Advertisment

இட்லி, தோசை ”போர்” அடிக்குதா? சுவையான ரவா கிச்சடி ஒரு நாள் ட்ரை பண்ணி பாருங்க

Rava Khichadi making in tamil: சுவையான மற்றும் ஹோட்டல் ஸ்டைல் ரவா கிச்சடி எப்படி செய்வது என்று இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Khichdi recipe in tamil: Hotel style rava khichadi in tamil

 Khichdi recipe in tamil: தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை பிரபலமான உணவுகளாக உள்ளன. இருப்பினும், எப்போதும் இட்லி, தோசை என சாப்பிட்டு சில நேரங்களில் நமக்கே போர் அடிக்கும். இதற்கு தீர்வு தரும் சிறந்த காலை உணவு தேர்வாக 'ரவா கிச்சடி' உள்ளது.

Advertisment

ரவா கிச்சடியை நாம் பெருபாலும் நமது வீடுகளில் செய்வதை தவிர்க்கவே செய்வோம். ஏனென்றால் இதை தயார் செய்ய கூடுதலாக நாம் நேரம் செலவிட வேண்டும். கூடவே கொஞ்சம் பொறுமை வேண்டும். சில சமயங்களில் நாம் செய்யும் தயார் செய்த கிச்சடி சில நிமிடங்களிலேயே கல் போன்று ஆகி விடும். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும், சுவையான மற்றும் ஹோட்டல் ஸ்டைல் ரவா கிச்சடி எப்படி செய்வது என்றும் இங்கு காண்போம்.

தேவையான பொருட்கள்

கடலை எண்ணெய் - சிறிய கப்

பச்சை மிளகாய்

உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன்

முந்திரி பருப்பு

கருவேப்பிலை

இஞ்சி - 2 1/2 ஸ்பூன்

வெங்காயம் - 1 பெரியது

தக்காளி - 2

சர்க்கரை - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ரவை - 1 கப் பெரியது

2 கப் சுடு தண்ணீர்

கரம் மசாலா - 1 துளி அளவு

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் ஒரு கனமான கடாய் எடுத்து அதில் கப்பில் உள்ள பாதியளவு எண்ணெயை ஊற்றி சூடேற்றவும். அடுப்பை மிதமான தணலில் வைத்து, தாளிக்க தேவையான உளுந்தம் பருப்பு, முந்திரி பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கவும். அவற்றை நன்கு வதக்கி கொள்ளவும். முக்கியமாக கருகாமல் வதக்கவும்.

அதன் பிறகு ரவையை இவற்றோடு சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும். இந்த சமயத்தில் பச்சை பட்டாணி, உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம் (நீங்கள் விரும்பினால்) ரவையை நன்கு வறுத்த பிறகு அதில் தண்ணீர் சேர்க்க எந்த கப்பில் நீங்கள் ரவை எடுத்தீர்களோ அதே கப்பில் 2 கப் சுடு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.

அவற்றை ரவையோடு சேர்த்து நன்கு கிளறிய பிறகு, அதில் மீதமுள்ள எண்ணெயில் பாதியளவும், கரம் மசாலா துளியளவும் சேர்த்து கிளறவும். அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவி, ஒரு மூடியால் முடி சரியாக 2 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

2 நிமிடங்களுக்கு பிறகு மூடியை திறந்து அவற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும். இறுதியாக கப்பில் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து மீண்டும் கிளறவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த ராவா கிச்சடி தயாராக இருக்கும். இதில் எண்ணெய் அதிகம் விரும்பாதவர்கள் 1/3 அளவில் சேர்த்துக்கொள்ளலாம்.

publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Lifestyle Food Recipes Healthy Life Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Healthy Food Healthy Breakfast Recipe Healthy Food Kitchen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment