Advertisment

கிசான் அட்டை இவங்களுக்கும் உண்டு: செக்யூரிட்டி இல்லாமல் 4% வட்டியில் ரூ3 லட்சம் கடன்

Pashu Kisan Credit Card apply online: ரூபாய் 3 லட்சம் வரை கடன் பெறலாம். மேலும் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடனுக்கு எந்தவித இணை பாதுகாப்பும் (collateral security) தேவையில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pm kisan, kisan welfare schema, instalment, beneficiary, farmers, coronavirus impact

Kisan Credit Card, How to Apply for Pashu Kisan Credit Card, Pashu Kisan Credit Card Eligibility, கிசான் கடன் அட்டை, பாசு கிஸான் கடன் அட்டை, கிசான் கடன் அட்டை

Kisan News In Tamil: Pashu கிஸான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பவர் எந்த அடமானமும் இல்லாமல் எந்த வங்கியிலிருந்தும் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான தொகையை பெறலாம். இந்த அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடன் வழங்கப்படும்.

Advertisment

ல்நடை வளர்ப்பு என்பது விவசாயிகளுக்கு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும் இது அதிக லாபத்தை அளிக்கும். இந்த நெருக்கடி காலகட்டத்தில் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு சிறிது நிவாரணத்தை அளிக்கும்.

Pashu Kisan Credit Card apply online- கிசான் கடன் அட்டை ஆன்லைன் விண்ணப்பம்

இருப்பினும், பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்காக விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்திலும் ஈடுபட்டுள்ளனர். கால்நடை வளர்ப்பு தொழிலை மேம்படுத்துவதற்காக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் தங்களது வணிகத்தை அதிகரிக்க துவங்கப்பட்டது தான் Pashu கிஸான் கடன் அட்டை திட்டம்.

மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

பல்வேறு நோய்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக கால்நடைகள் இறப்பதால் விவசாயிகளுக்கு பண இழப்பு ஏற்படுகிறது. இந்த சிக்கலைக் கருத்தில் கொண்டு விவசாயிகளும், மத்திய மற்றும் மாநில அரசும் விலங்குகளை காப்பீடு செய்ய கால்நடை காப்பீட்டுத் திட்டத்தையும் பசு கிசான் கடன் அட்டையையும் நடத்தி வருகின்றனர்.

Pashu கிஸான் கடன் அட்டை கால்நடை விவசாயிகளுக்கு எவ்வாறு உதவ முடியும்.

Pashu கிஸான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கால்நடை வளர்ப்பவர் எந்த அடமானமும் இல்லாமல் எந்த வங்கியிலிருந்தும் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான தொகையை பெறலாம். இந்த அட்டைக்கு ஆண்டுக்கு 7 சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் வங்கி கடன் வழங்கப்படும். கடன் தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால் 3 சதவிகித வட்டி விகித மானியத்தை (அதிகப்பட்ச கடன் வரம்பு ரூபாய் 3 லட்சம்) இந்திய அரசு வழங்கும். அவ்வாறு ஆண்டுக்கு 4 சதவிகிதம் என்ற குறைந்த வட்டி விகிதத்தில் Pashu கிஸான் கடன் அட்டை வைத்திருப்பவர் ரூபாய் 3 லட்சம் வரை கடன் பெறலாம். மேலும் ரூபாய் 1.60 லட்சம் வரையிலான கடனுக்கு எந்தவித இணை பாதுகாப்பும் (collateral security) தேவையில்லை.

Pashu கிஸான் கடன் அட்டை கடன்களுக்கு அரசு 70 சதவிகித மானியத்தை அளிக்கிறது.

விலங்குகளை காப்பீடு செய்ய மாநில கால்நடை வளர்ப்பவர்களுக்கு காப்பீட்டு தவணைக்கு அரசு மானியம் வழங்கி வருகிறது. அறிக்கைகளின்படி வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள விவசாயிகளுக்கும் 50 சதவிகித மானியத்தையும், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள விவசாயிகளுக்கும், பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவு கால்நடை வளர்ப்பவர்களுக்கும் 70 சதவிகித மானியத்தையும் அரசாங்கத்தால் காப்பீடு செய்யப்பட்ட விலங்கு தவணை முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மீதம் உள்ள தவனை விவசாயிகளால் வழங்கப்பட வேண்டும்.

ஸீரோ பாலன்ஸ்... அதிகபட்ச வரம்பும் இல்லை: எஸ்.பி.ஐ-யில் இந்தத் திட்டம் தெரியுமா?

Pashu கிஸான் கடன் அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இந்த கடனுக்கு கால்நடை வளர்ப்பவர்கள் கால்நடை வளர்ப்புத் துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். கடன் விண்ணப்பம், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் ஆகியவை விண்ணப்ப படிவத்தோடு வழங்கப்பட வேண்டும். கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், கால்நடை உரிமையாளர்களுக்கு இரண்டு எருமைமாடுகளை வாங்க கடன் வழங்கப்படும். எருமை மாடு, பசு மாடு மற்றும் ஆடு போன்றவற்றை வாங்க இந்த திட்டம் தனி கடன் வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment