நினைவுகளை சேமிக்க வைக்கும் பயணங்கள்

பயணங்கள் நம்ம உற்சாகப்படுத்தும். நினைவுகளை சேமித்து வைக்கும் சாகச பயணங்கள் செய்வது அவசியம். அதற்கு எங்கு யாரை தொடர்பு கொள்லாம் என்பதை விவரிக்கிறது, கட்டுரை.

ஹேமா ராக்கேஷ்

“வாழ்க்கையில் பொருட்களை சேமிக்காதீர்கள்… நினைவுகளை சேமியுங்கள்.. பயணங்களால் மட்டுமே இவை சாத்தியம் ஆகும்”

வாழ்க்கையில் எல்லோருக்குமே பயணம் மேற்கொள்வது பிடித்தமான ஒன்று தான். ஆனால் நம்முடைய பெரும்பாலான பயணங்கள் கோவில், பார்க், விலங்குகள் சரணாலயம், போன்றவற்றை ஓட்டியே தான் அமைந்திருக்கும். மலைவசஸ்தளங்களுக்கு சென்றாலும் ஒரு விடுதிக்குள் தங்கி காலை முதல் மாலை வரை ஊர் சுற்றி விட்டு ஷாப்பிங் முடித்து தூங்குவதை தான் வழக்கமாகவே வைத்திருப்போம். இது தான் பயணம் என்கிற எண்ணத்தை மாற்றி இயற்கையை அதன் போக்கிலே போய் ரசித்தால் எப்படி இருக்கும் ?

travel

நடுக்காட்டில் டெண்ட் அமைத்து தங்கும் வசதி

பரந்து விரிந்த மலைத்தொடர்கள், எங்கு நோக்கினாலும் பச்சை பசேலென்று தேயிலை தோட்டங்கள், முகத்தை தழுவிச்செல்லும் ஜில்லென்ற காற்று, காலுக்கு கீழே சரிந்த பள்ளத்தாக்கு, கையில் சூடான தேனீர், தங்குவதற்கு சிறிய டெண்ட், துணைக்கு நண்பர்கள் இவையெல்லாம் இணைந்த பகல் மற்றும் இரவு பொழுது வாய்த்தால் எப்படி இருக்கும்? இந்த பரவச அனுபவத்தை நமக்கு தருகிறது TENT N TREK குழு.

இந்த குழுவின் நிறுவனர் மனோஜ் சூரியா. இளம் வயதில் எதையாவது சாதிக்க வேண்டூம என்று நினைக்கும் துடிப்பான இளைஞர். எம்பி ஏ முடித்து ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் வாங்கி கொண்டு இருந்தவர். பயணங்கள் மீது தீராக காதல் கொண்டவர். பல புத்தகங்கள் கொடுக்கும் அனுபவத்தை ஒரு சில பயணங்கள் கொடுத்துவிடும் என்ற கூற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். சாப்ட்வேர் வேலை ஒரு கட்டத்தில் சலிப்பை கொடுக்க சிந்தனை வெறு தளத்திற்கு சென்றிருக்கிறது. இன்றைய வாழ்க்கை சூழலில் பலரும் வேலை, சம்பளம் என இலக்கில்லாமல் பலர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மனதை புத்துணர்ச்சி ஆக்க பயணம் மேற்கொள்ள வேண்டூம என்ற எண்ணம் பலர் மனதில் இருந்தாலும் அதற்கான ஒருங்கிணைப்பு சாத்தியம் இல்லாததால் பலருக்கு இயற்கை மற்றும் அட்வென்சரஸ் பயணம் கனவாகவே இருக்கிறது. இதை நாம் ஏன் சாத்தியம் ஆக்ககூடாது என்ற நினைப்பில் மனோஜ் சூர்யா தொடங்கியது தான் TENT N TREK நிறுவனம்.

travel - hema rakesh

நள்ளிரவில் சென்னையில் சைக்கிள் பயணம்

தொடங்கிய ஒரு வருடத்திற்குள் 100 க்கும் மேற்பட்ட பயணங்களை ஒருங்கிணைத்திருக்கிறது TENT N TREK நிறுவனம். ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி,மூணாறு போன்ற மலைவாசஸ்தளங்களில், தேயிலை தோட்டங்களுக்கு நடுவே டெண்ட் அமைத்து தங்கி,கேம்ப் பயர் நடத்தி இயற்கைக்கு பங்கம் விளைவிக்காமல் உற்சாகமாக பயணத்தை மேற்கொள்கிறது இந்த குழு. இந்த பயணங்களில் சூற்று சூழலுக்கு கேடுவிளைவிக்கும் ப்ளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் மது அருந்தவும் அனுமதி இல்லை..

மலைக்காடுகளில் டெண்ட் அடித்து, இயற்கையோடு இயற்கையாக , அதன் அழகை ரசித்து செல்லும் இந்த டெரெக்கிங் பயணங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருப்பதாக சொல்கிறார் மனோஜ். இவருடைய இந்த புதுமையான முயற்சிக்கு பக்கபலமாக இருப்பவர் இவருடைய தந்தை ராமநாதன். தன் மகன் , கிடைத்த வேலைக்கு செல்லாமல், பிடித்த வேலையை செய்வேன் என்று கூறியதும் சற்றும தயங்காமல், தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் இவர் இன்றைய தந்தைகளின் உதாரணம்.

travel - hema rakesh

நடுக்காட்டில் துப்பாக்கி சுடும் பயிற்சி

சாகச விரும்பிகளுக்கான மலையேற்றம், மலையில் பைக் சவாரி, படகு சவாரி, போன்ற பல சாகச விளையாட்டுக்கள் இவருடைய பயணங்களின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

நண்பர்களுக்கான பயணங்கள்,சாகசங்களை விரும்பும் பெண்களுக்கு தனிப்பயணங்கள் என வெளியூர் பயணங்கள் ஒருபுறம் இருக்க சென்னையில் இருப்பவர்களுக்காக சென்னையின் கடற்கரைச் சாலைகளில் இரவில் நிலவொளியில் சைக்கிள்களில் பயணிக்க TENT N TREK ஏற்பாடு செய்த சைக்கிள் பயணம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

மேலும் கடற்கரைகளில் டெண்ட் அடித்து, பவுர்ணமி நிலவொளியில், மணலில் படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ண வேண்டுமா? அதற்கும் ஏற்பாடு செய்கிறது TENT N TREK . கடற்கரையில் 2 நாட்கள் டெண்ட் அடித்து சைவ, அசைவ உணவுகளுடன், கேம்ப் பயர் நடத்தி மகிழவும் உதவுகிறழ இந்த நிறுவனம். அதோடு கடல் அலையில் SURFING விளையாட்டை கற்றுக் கொள்ளவும் கட்டணத்தோடு பயிற்சியும் வழங்கப்படுகிறது. பேஸ்புக் மூலம் பயண திட்டங்கள் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, பயணம் தொடர்பான அத்தனை கேள்விக்களுக்கும் பதில் தரப்படுகிறது.

தற்போது தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் என தென்னிந்தியாவில் சாகசப் பயணங்களை ஒருங்கிணைத்துவரும் மனோஜ் சூர்யா, விரைவில் வடஇந்தியாவில் உள்ள கலாச்சார இடங்களை பார்க்கும் வண்ணம் பயணங்களை மேற்கொள்ளவும் திட்டங்கள் வைத்திருக்கிறார்.

பயணங்கள் முடிந்து வரும் நண்பர்களின் முகத்தில் உள்ள சந்தோஷமே தன் நிறுவனத்தின் வெற்றி என்று கூறும் மனோஜ் சூர்யா, இப்போது இந்தியா தாண்டி வெளிநாடுகளுக்கு சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close