லாக் டவுன்… உங்க ஃப்ரிட்ஜில் இருக்க வேண்டிய 10 உணவுப் பொருட்கள் இவை!

10 Best Foods to Keep in Your Fridge in this pandemic time Tamil News: எலுமிச்சைகள் நமக்கு பல ஆரயோக்கிய நன்மைகளை அள்ளித் தருகின்றன. எனவே உங்கள் ஃபிரிட்ஜில் இவற்றுக்கு என தனி இடம் ஒதுக்குவது மிகவும் நல்லது.

Kitchen hacks in tamil: 10 Foods To be kept In Your Refrigerator

Fridge Essentials foods in tamil: இந்தியா முழுதும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அச்சம் நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தருணத்தில் நமக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை சேமிப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். நாம் முந்தைய லாக்டவுன் காலகட்டத்தில் இவற்றை கடைபிடித்திருப்போம். மேலும், நமக்கு இவை அவசியமாக தேவைப்படும் என நினைத்து பல உணவுப் பொருட்களை வாங்கி ஃப்ரிட்ஜில் (குளிர்சாதனப்பெட்டி) குவித்தும் வைத்திருப்போம்.

அப்படி நாம் அனைத்து பொருட்களையும் வாங்கி குவித்து வைத்திருப்பதால் அது அதிக மின்சார பயன்பாட்டுக்கு வழிவகுத்திருக்கும். இதனால் மின்சார கட்டணமும் அதிகரித்திருக்கும். இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும், நம்முடை வீட்டு ஃப்ரிட்ஜில் நாம் அவசிமாக சேமித்து வைக்க வேண்டிய உணவுப்பொருட்கள் எவை என அடையாளம் காணவும் இங்கு சில டிப்ஸ்களை வழங்கியுள்ளோம். அதோடு, நம்முடைய ஃப்ரிட்ஜில் நிச்சயம் சேமித்து வைக்க வேண்டிய 10 உணவுப்பொருட்களையும் இங்கு பட்டியலிட்டுள்ளோம். அவற்றை இப்போது ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.

ஃபிரிட்ஜில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 10 அத்தியாவசியப் பொருட்கள்

1.பால் மற்றும் தயிர் – .Milk And Curd

பால் மற்றும் தயிர் மிக முக்கியமான உணவுப்பொருட்கள் ஆகும். நம்முடைய வீடுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அவசியமாக தேவைப்படும். எனவே, இந்த பால் பொருட்கள் நம்முடை ஃபிரிட்ஜில் இடம் பிடித்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், அவை அதிக நாட்களுக்கு சேமிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்தல் வேண்டும்.

2. பாட்டிலில் அல்லது கேன்னில் அடைக்கப்பட்ட உணவுகள் – Canned Foods

தற்போது சில உணவுகள் ரெடிமேடாக பாட்டிலில் அல்லது கேன்னில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. இவற்றை நாம் அதிக நாட்களுக்கு ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கலாம்.

கேன்களில் அடைக்கப்பட்ட உணவுகளில் ப்யூரிகள், கடல் உணவுகள், பருப்பு வகைகள், சூப்கள், ஸ்டவ்ஸ் போன்றவை முக்கியமானதாக உள்ளது.

3.வெண்ணெய் மற்றும் சாஸ்கள் – Butters And Sauces

வெண்ணெய் மற்றும் சாஸ்கள் நமக்கு பல உணவுகளில் சேர்த்து சமைக்க உதவும். மேலும், பிரட்களிலும் இவற்றை சேர்த்துக்கொள்ளலாம். எனவே, இவையும் ஃபிரிட்ஜில் சேமித்து வைக்கப்படுவதை நினைவில் கொள்ள வேண்டும்.

4.எலுமிச்சை – Lemons

எலுமிச்சைகள் நமக்கு பல ஆரயோக்கிய நன்மைகளை அள்ளித் தருகின்றன. எனவே உங்கள் ஃபிரிட்ஜில் இவற்றுக்கு என தனி இடம் ஒதுக்குவது மிகவும் நல்லது.

இந்த அற்புத சிட்ரஸ் பழம் நம்முடைய உணவு வகைகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

எலுமிச்சை சாறு நீங்கள் நீரிழப்பு அல்லது சோர்வாக உணரும் நாளில் பயனுள்ளதாக இருக்கும். இவை பல்வேறு தோல் பராமரிப்பு நடைமுறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

5.சாறுகள் – Juices

நம்முடைய ஃபிரிட்ஜில், வழக்கமான தண்ணீரைத் தவிர, நீங்கள் சில சுவையான ஜூஸ்களையும் சேமிக்கலாம். இவை, உங்கள் தாகத்தைத் தணிக்ககும் சிறந்த வழியாகவும், உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பவையாகவும் உள்ளன.

6. நட்ஸ் மற்றும் விதைகள் – Nuts And Seeds

நட்ஸ் மற்றும் விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் நாம் அறிந்த ஒன்றுதான். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவராக இருந்தால், ஃபிரிட்ஜில் சில முந்திரி, பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகளை வைத்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

7.உலர்ந்த பழங்கள் – Dried Fruits

திராட்சை, அஞ்சீர், பேரீச்சம்பழம் போன்ற உலர் பழங்களை சேமித்துக்கொள்வது மிகவும் நல்லது. இவற்றை உங்களுடைய மில்க் ஷேக் மற்றும் இனிப்பு வகைகளில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், அப்படி சாப்பிடவும் செய்யலாம்.

8.சீஸ் – Cheese

சீஸ், இன்று மிகவும் அதிகமாக விரும்பப்படும் பொருட்களில் ஒன்றாக மாறிவிட்டது. பீஸ்ஸாக்கள், சாண்ட்விச்கள், ஃபிராங்கிகள், சப்ஜிகள் மற்றும் சிற்றுண்டிகள் சீஸ் முக்கிய இடம் பிடிக்கின்றன.

9.இறைச்சி – Meat

இந்த குளிர் காலத்தில் இறைச்சிகளை முன்னரே சேமிப்பது மிகவும் உதவியாக இருக்கும். இவற்றை ஃப்ரீசரில் சேமித்து வைப்பதை நினைவில் கொள்ளுதல் அவசிமாகும்.

10.முட்டை – Egg

முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அவை பல வழிகளிலும் உட்கொள்ளப்படலாம் மற்றும் ஒருபோதும் வீணாகாது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Kitchen hacks in tamil 10 foods to be kept in your refrigerator

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com