Advertisment

ரோஜா இதழ்கள், தண்ணீர் மட்டும் போதும்.. வீட்டிலேயே இயற்கையான ’ரோஸ் வாட்டர்’ எப்படி தயாரிப்பது?

கோடை காலத்தில் ரோஸ் வாட்டரை உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம், கரும்புள்ளி, வெள்ளைப்புள்ளிகள் மற்றும் பருக்களை திறம்பட குறைக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Homemade Rose Water

Make homemade organic rose water with these simple tips

புதிய ரோஸ் வாட்டரை உங்கள் முகத்தில் தெளிப்பதன் மூலம், நீங்கள் உடனே புத்துணர்ச்சி பெறுலாம். இது உங்களுக்கும், உங்கள் சருமத்திற்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், சருமத்தின் pH சமநிலையை பராமரிக்கிறது மற்றும் கோடை காலத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது.

Advertisment

“கோடை காலத்தில் ரோஸ் வாட்டரை உங்கள் தினசரி சரும பராமரிப்பு வழக்கத்தில் சேர்த்துக்கொள்வதன் மூலம், கரும்புள்ளி, வெள்ளைப்புள்ளிகள் மற்றும் பருக்களை திறம்பட குறைக்கலாம். இது மிகவும் நீரேற்றமாக இருப்பதால், சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகளின் ஆரம்ப அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

ஆனால் இன்று சந்தையில் கிடைக்கும்’ எண்ணற்ற பிராண்டுகளால், ரோஸ் வாட்டரின் நம்பகத்தன்மையை நம்புவது கடினம்.  

நீங்கள் வாங்கிய ரோஸ் வாட்டர் உண்மையில் எவ்வளவு நல்லது என்று தெரியவில்லையா?

வீட்டிலேயே ரோஸ் வாட்டர் தயாரிக்க எளிதான செய்முறை இங்கே. உள்ளது. அதற்கு உங்களுக்கு ரோஜா இதழ்கள் மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் மட்டுமே தேவை.

ரோஸ் வாட்டர் தயாரிப்பது எப்படி?

இதழ்கள் புதிதாக இருக்க வேண்டும். அவற்றை வளர்க்கும்போது பூச்சிக்கொல்லிகள் அல்லது ரசாயனங்களைப் பயன்படுத்தக்கூடாது, அதனால்தான் நீங்களே வளர்த்த ரோஜாக்களை பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.

சூரிய உதயத்திற்கு பிறகு2-3 மணி நேரம் கழித்து, பூக்களைப் பறிக்கவும்.

இதழ்களை மட்டும் பயன்படுத்தவும். தண்டு மற்றும் இலைகளை அல்ல,

பூச்சி மற்றும் அழுக்கு துகள்களை அகற்ற நன்கு கழுவவும்.

ரோஜாக்களின் இதழ்களை எடுத்து தடிமனான அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தில் போடவும். இப்போது ரோஜா இதழ்கள் மூழ்கும் அளவுக்கு (ஏற்கெனவே காய்ச்சி வடிகட்டியது) தண்ணீர் ஊற்றவும், முழுமையாக இல்லை. அதிகப்படியான நீர் உங்களுக்கு மிகவும் நீர்த்த ரோஸ் வாட்டரைக் கொடுக்கும்.

மூடியுடன் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வேக வைக்கவும். தண்ணீர் சூடாகக் கொதிக்காமல் வேகவைக்க வேண்டும்.

இதழ்கள் அவற்றின் நிறத்தை இழந்து, ரோஜா இதழ்களின் நிறத்தை தண்ணீர் எடுக்கும் வரை, தண்ணீரை வேக வைக்கவும். இப்போது தண்ணீர் லேசான இளஞ்சிவப்பு நிறத்துக்கு மாறி’ ரோஜா எண்ணெய் மேற்பரப்பில் மிதப்பதை நீங்கள் காண்பீர்கள்.

அதை குளிர்விக்க அனுமதிக்கவும். பிறகு ஒரு ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றி, அதை ஃபிரிட்ஜில் சேமிக்கவும். இது இந்த வழியில் நீண்ட காலம் நீடிக்கும்.

முகப்பருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது உங்கள் சருமத்தை அமைதிப்படுத்த உதவுகிறது, ஏனெனில் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்கின்றன. உண்மையில், இது வடுக்கள், கறைகள் மற்றும் தீக்காயங்களை குணப்படுத்த உதவுகிறது.

ரோஸ் வாட்டர் உங்கள் சருமத்திற்கு சிறந்தது என்பதைத் தவிர, உங்கள் மனதை அமைதிப்படுத்தவும், பதட்டத்தைத் தடுக்கவும் உதவுகிறது. இரவில் தூங்குவதில் உங்களுக்கு சிரமம் இருந்தால், உங்கள் தலையணையில் சில துளிகள் ரோஸ் வாட்டர் தெளித்து நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment