும் வரை வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று உங்களை தயார்ப்படுத்துவதற்கான உண்மையான திட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். தயாரிப்பும் திட்டமிடலும் எப்போதும் நம்பிக்கையை அதிகரிக்கும். உங்களுடன் அதிகம் பேசுங்கள். இந்த ஒரு வித்தியாசமான கண்ணோட்டம் நிச்சயம் உதவியாக இருக்கும்.
நீங்கள் சாதித்த அனைத்தையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்
எதிர்மறையான சார்பு எப்போதும் வலுவாக இருக்கும். அதனால்தான் நம்முடைய தோல்விகள் நமது சாதனைகளை மறைக்க முனைகின்றன. நீங்கள் உண்மையிலேயே யார் என்பதை நீங்களே நினைவுபடுத்துவதற்கான நேரம் இது. உங்கள் பாசிட்டிவான விஷயங்களை அவ்வப்போது நினைத்துப் பாருங்கள். இது போன்ற நேரங்களில் ஊக்கமளிப்பது பொதுவானது என்பது புரிந்துகொள்ளத்தக்கது. உங்களைப் பற்றி நேர்மறையான விஷயங்களைச் சொல்வதன் மூலம் உங்கள் பின்னடைவை நீங்கள் தகர்த்துக்கொள்ள முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, என்ன நடந்தாலும், வேலை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கை அல்ல. உங்கள் வேலையை இழப்பது என்பது வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக அர்த்தமல்ல.
நீங்கள் தினமும் சந்திக்கக்கூடிய இலக்குகளை உருவாக்குங்கள்
வருந்தவும் உங்கள் உணர்வுகளை உணரவும் உங்களை நீங்கள் அனுமதிக்கவேண்டும். ஆனால், நீங்கள் செயல்பாட்டிற்குத் திரும்புவதற்கு ஒரு தேதியை அமைத்து, மீண்டும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கத் தொடங்குங்கள். எந்தக் காரணத்திற்காகவும் உங்கள் வேகத்தை இழந்துவிடாதீர்கள். வாழ்க்கையில் தடங்கல்கள் வருவது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை ஆழமாக நம்புங்கள். எனவே, நம்பிக்கையையும், முயற்சியையும் விட்டுவிடாதீர்கள். நிச்சயம் ஒருநாள் எல்லாமே மாறும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil