Advertisment

பருப்பு, இட்லி, சாதம் மீந்துவிட்டதா? வேஸ்ட் பண்ணாதீங்க.. டேஸ்டி ரெசிபி இப்படி யூஸ் பண்ணுங்க!

உணவை மீண்டும் சூடுபடுத்தும் இந்த வழிகள் அவற்றை இன்னும் சுவையாக மாற்றும்.

author-image
WebDesk
New Update
Kitchen tips

five amazing leftover food hacks

காலை, மதியம் அல்லது இரவு எப்போது சமைத்த உணவாக இருந்தாலும் சரி. அது மீந்துவிட்டதென்றால், உடனே ஒரு கிண்ணத்தில் மாற்றி, ஃபிரிட்ஜில் நாள்கணக்கில் வைத்து, பிறகு வீணாக தூக்கி எறிவோம்.

Advertisment

கீழே கொடுக்கப்பட்டுள்ள சமையல் குறிப்புகள் மூலம், நீங்கள் எஞ்சியிருக்கும் உணவை வீணாக்குவதை நிறுத்தலாம். பருப்பு மற்றும் சாதம் முதல், இட்லி மற்றும் சப்பாத்தி வரை, உணவை மீண்டும் சூடுபடுத்தும் இந்த வழிகள் அவற்றை இன்னும் சுவையாக மாற்றும்.

பருப்பு

publive-image

ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, ஒரு சிட்டிகை காயம்,  ¼ தேக்கரண்டி சீரகம், ½ பச்சை மிளகாய் மற்றும் ¼ தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் சேர்க்கவும். இது நன்றாக பொரிந்ததும் இதில், மீதமுள்ள பருப்பை சேர்க்கவும். பருப்பு வாசனையை உறிஞ்சுவதற்கு’ உடனே மூடியை மூடவும். பருப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும். உங்கள் பருப்பு இப்போது பரிமாற தயாராக உள்ளது.

சாதம்

publive-image

கொஞ்சம் சாதம் மிச்சம் இருக்கு, ஆனால் வெறுமையான சாதத்தை சாப்பிட விரும்பவில்லையா? இந்த முறையில் மீதமுள்ள சாதத்தை பயன்படுத்தி ஒரு முழு உணவைச் செய்யுங்கள். கிளாசிக் தென்னிந்திய பாணியில், தயிர் சாதம் செய்ய சாதாரண சாதத்தை பயன்படுத்தலாம்.

1 கப் மீதமுள்ள சாதத்தை எடுத்து ஓரமாக வைக்கவும். சாதம்’ அறை வெப்பநிலையில் இருக்க வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, ½ தேக்கரண்டி கடுகு, கறிவேப்பிலை, 1 காய்ந்த மிளகாய், ½ தேக்கரண்டி கடலை பருப்பு, ½ தேக்கரண்டி உளுத்தம் பருப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் வெடிக்க விடவும்.

இப்போது எஞ்சியிருக்கும் சாதத்தை சேர்த்து வேகவைக்கவும். அடுப்பை அணைத்து, அதில் சுமார் ½ கப் தயிர் சேர்க்கவும். மாதுளை விதைகளால் அலங்கரித்து, நன்கு கலந்து சூடாக பரிமாறவும்.

இட்லி

publive-image

வீட்டில் இட்லி மீந்துவிட்டதா? வறுத்த இட்லி செய்ய அவற்றைப் பயன்படுத்தவும். உணவைத் தயாரிக்க, முதலில் இட்லியை 4-5 பகுதிகளாக நறுக்கவும். இப்போது ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, 4 பூண்டு பல் (வெட்டியது), 1 க்யூப் வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இப்போது க்யூப் செய்யப்பட்ட’ குடை மிளகாய்’(பச்சை, சிவப்பு அல்லது மஞ்சள்), உங்கள் விருப்பப்படி சேர்க்கவும். இன்னும் இரண்டு நிமிடங்களுக்கு அவற்றை வறுக்கவும். 1 டீஸ்பூன் சோயா சாஸ் மற்றும் 1 டீஸ்பூன் ரெட் சில்லி சாஸ் சேர்க்கவும்.

½ டீஸ்பூன் கார்ன்ஃப்ளவரை ¼ கப் தண்ணீரில் கலந்து, கடாயில் சேர்க்கவும். இப்போது அதில் நறுக்கிய இட்லிகளைச் சேர்க்கவும். மசாலா, எல்லா இட்லி துண்டுகளிலும் சரியாக, சேர்ந்திருக்க வேண்டும். ¼ தேக்கரண்டி கருப்பு மிளகு தூளுடன் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கவும். வெங்காய தாளால் அலங்கரித்து பரிமாறவும்.

ரொட்டி மற்றும் சப்ஜி

publive-image

மதிய உணவில் நீங்கள் சாப்பிட்ட அதே ரொட்டி-சப்ஜியை இரவு உணவிற்கு சாப்பிட விரும்பவில்லையா?

ரொட்டியில் சிறிது வெண்ணெய் தடவி ஒரு தவா மீது வைக்கவும், இருபுறமும் சிறிது கிரிஸ்பி ஆக இருக்கும் வரை சமைக்கவும். இப்போது அதை ஒரு தட்டில் வைக்கவும். புதினா சட்னி, கெட்ச்அப் மற்றும் சிறிது மயோவை சேர்க்கவும்.

இப்போது மீதமுள்ள சப்ஜியைச் சேர்த்து, அதை ரொட்டியில் சிறிது பரப்பவும். இறுதியாக, புதிதாக நறுக்கிய வெங்காயத்தை அதன் மேல் வைத்து டாப்பிங் செய்யவும். இப்போது ரொட்டியை உருட்டி, வீட்டில் தயாரிக்கப்பட்ட கத்தி ரோலை அனுபவிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment