Advertisment

உடலுக்கு புத்துணர்ச்சித் தரும் புதினா பானங்கள்!

மூலிகை உணவுகளில் சிறந்த உணவு புதினா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mint juice for summer

எலுமிச்சை உடலில் ஏற்படும் நீர்சத்து இழப்பை சரி செய்து உடலுக்கு உற்சாகம் தரும். எலுமிச்சை, புதினா சேர்த்து ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

Advertisment

புதினா - எலுமிச்சை

எலுமிச்சை - 1

புதினா இலைகள் - ஒரு கைப்பிடி

தேன் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

உப்பு - கால் டீஸ்பூன்

செய்முறை :

எலுமிச்சை பழத்தில் சாறு எடுத்துக்கொள்ளுங்கள்.

ஜூஸ் ஜாரில் புதினா இலைகள், உப்பு, தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் அடித்து பருகவும்.

இந்த ஜூஸ் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

வெயில் காலத்தில் தினமும் புதினா நீரை குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பலரும் தங்களது உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவு குறைந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருவார்கள். அதிலும் வெயிலில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் கோடையில் பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

முக்கியமாக வெயில் கொளுத்தும் நேரத்தில் உடலின் ஆற்றல் அனைத்தும் மிகவும் வேகமாக குறையும். எனவே உடலின் ஆற்றலைத் தக்க வைக்கவும், நீர்ச்சத்தை அதிகரிக்கவும், உடலின் வெப்பத்தைக் குறைக்கவும் ஓர் அற்புத பானம் உள்ளது. அதனை தினமும் பருகி வந்தால், கோடையில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

அது வேறொன்றும் இல்லை புதினா தண்ணீர். இந்த புதினா தண்ணீரை தினமும் குடிப்பதன் மூலம் நீங்கள் நினைத்திராத அளவில் நன்மைகளைப் பெறலாம். சரி, இப்போது புதினா தண்ணீரை எப்படி தயாரிப்பது என்றும் அதனை தினமும் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

காய்ச்சல் ஏற்படுவதால் உடம்பில் அதீத உஷ்ணம் காரணமாக திரவங்களும், அயனிகளும் விரிவடைந்து வியர்வை மூலம் வெளியேறுகின்றன. அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு களைப்பு ஏற்படுகிறது.

இந்த சமயத்தில் இளநீர் குடித்தால் களைப்பு தீரும். காய்ச்சலும் குறையும். ஏனென்றால் இளநீரில் நிறைய அயனிகள் (தாதுக்குள்) உள்ளது. இவை உடம்பிலிருந்து வெளியேறிய அயனிகளை ஈடு செய்கின்றன.

மேலும், இளநீர் உடம்புக்குள் சென்றதும் உடம்பின் திரவநிலை அளவு சற்று அதிகரிக்கிறது. இதனால் உடம்பின் வெப்பம் பரவலாக்கப்படுகிறது. இதன் விளைவாக காய்ச்சல் குறைகிறது.

புதினா டீ

மூலிகை உணவுகளில் சிறந்த உணவு புதினா. இது வாய் துர்நாற்றம் மட்டுமின்றி, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஆண்டி-ஆக்சிடன்ட் நன்மையும் அளிக்கும் உணவுப் பொருளாகும். புதினாவை தேநீர், சிற்றுண்டிக்கு தொட்டுக் கொள்ளும் உணவாக என எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

அந்த வகையில் புதினா சேர்த்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இனிக் காணலாம்.

தேவையான பொருட்கள்

கொஞ்சம் புதினா இலைகள், வெந்நீர்

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் சிறிது புதினா இலைகள் சேர்த்துக் கொள்ளுங்கள். *முங்கும் அளவிற்கு அதில் கொதிக்க வைத்த சுடு தண்ணீர் ஊற்றுங்கள். *ஐந்து நிமிடங்கள் கழித்து வடிக்கட்டி குடியுங்கள்.தினா சேர்த்த இந்த

மூலிகை தேநீர் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்.., வைட்டமின் A, B, C, மற்றும் D.

கிவி - புதினா ஜூஸ்

கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை அதிகம் சேர்த்து கொள்வது உடலுக்கும் மிகவும் நல்லது. அந்த வகையில் கிவி, புதினா சேர்த்து ஜூஸ் செய்யலாம்.

கிவி - 1

தேன் - தேவைக்கு

புதினா - சிறிதளவு

ஐஸ்கட்டிகள் - தேவைக்கு

செய்முறை :

* கிவிப் பழத்தின் தோலை எடுத்துவிட்டு மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.

* ஆப்பிள் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி (தோல் எடுக்கவேண்டாம்) மிக்சியில் நைசாக அரைக்கவும்.

* புதினா இலைகளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.

* அரைத்து வைத்துள்ள மூன்று ஜூஸ்களையும் ஒன்றாக சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்சியில் போட்டு அதனுடன் தேன், ஐஸ்கட்டிகள் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

* அரைத்த ஜூஸை கண்ணாடி கப்பில் ஊற்றி பரிமாறவும்.

* குளுகுளு கிவி - புதினா ஜூஸ் ரெடி.

* கிவியில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment