Advertisment

முகத்திற்கு மஞ்சள் மாஸ்க்: இதில் இத்தனை நன்மையா?

அதிக உணர்திறன் சருமம் கொண்டவரா நீங்கள்?  உங்கள் முகத்தை மூடிக்கொள்ள முகமூடி தேவையா? அப்படியென்றால் இதோ உங்களுக்கான அழகு குறிப்பு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lot of benefits from turmeric face mask -முகத்திற்கு மஞ்சள் மாஸ்க்: இதில் இத்தனை நன்மையா?

ரசாயனத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் அதிக உணர்திறன் கொண்ட உங்கள் சருமம்  பெரும் எதிர்விளைவுகளை சந்திக்கின்றது. அதோடு  முகம் சிவத்தல், முக வீக்கம், முகக் கடினத்தன்மை,  மற்றும் தோல் அழற்சி ஆகிய பாதகமான விளைவுகளைக் சந்திக்கவும் நேரிடுகின்றது. இது போன்ற சரும பிரச்னைகளை தவிர்க்க இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவது நல்லது என்கிறார் தோல் மருத்துவர் மற்றும் அழகுசாதன நிபுணர் கீதிகா மிட்டல் குப்தா.

Advertisment

 

 

View this post on Instagram

 

A post shared by Dr Geetika Mittal Gupta (@drgeetika)

தேவையான பொருட்கள்:

1½ தேக்கரண்டி - மஞ்சள்

1 தேக்கரண்டி - கற்றாழை ஜெல்

ரோஸ் வாட்டர்  சில துளிகள்

செய் முறை:

மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.

எப்படி உங்கள் முகத்தில் அப்ளை செய்வது?

இப்பொது நீங்கள் கலந்து வைத்துள்ள கிரீம் போன்ற கற்றாழை ஜெல் கலவையை  உங்கள் தோலில் தடவவும். பின்னர் அதை 10 நிமிடங்கள் உலர வைக்க நீங்கள் உட்கார வேண்டும். அந்த கலவை வழவழப்பாக இருப்பதால் அது உங்கள் முகத்தில் இருந்து அங்குமிங்கும் ஓட முயற்சி செய்யும். அதனால் அதை நன்றாக உலர வைக்க வேண்டும். பின்னர் முகத்தை அழுக்கு பிடிக்காமல் பாதுக்காக்க முகத்தில் இரண்டு சொட்டு எண்ணெய் தடவ வேண்டும்.

இந்த கற்றாழை ஜெல் கலவையை எப்படி உங்கள் சருமத்தை பாதுகாக்கின்றது.

கற்றாழை ஜெல், முகம் சிவத்தல் மற்றும் முக எரிச்சலை ஆற்ற உதவுகிறது.  ரோஸ் வாட்டர் மற்றும் மஞ்சள் முகத்தில்  அழற்சி ஏற்படுவதை எதிர்த்து போராடுகின்றது. இந்த முகமூடிகற்றாழை ஜெல்லை நீங்கள் தினமும் பயன்படுத்தினால், அது உங்கள் சேதமடைந்த சருமத்தை முற்றிலும் ஆற்ற உதவுகிறது என்று அழகுசாதன நிபுணர் குப்தா கூறுகின்றார்.

 

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Lifestyle Healthy Life
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment