Advertisment

சுத்தம் செய்வது முதல் பூச்சி வராமல் தடுப்பது வரை.. வெங்காய ஹேக்ஸ் இங்கே!

முகப்பருவை அகற்றுவது முதல் சுத்தம் செய்வது வரை, நீங்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தக்கூடிய சில ஆச்சரியமான வழிகள் இங்கே உள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Onion Hacks

Kitchen tips must trying onion hacks to reduce your daily stress

வெங்காயம் எந்த ஒரு உணவின் சுவை, நறுமணம் மற்றும் ஆரோக்கியத்தை உடனடியாக அதிகரிக்கும். அது இல்லாத ஒரு இந்திய உணவை கற்பனை செய்து பார்க்க முடியாது!

Advertisment

வெங்காயம் அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் வெங்காயம் வீடு, சமையலறை மற்றும் தோட்டத்தில் சில சுவாரஸ்யமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.

முகப்பருவை அகற்றுவது முதல் சுத்தம் செய்வது வரை, நீங்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தக்கூடிய சில ஆச்சரியமான வழிகள் இங்கே உள்ளன.

முகப்பரு நீங்க, வலியை குறைக்க!

publive-image

முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதில் வெங்காயத்தில் குறிப்பிடத்தக்க மருத்துவ குணங்கள் உள்ளன. நசுக்கிய வெங்காயத் துண்டுகளை தண்ணீரில் கலந்து முகப்பருவில் தடவவும். இதில் ஆண்டிசெப்டிக் பண்புகள் இருப்பதால் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களிலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது.

வெங்காயம் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது, இது காயங்களில் தொற்று ஏற்படாமல் தடுக்கும். வெங்காயத் துண்டை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்க்கவும். இது உடனடியாக வலியைக் குறைக்கும்.

முடி வளர்ச்சிக்கு!

publive-image

கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கந்தகத்துடன் வெங்காயம் உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்யும்.

இரண்டு டீஸ்பூன் வெங்காய சாற்றுடன், ஒரு டீஸ்பூன் தேன் கலக்கவும். உங்கள் தலைமுடியைக் கழுவுவதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் இந்த மாஸ்கை பயன்படுத்தலாம். இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி தண்டுகளுக்கு பிரகாசத்தையும் சேர்க்கிறது. மேலும் உச்சந்தலையில் ஏதேனும் தொற்றுநோய் இருந்தால் அதையும் நீக்குகிறது.

கலர் முட்டைக்கு!

வெங்காயத் தோல்கள் சிறந்த சாயங்களை உருவாக்குகின்றன! வெங்காயத் தோல்களில் முட்டைகளைப் போர்த்தி, அவற்றைப் பத்திரமாக ஒரு டவலில் கட்டி, வழக்கம் போல் வேகவைக்கவும். இப்போது முட்டை ஒரு அழகான, ஆரஞ்சு நிறத்துடன் இருக்கும்.

வாசனை நீங்க!

புதிய வெங்காயம் பயன்படுத்தி பெயிண்ட் வாசனையை நீக்க முடியும். புதிதாக வர்ணம் பூசப்பட்ட அறையில் இரவு முழுவதும் சிறிது தண்ணீருடன் ஒரு கிண்ணத்தில் புதிதாக வெட்டப்பட்ட வெங்காயத்தின் பல துண்டுகளை வைக்கவும். வெங்காயம் சில மணி நேரங்களிலேயே பெயிண்ட் வாசனையை உறிஞ்சிவிடும்.

ஷூ பாலிஷ்!

உங்கள் காலணிகளில் உள்ள சேறு மற்றும் புல் கறைகளை நீக்க வெங்காயம் சிறந்த தீர்வாகும். பச்சை வெங்காயத்தின் ஒரு துண்டை வெட்டி, அதை உங்கள் ஷூவில் சில நிமிடங்கள் தேய்க்கவும். அவற்றை தண்ணீரில் கழுவவும். இப்போது ஷூ புதிது போல இருக்கும்.

பூச்சி வராமல் தடுக்க!

publive-image

அரைத்த வெங்காயத்தை ஒரு கப் தண்ணீரில் கலக்கவும். இந்த கலவையை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி செடிகளின் மேல் தெளிக்கவும். இது அதன் விரும்பத்தகாத வாசனையால் பூச்சிகளை விலக்கி வைக்கும்.

உங்களிடம் துருப்பிடித்த சமையலறை கத்தி இருந்தால், அதை ஒரு பெரிய வெங்காயத்தில் திணித்து சிறிது நேரம் வைக்கவும். கத்தியை வெளியே இழுக்கும்போது, ​​துரு நீங்கியிருப்பதைக் காண்பீர்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment