காஞ்சிபுரம் ஸ்பெஷல் ’இட்லி’ செய்து பார்த்ததுண்டா????

காலையில் டிப்பன் செய்யுற வேளையும் மிச்சம்னு கோவில சுத்தி இருக்குற பெண்கள் சிலர் காலையில் சமைக்கவே மாட்டார்கள் என்றும் கேள்வி பட்டிருக்கேன்.

தென்னிந்தாவின் காலை உணவுகளில் தவறாமல் இடம் பெறும் ஒரு உணவுப் பொருள் என்னவென்றால் அது இட்லி தான். காலை , மாலை, இரவு என மூன்று வேளையும் இட்லி பரிமாறினாலும் சுகம் சுளிக்காமல் கேட்டு வாங்கி சாப்பிடும் ஆட்கள் நம் ஊரில் அதிகம்.

என்னதான் கர்நாடகா காரன், இட்லிய கண்டுப்பிடிச்சாலும், வெள்ளையாக் இருக்கும் இட்லிக்கு குஷ்பு இட்லி, நமீதா இட்லி, மல்லிகைப் பூ இட்லி, மதுரை இட்லினு வகை வகையா பெயர் வச்சி ரசிச்சது நம்ம ஆளுங்கதான். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும், மாவட்டத்திலும் இட்லியை பல விதமாக சமைப்பார்கள்.ஏன் மருத்துவர்கள் காலை உணவாக குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் பரிந்துரைப்பது இந்த இட்லியை தான்.

சாம்பார் இட்லி, நெய் இட்லி, அந்த இட்லி, இந்த இட்லினுஎவ்வளவோ வகை வகையாக ஓட்டல்களில் பரிமாறினாலும், காஞ்சிபுரம் இட்லியின் சுவைக்கு எதுவும் ஈடாகாது என்பது உண்டவர்களுக்கு மட்டுமே தெரியும். காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் பிரசாதமாக வழங்கும் இந்த இட்லிக்கு அங்குள்ள மக்கள் அடிமை. பகவானின் பிரசாதம் சாப்பிட மாரியும் இருக்கும், காலையில் டிப்பன் செய்யுற வேளையும் மிச்சம்னு கோவில சுத்தி இருக்குற பெண்கள் சிலர் காலையில் சமைக்கவே மாட்டார்கள் என்றும் கேள்வி பட்டிருக்கேன்.

வழக்கமாக இட்லிக்கு அரைக்கிற மாவு புளிச்சி போன நாம் என்ன செய்வோம். தோசை மாவு போல் கரைத்துக் கொள்வோம். அல்லது பணியாரம் செய்வோம். ஆனால், இந்த காஞ்சிபுரம் இட்லியை செய்ய முதலில் மாவை புளிக்க வைக்க வேண்டுமாம். அப்பத்தான் அந்த டேஸ்டே வருமாம். இனியும் தாமதிக்காம  காஞ்சிபுரம் இட்லி எப்படி செய்யலாம்னு பார்க்கலாமா….

காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி:

செய்முறை: 

1.பச்சரிசி- 1 கப்
2. புழுங்கலரிசி -1 கப்
3.உளுத்தம் பருப்பு -1 கப்
4.புளித்த தயிர்- 1 கப்
5.மிளகு -1 ஸ்பூன்
6.சீரகம் -ஸ்பூன்
7.பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன் சிறிதளவு
8.நெய் 2 ஸ்பூன்
9.கறிவேப்பிலை
10.உப்பு

செய்முறை: 

1. முதலில் அரிசியையும், ரவையும் மாவை போல் அரைப்பதற்கு 6 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2.பின்பு, அதில் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து 8 மணி நேரம் புளித்து போக விடவும்.

3.அதன் பின்னர், குவளை போன்ற பாத்திரம் அல்லது அலுமினிய இட்லி தட்டில் வாழை இலையை வைத்து அதன் மேல் நெய்யை தடவ வேண்டும்.

4.பின்பு, மாவில் மிளகு, சீரகம், தயிர், நெய், கறிவேப்பிலை, இஞ்சி, சேர்த்து நன்கு கலந்து தட்டில் ஊற்ற வேண்டும்.

5.பின்பு, பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

6.இப்போது இட்லியை எடுத்து, புதினா சட்னி, தேங்காய் சட்னியுடன் சுடச்சுட பரிமாறினால் போது 5 நிமிடத்தில் எல்லாமே தீர்ந்து விடும்.

குறிப்பு: சாதாரண இட்லியைப் போல ஒருநாளில் கெட்டுப்போகாது. 2 நாள்  வைத்
துச் சாப்பிடலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close