Advertisment

பாதாம், இஞ்சி, ஆரஞ்சு... அவசியமான இம்யூனிட்டி உணவுகள்; எப்படி பயன்படுத்துவது?

To strengthen your immunity you should take these three foods Almonds, Ginger, Citrus: பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சத்தான உணவுகள் நம் உடலுக்குத் கண்டிப்பாக தேவைப்படும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் சில உணவுகளை நீங்கள் தேர்ந்துடுத்து உட்கொள்ள வேண்டும்.

author-image
WebDesk
New Update
Lifestyle news in tamil to strengthen your immunity you should take these three foods Almonds, Ginger, Citrus

Lifestyle news in tamil: இந்த நாட்களில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சத்தான உணவுகள் நம் உடலுக்குத் கண்டிப்பாக தேவைப்படும். அதோடு நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் சில உணவுகளை நீங்கள் தேர்ந்துடுத்து உட்கொள்ள வேண்டும். எனவே இந்த நாட்களில் நீங்கள் சேர்க்க வேண்டிய 3 உணவுகள் உங்களுக்காக இங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மற்றும் அவற்றை எவ்வாறு உண்ணலாம் என்றும் கூறப்பட்டடுள்ளது.

Advertisment

பாதம் பருப்பு

மெக்னீசியம், புரதம், ரைபோப்ளேவின், துத்தநாகம் போன்ற 15 ஊட்டச்சத்துக்களின் மூலமாக பாதம் உள்ளது. இவை தவிர, அதில் வைட்டமின் ஈ அதிகமாக காணப்படுகின்றது. இது நுரையீரலுக்கு நோயெதிர்ப்பு செயல்பாட்டை தூண்டும் ஒரு தூண்டுகோளாகவும் செயல்படுகிறது. வைட்டமின் ஈ வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.

almonds for good health, eating almonds daily, snacking on almonds, healthy eating, health news, healthy study, indian express, indian express news

எவ்வாறு உண்ணலாம்?

பாதாம் பருப்பு ஒரு எளிமையான சிற்றுண்டியாகும், எனவே அவற்றை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீங்கள் சாப்பிடலாம். இவை எந்தவொரு இந்திய மசாலாகளுடன் வேண்டுமானாலும் சேர்த்து உண்ணலாம். ஆரோக்கியமான, இன்னும் சுவையான தின்பண்டங்களுடன் தயார் செய்யும்பொழுது, உங்களுக்கு பிடித்த சுவைகளுடன் பாதாம் பருப்பையும் கலக்கலாம்.

இஞ்சி

மருத்துவ குணம் அதிகம் காணப்படும் பொருள்களில் இஞ்சி முக்கிய இடத்தை பெறுகின்றது. அதனால் என்னவோ நாம் அதை உணவிலும் மற்ற தின்பண்டங்ககளின் சேர்க்கின்றோம். நோயெதிர்ப்பு, பாக்டீரியா மற்றும் வைரஸ்களைத் தடுக்க இஞ்சி அதிகம் உதவுகின்றது. உடலில் ஏற்படும் அலர்ஜியை போக்க வல்லதாகவும் உள்ளது.

home remedies for pain, natural pain killers, pain remedies, kitchen remedies for pain, indian express, indian express news

 

எவ்வாறு உண்ணலாம்?

காலையில் வெறும் வயிற்றில் எலுமிசையுடன் சாறுடன் இஞ்சி கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும், மற்றும் குடல் சுத்தமாக இருக்கும். இஞ்சி கலந்த தேனீர் அருந்துவது உடலுக்கு நல்லது. எனவே இஞ்சியை நம் அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

சிட்ரஸ்

தினந்தோரும் உணவிற்கு பின்னர் சிட்ரஸ் அமிலம் கலந்த ஒரு பழம் எடுத்துக்கொண்டால் நல்லது என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள். அதே வேளையில் பழத்தை சாறகா அருந்துவதை விட அதை நன்கு கழுவிய பின் உண்பது உடலுக்கு வலு தரும் எனவும் கூறுகின்றனர்.

food for winter, food for immunity, immunity booster food

அந்த வகையில் சிட்ரஸ் அடங்கியுள்ள அனைத்து பழங்களும் (வைட்டமின் சி) நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. அது மட்டும்மல்லால் ஜலதோஷத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் என நீண்ட காலமாக அறியப்படுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, கிவிஸ் மற்றும் கொய்யா உள்ளிட்ட ஒவ்வொரு சிட்ரஸ் பழத்திலும் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இவை பெரும்பாலும் குளிர்ந்த மாதங்களில் அறுவடை செய்யப்படுகின்றது. இந்த குளிர் காலத்தை வண்ணமயமான சிட்ரஸ் பழங்களோடு கொண்டாடுவோம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " t.me/ietamil

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment