‘லொள்ளு சபா’ புகழ் சேஷு மகன் இயக்கிய குறும்படம் – சந்தானம் படத்தை இயக்க சொல்லலாமே!! (வீடியோ)

‘லொள்ளு சபா’ ஷோ இன்றைய காமெடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ‘தகப்பன் சாமி’ என்று சொல்லலாம். முதன் முதலில், மறைந்த நடிகர் பாலாஜி லொள்ளு சபாவில் ஹீரோவாக நடிக்க, பிறகு சந்தானம் வந்து நிகழ்ச்சியை உச்சிக்கு கொண்டுச் சென்றது நமக்கு தெரிந்ததே. ஒருக்கட்டத்திற்கு மேல் அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட, ரசிகர்கள் இன்றளவும்…

By: Updated: March 8, 2020, 05:37:13 PM

‘லொள்ளு சபா’ ஷோ இன்றைய காமெடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் ‘தகப்பன் சாமி’ என்று சொல்லலாம். முதன் முதலில், மறைந்த நடிகர் பாலாஜி லொள்ளு சபாவில் ஹீரோவாக நடிக்க, பிறகு சந்தானம் வந்து நிகழ்ச்சியை உச்சிக்கு கொண்டுச் சென்றது நமக்கு தெரிந்ததே.

ஒருக்கட்டத்திற்கு மேல் அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட, ரசிகர்கள் இன்றளவும் யூடியூப் வாயிலாகவும், சமூக தளங்கள் வாயிலாகவும் பழைய கிளிப்பிங்ஸ்களை பார்த்து ரசித்து வருகின்றனர். மீம்ஸ்-களிலும் லொள்ளு சபா டெம்ப்ளேட் இடம்பெறாமல் இல்லை.

சந்தானம் டீமில் காமெடி அதகளம் புரிந்த மனோகர், சேஷு உட்பட பலரும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். குறிப்பாக, சேஷு…

லொள்ளு சபாவில் இவர் சினிமா டயலாக் சொல்லிக் கொடுக்கும் காட்சியின் மீம் டெம்ப்ளேட் இன்றளவும் வைரல்.


சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய ‘திரௌபதி’ படத்தில் சேஷு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

டிவியிலிருந்து, சினிமாவுக்கு நுழைந்தவர்களில் மிக முக்கிய இடத்தைப் பிடித்த சேஷுவின் மகன் அபிலாஷ் குறும்படம் ஒன்றை இயக்கி அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறார்.

இந்த இளம் வயதில், தந்தைக்கும் – மகனுக்கும் இடையிலான அன்பை வெளிப்படுத்தும் விதமாக குறும்படம் இயக்கி ரசிக்க வைத்திருக்கிறார். இதில், மகனுக்காக கால்ஷீட் கொடுத்து தந்தையாகவே நடித்தும் இருக்கிறார் சேஷு.

தந்தை நடிகர், மகன் இயக்குனர்…. அப்புறம் என்ன…. சந்தானத்தை ஹீரோவாக வைத்து முதல் பட பூஜை போட்டுவிட வேண்டியது தானே!!!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Lollu sabha fame seshu comedian son directs shortfilm video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X