Advertisment

கண்ணாடி போன்ற மின்னும் முகம் வேண்டுமா? கொரியன் ஸ்பெஷல் ரைஸ் வாட்டர் ஃபேஸ் மிஸ்ட்

தோல் பராமரிப்பு வழக்கத்தை கடைபிடிக்கும் ஒவ்வொரும் கொரிய அழகு குறிப்புகளை அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Korean beauty tips

Korean Face Masks for Glass skin

ஒரு புதிய பியூட்டி’ டிரெண்ட் ஆகும்போது, அதை முயற்சிக்க நாமும் விரும்புகிறோம், இல்லையா? அப்படிதான் சமீபமாக கொரியன் பியூட்டி டிரெண்டுகளால் நாம் நிரம்பி வழிகிறோம்.

Advertisment

கொரியர்கள் தங்கள் அழகான, மென்மையான சருமத்திற்கு பிரபலமானவர்கள், தோல் பராமரிப்பு வழக்கத்தை கடைபிடிக்கும் ஒவ்வொரும் கொரிய அழகு குறிப்புகளை அவசியம் அறிந்திருக்க வேண்டும்.

பல தசாப்தங்களாக கொரிய அழகுக்காக’ வீட்டு சிகிச்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வீட்டு வைத்தியங்களை உங்கள் தினசரி  வழக்கத்தில் சேர்ப்பதன் மூலம், சில மாதங்களில் உங்கள் சருமத்தின் நிலையிலும் வித்தியாசத்தைக் காணலாம்.

சுத்தமான, கறை இல்லாத மற்றும் பிரகாசமான சருமத்துக்கு நீங்களே வீட்டில் செய்யக்கூடிய கொரிய அழகு பராமரிப்பு குறிப்புகள் இதோ.

அரிசி மாவு மற்றும் கற்றாழை ஃபேஸ் மாஸ்க்

publive-image

அரிசி மாவு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்தது, இது சருமம் வயதாவதை திறம்பட தடுக்கிறது, புற ஊதா சேதத்தை குறைக்கிறது மற்றும் சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது இயற்கையான எக்ஸ்ஃபோலியண்டாகவும் செயல்படுகிறது.

கற்றாழை சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, முகப்பருவை நீக்குகிறது, மேலும் கறைகளை நீக்கி, முகத்தை ஒளிரச் செய்கிறது.

எப்படி உபயோகிப்பது:

ஒரு கிண்ணத்தில் மூன்று தேக்கரண்டி நன்றாக பொடித்த அரிசி மாவு, இரண்டு தேக்கரண்டி கற்றாழை கூழ் மற்றும் குளிர்ந்த நீரை சம விகிதத்தில் சேர்க்கவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி ஒரு மணி நேரம் முழுமையாக உலர வைக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

இந்த வீட்டு வைத்தியம் உங்கள் சருமத்தை உடனே மென்மையாக்கும் மற்றும் புத்துயிர் பெறச் செய்யும். உகந்த முடிவுகளுக்கு, வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த மாஸ்கை பயன்படுத்தவும்.

ரைஸ் வாட்டர் ஃபேஸ் மிஸ்ட்

publive-image

சீனா மற்றும் கொரியாவில், பல தோல் பராமரிப்பு முறைகளில் புளித்த அரிசி ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. அரிசி நீர் சருமத்தில் UV பாதிப்பைக் குறைப்பதற்கும், கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, இது சருமத்தை மிருதுவாக வைத்து சுருக்கங்களைத் தடுக்கிறது.

எப்படி உபயோகிப்பது

அரிசியை வேகவைத்து, வடிகட்டி, அந்த தண்ணீரை ஆறவிடவும். பிறகு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமிக்கவும். அரிசியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் தண்ணீரைச் சேகரிப்பதன் மூலம் கொதிக்கும் படியைத் தவிர்க்கலாம்.

2-3 நாட்கள் அப்படியே வைக்கவும். புளித்த அரிசி நீரை காலையில் குளித்த பின் மற்றும் படுக்கைக்கு செல்லும் முன் முகத்தில் தெளிக்கவும்.

கண்ணாடி போன்ற மின்னும் சருமத்துக்கு இந்த கொரியன் பியூட்டி டிப்ஸ்களை கண்டிப்பா டிரை பண்ணுங்க..

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment