Kangana Ranaut : கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாள் தேசிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வீட்டில் இருந்தபடியே அனைவரும் தங்களுக்குப் பிடித்த விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத்தின் ஃபிட்னஸ் வீடியோ நிச்சயம் உங்களை உடற்பயிற்சி செய்யச் சொல்லித் தூண்டும்.
வீட்டுக்குள் இருந்தால் நோய் தொற்று குறையுமா? எச்சரிக்கை செய்கிறார் WHO இயக்குநர்!
தற்போது மணாலியில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் கங்கனா, உடற்பயிற்சிக்கு மட்டும் இடைவெளி விடவில்லை. தனது உடற்பயிற்சி பயிற்றுநர் சித்தார்த்த சிங் மேற்பார்வையின் கீழ் தான் செய்யும் உடற்பயிற்சி வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் கங்கனா. இந்த ஒர்க்கவுட்டின் பெயர் ’கம்பாட்’ ஒர்க்கவுட்.
கம்பாட் ஒர்க்கவுட்டா?
முழு உடலையும் வலிமைப்படுத்தும் இந்த பயிற்சி, தற்காப்பு கலைகளான கராத்தே, குங்ஃபூ, குத்துச்சண்டை, தை சி, போன்ற பல பயிற்சிகளிலிருந்து இன்ஸ்பயர் ஆனது. இதனை ’போர் வீரரின் பயிற்சி’ என்றும் அழைக்கிறார்கள்.
இந்த பயிற்சி கொழுப்பை எரித்து உடலை டோன் செய்கிறது. அதோடு சரியான வடிவத்திற்கு உடலை மாற்றும். அதுமட்டுமில்லாமல் உடலை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தி தோரணையை மேம்படுத்தும்.
எடையைக் குறைக்க வேண்டும் என்பவர்களுக்கு உகந்தாகவும் கூறப்படுகிறது.
தனது வொர்க் அவுட்டில் கிக்கிங், ஜப்பிங், மற்றும் ஸ்டாப்பிங் போன்ற மூவ்மெண்டுகளை செய்கிறார் கங்கனா. இத்தகைய நகர்வுகள், ஒழுங்குபடுத்தப்பட்ட வேகத்தில், தீவிரமாக மீண்டும் மீண்டும் செய்யப்படும்போது, வழக்கமான அடிப்படையில் பயன்படுத்தப்படாத தசைகள் வேலை செய்கின்றன. இந்த முழு உடல் ஒர்க் அவுட், மேல் மற்றும் கீழ் மூட்டுகளை வலிமைப்படுத்துகிறது.
கொரோனா தொற்று : வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”