Advertisment

காலாவதியான பால்... உங்கள் வீட்டுச் செடிகளுக்கு அற்புத உரம்!

how to use expired milk on plants instead of wasting it: கெட்டுப்போன பால் மனித உடலுக்கு நல்லது கிடையாது. ஆனால் அவை நமது தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு உரமாக செயல்படுகின்றன. அதோடு அவை பூஞ்சை காளான் மற்றும் பூச்சிக்கொல்லி பண்புகளைக் கொண்டுள்ளது

author-image
WebDesk
New Update
Lifestyle news in tamil how to use expired milk on plants instead of wasting it

Lifestyle news in tamil how to use expired milk on plants instead of wasting it

“காலாவதியான பாலை கீழே கொட்ட வேண்டாம். நான் என் இலைகளுக்கு பஞ்சின் மூலம் பாலை கொடுத்தேன். அவை பிரகாசிப்பதைப் பாருங்கள்” என்ற குறிப்புடன் செடி ஒன்றின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தா வெளியிட்டிருந்தார். அவர் கூறியிருந்தது போலவே, அதன் இலைகள் உண்மையில் பளபளப்பாகவே தெரிகின்றன.

Advertisment

பளபளப்பான இலைகளைப் பெற பாலைப் பயன்படுத்துதல்:

கெட்டுப்போன பால் மனித உடலுக்கு நல்லது கிடையாது. ஆனால் அவை நமது தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு உரமாக செயல்படுகின்றன. அதோடு அவை பூஞ்சை காளான் மற்றும் பூச்சிக்கொல்லி பண்புகளைக் கொண்டுள்ளது. தி ஸ்புரூஸ் இணைய பக்கத்தின் (Thespruce.com) கூற்றுப்படி, பாலில் உள்ள கால்சியம் தாவரங்கள் வளர உதவுகிறது என்றும், மலரின் இறுதி அழுகலைத் தடுக்கிறது என்றும் கூறுகிறது. இது பொதுவாக தக்காளி, மிளகு மற்றும் ஸ்குவாஷ் போன்ற செடிகளில் கால்சியம் குறைபாடு காரணமாக காணப்படுகிறது எனவும் கூறியுள்ளது. பாலில் அத்தியாவசிய புரதங்கள் மற்றும் வைட்டமின் பி ஆகியவை உள்ளன. அவை தாவரங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்குகின்றன.

எவ்வாறாயினும், அதிகப்படியான பாலைப் பயன்படுத்துவதை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதோடு பாலில் உள்ள பாக்டீரியாக்கள் வளர்ச்சியைத் தடுக்கலாம் என கூறுகின்றனர்.

தாவரங்களில் பால் பயன்படுத்துவது எப்படி:

ஒழுங்காக நீர்த்துப்போகும் வரை நீங்கள் எந்த வகை பாலையும் பயன்படுத்தலாம். பாலை தண்ணீரில் கலந்து திரவத்தை, ஒரு ஸ்ப்ரே பாட்டில் மாற்றவும். தாவரங்களின் இலைகளில் அந்த கலவையை தெளிக்கவும். 30 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் சரிபார்க்க வேண்டும். தண்ணீர் பால் அனைத்தும் உறிஞ்சப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இலைகளில் இன்னும் கொஞ்சம் திரவம் இருந்தால், அதை ஈரமான துணியால் துடைக்க வேண்டும். இல்லையேல் அது பூஞ்சை எதிர்வினைக்கு வழிவகுப்பதாக அமையும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment