Advertisment

இஸ்ரேலில் இருந்து ரபி, 300 விருந்தினர்கள்: கொச்சியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த முதல் யூத திருமணம்

கொச்சியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த முதல் யூத திருமணம் இது, மேலும் கடந்த 70 ஆண்டுகளில் நடந்த ஐந்தாவது யூத திருமணம் ஆகும்.

author-image
WebDesk
May 22, 2023 13:09 IST
New Update
lifestyle

Kerala Jewish wedding

கேரள மாநிலத்தில் அழகிய கும்பளம் ஏரிக்கரையில் யூத திருமணம் இந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. கொச்சியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த முதல் யூத திருமணம் இது, மேலும் கடந்த 70 ஆண்டுகளில் நடந்த ஐந்தாவது யூத திருமணம் ஆகும்.

Advertisment

சிவப்பு மற்றும் மஞ்சள் பூக்கள் சொட்டும் கூரையின் கீழ், இந்திய மற்றும் அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த யூதர்களான ரேச்சல் பினோய் மலாக்கி மற்றும் ரிச்சர்ட் சக்கரி ரோவ் ஆகியோர் மோதிரங்களை பரிமாறி, திருமண பந்தத்தில் இணைந்தனர்.

கொச்சியில் யூத திருமணம் நடப்பது அரிது, யூத நகரத்திற்கும் யூத மரபுக்கும் பெயர் பெற்ற மட்டஞ்சேரியில் உள்ள யூதர்களின் கோயிலான, பரதேசி ஜெப ஆலயத்திற்கு வெளியே 300 விருந்தினர்களுக்கு இடமளிப்பது என்பது முடியாத விஷயம்.

இந்த ஜெப ஆலயம் இப்போது ஒரு பாரம்பரிய தளம் ஆகும், இங்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒருசிலர் மட்டுமே கட்டிடத்திற்குள் அனுமதிக்கப்படுவர், மேலும், குறைந்தபட்ச அலங்காரங்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்படுகின்றன, என்று ரேச்சல் கூறினார்.

ரமடா ரிசார்ட்டின் பரந்த முற்றத்தில் விருந்தினர்கள் இனிமையான மாலை தூறலை அனுபவித்தபோது, ​​​​இஸ்ரேலில் இருந்து திருமணத்திற்காக வந்த ரப்பி ஆரியல் சியோன், தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்தா.

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி பெனாய் மாலாக்கி மற்றும் மருத்துவ உளவியலாளர் மஞ்சுஷா மிரியம் இம்மானுவேல் ஆகியோரின் மகள், ரேச்சல், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் கல்லூரி நாட்களின் போது சச்சரி என்பவரை சந்தித்தார். ரேச்சல் இப்போது டேட்டா சயிண்டிஸ்ட், சாக் ஒரு ஏரோஸ்பேஸ் இன்ஞ்னியர். இன்னும் சில நாட்களில் இருவரும் அமெரிக்கா திரும்ப உள்ளனர்.

ரேச்சல் தனது திருமணத்தை கொச்சியில் நடத்த விரும்பியதாகவும், அங்கு தான் தனது குழந்தைப் பருவத்தின் சில பகுதிகளை கழித்ததாகவும் கூறினார். நாங்கள் அதை அமெரிக்காவில் ஏற்பாடு செய்திருக்கலாம் மற்றும் எங்கள் குடும்பங்களை அங்கு வருமாறு அழைத்திருக்கலாம்.

ஆனால் பல தசாப்தங்களாக தங்கள் வாழ்நாளை இங்கு அர்ப்பணித்துள்ள எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளும் இதில் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்ய விரும்பினோம். இது இரு குடும்பத்தினரும் பரஸ்பரமாக எடுத்த முடிவு.

எனது குடும்பம் கொச்சிக்கு வர மிகவும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் கேரளாவைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார்கள், அதன் அழகிய நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்க இது ஒரு வாய்ப்பு. அவர்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் நேசித்தனர், என்று சாக் கூறினார்.

அவரது திருமண விருந்தில் அவரது தந்தை, தாய், சகோதரர் மற்றும் நண்பர்கள் உட்பட கிட்டத்தட்ட 17 பேர் இருந்தனர்.

publive-image

திருமண சடங்குகள்

தனது திருமணத்தை நடத்துவதற்கு ரபி சியோனைத் தேர்ந்தெடுத்தது பற்றிப் பேசிய ரேச்சல், நாட்டில் உள்ள யூத சமூகத்துடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறினார்.

சிறுவயதில் இருந்தே அவரை எனக்கு தெரியும். அவர் கொச்சியில் உள்ள யூத குடும்பங்களைச் சந்திப்பார். நான் திருமணம் செய்து கொள்வதாகச் சொன்னதும், திருமணத்தை நடத்துவதற்காக கொச்சிக்கு வருவதற்கு அவர் தயாராக இருந்தார், என்றார்.

ரபி கூறுகையில், நான் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு ஆகிய இடங்களுக்குச் சென்றிருக்கிறேன், அங்கு நான் யூத சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளேன். நான் இந்தியாவில் ஆறு திருமணங்களை நடத்தியுள்ளேன், ஆனால் கேரளாவில் நான் ஒரு திருமணத்தை நடத்துவது இதுவே முதல் முறை, என்றார்.

ஒரு யூத திருமணம் பொதுவாக ஒரு வாரம் நீடிக்கும், ஆனால் நேரமின்மை, பயணம் மற்றும் பிற தடைகள் காரணமாக பெரும்பாலான சடங்குகளை திருமண நாளுக்கு மட்டுப்படுத்த முடிவு செய்தோம். ஆனால் திருமணத்தன்று விரதம் இருப்பதை உறுதி செய்தோம், என்று ரேச்சல் கூறினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு கொச்சியைச் சேர்ந்த ஷெலேமோ, மும்பையைச் சேர்ந்த சூசன் மட்டஞ்சேரி ஜெப ஆலயத்தில் திருமணம் செய்துகொண்டபோது, ​​நகரில் கடைசியாக யூத திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் 1987 இல் கொண்டாடப்பட்டது.

publive-image

மணமகன் ரிச்சர்ட் சச்சரி ரோவ், மணமகள் ரேச்சல் பினோய் மலாக்கி

இந்த அரிதான திருமணங்கள் சமூகத்தின் மக்கள்தொகை குறைந்து வருவதைக் குறிக்கிறது, ஒரு கட்டத்தில் இது சுமார் 3,000 ஆக இருந்தது.

ஆனால் இப்போது மக்கள்தொகை வெறும் 25 அல்லது அதற்கும் குறைவாக உள்ளது, அதுவும் பெரும்பாலானோர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள். கொச்சியில் உள்ள யூத சமூகம் அதன் மூத்த உறுப்பினரான 96 வயதான சாரா ஜேக்கப் கோஹனை 2019 இல் இழந்தது.

மட்டஞ்சேரியில் குடியேறிய யூதர்கள், 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெயினில் இயற்றப்பட்ட வெளியேற்ற ஆணையால் (1290 இல் இங்கிலாந்தின் எட்வர்ட் I ஆல் அனைத்து யூதர்களையும் இங்கிலாந்து இராச்சியத்திலிருந்து வெளியேற்றும் அரச ஆணை) ஐரோப்பாவிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது.

17 ஆம் நூற்றாண்டில், கேரளாவில் யூதர்கள் மட்டஞ்சேரி, எர்ணாகுளம், பரவூர், மாலா, சேந்தமங்கலம் மற்றும் அங்கமாலி ஆகிய இடங்களில் ஜெப ஆலயங்களை அமைத்தனர்.

அவர்கள் யூத டவுனில் மாளிகைகளையும் கட்டிடங்களையும் கட்டினார்கள், அவற்றில் பல இப்போது பாரம்பரிய ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்களாக மாற்றப்பட்டுள்ளன. 1948 இல் இஸ்ரேல் பிறந்த பிறகு, கொச்சியில் இருந்து பல யூதர்கள் தங்கள் தேசத்திற்கு செல்ல ஆரம்பித்தனர்.

அதனுடன், ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் யூத மக்கள் தொகை குறைந்தது. உண்மையில், போதிய ஆண் உறுப்பினர்கள் இல்லாததால், ஜெப ஆலயத்தில் வாராந்திர பிரார்த்தனை சேவையை அடிக்கடி நடத்த முடியவில்லை.

இந்த கடற்கரைகள் எதிர்காலத்தில் மற்றொரு யூத திருமணத்திற்கு சாட்சியாக இருக்காது - இது ரேச்சலையும் அவரது குடும்பத்தினரையும் கவலைக் கொள்ளச் செய்கிறது.

இன்னொரு யூத திருமணத்தை இங்கு காண நாங்கள் பல வருடங்கள் காத்திருக்க விரும்பவில்லை. நாடு மற்றும் உலகம் முழுவதும் பல இளைஞர்கள் சமூகத்தில் உள்ளனர். குறைந்தபட்சம் திருமணங்கள் போன்ற விசேஷ நிகழ்வுகளிலாவது அவர்கள் தங்கள் வேர்களுக்குத் திரும்புவதற்கு எங்கள் திருமணம் உந்துதலாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று நெகிழ்ச்சியுடன் முடிக்கிறார் ரேச்சல்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle #Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment