Krishna Jayanthi 2019: இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர். கிருஷ்ணனின் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு வைக்கப்படும்.
krishna jayanthi wishes, quotes and images krishna jayanthi wishes, quotes and images Krishna jayanthi in tamil Krishna jayanthi in tamil Krishna jayanthi in tamil Krishna jayanthi in tamil Krishna jayanthi in tamil Krishna jayanthi in tamil Krishna jayanthi in tamil
குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் கிருஷ்ணர். இதனால், இன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை அவருக்கு படைக்க வேண்டும். வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம். இந்நாளில் தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை எனவே, அன்று வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், கண்ணன் நடந்து வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமிட்டு வரவேற்கலாம்.