Advertisment

இனி கீரையை இப்படி செய்ங்க: குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க!

கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இளமை தோற்றத்துடன் இருக்கலாம்.

author-image
WebDesk
New Update
Keerai Masiyal in Tamil, Keerai Masiyal Video

Keerai Masiyal in Tamil, Keerai Masiyal Video

Keerai Masiyal in Tamil:  கீரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் நம்மை நெருங்காது. எல்லாவித கீரையிலும் மருத்துவ குணங்கள் உள்ளது. கீரையில் லுட்டின் மற்றும் சீக்சாக்தைன் என்னும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் இளமை தோற்றத்துடன் இருக்கலாம். இப்படி, ஆரோக்கியத்திலும், அழகிலும் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ள கீரை மசியல் எப்படி செய்வதென பார்ப்போம்.

Advertisment

வெறும் 59 நிமிடத்தில் உங்கள் வாழ்க்கையே மாற்றும் எஸ்பிஐ… லோன் தொகை ரூ10 லட்சம்!

தேவையானபொருள்கள்

அரைக்கீரை - 4 கப்

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - 3

பூண்டுப் பல் - 3

தக்காளி - 1 (சிறியது)

தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

கீரையை சுத்தம் செய்து கழுவி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோலுரித்து சிறிதாக நறுக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் கீரை, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும்.

கீரையில் தண்ணீர் சத்து இருப்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவை இல்லை.  தேவைப்பட்டால் சிறிதளவு சேர்க்கலாம். 2 நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். ஆறிய பின் மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கீரையோடு சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கீரை மசியல் தயார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Food Recipes Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment