Advertisment

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு ரோல்மாடல், மனுஷி சில்லர் : அழகில் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டி

சிபிஎஸ்இ தேர்வில் 96 சதவித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார். சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு மனுஷி சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
manushi-chhillar

உலக அழகி பட்டத்தை, 17 வருடம் கழித்து இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளார் மனுஷி சில்லர். இறுதி சுற்றில் அவர் அளித்த பதில் அவருக்கு இந்த கிரிடத்தை வாங்கி கொடுத்துள்ளது. அழகும் அறிவும் ஒன்று சேர இருக்கும் பெண்ணாய் மின்னுகிறார் மனுஷி சில்லர்.

Advertisment

ஹரியானா ஜாஜ்ஜர் மாவட்டத்தில் பாம்னொலி என்னும் கிராமத்தில் பிறந்த இவர், பி.பி.எஸ் பெண்கள் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். ஆனால் தன் அழகு பயணத்தை தொடர்வதற்காக தன் மருத்துவ படிப்பை ஒரு வருடம் நிறுத்தி வைத்துள்ளார், 20 வயதான இளம் புயல். அவரது பெற்றோர்கள் இருவருமே மருத்துவர்கள்.

கிராமத்தில் பிறந்தாலும், தன் பள்ளி படிப்பை பெங்களூரிலும் பின்னர் டெல்லியில் உள்ள புனித தாமஸ் பள்ளியிலும் முடித்தார். அதன் பின் மருத்துவ நுழைவு தேர்வில் தேர்ச்சிபெற்று பகத் ப்ஹூல் சிங் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார். இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆக வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும்.

மனுஷி சிபிஎஸ்இ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றவர். அவர் 96 சதவித மதிப்பெண்களை அந்த தேர்வில் பெற்றுள்ளார். சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு மனுஷி சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார்.

மிக கடினமான மருத்துவ தேர்வை எழுதி கல்லூரியில் சேர்ந்தாலும் சர்வதேச தளத்தில் இந்தியாவை பிரதிநிதித்துவம் படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு வருடம் இடைவெளி எடுத்துள்ளார்.

படிப்பு மற்றும் இணை பாடத்திட்டங்களிலும் சிறந்த மாணவராகவே இருந்துள்ளார் சில்லர். படிப்பில் கெட்டிக்காரியான சில்லர் ஒரு தேர்ச்சிப்பெற்ற கிளாசிக்கல் டான்ஸர், கவிஞர் மற்றும் ஓவியர்.

மூன்று நாட்களுக்கு முன் நடந்து முடிந்த உலக அழகிப் போட்டியில் “ஹெட் டு ஹெட்” மற்றும் “ப்யுடி வித் பர்பஸ்” என்னும் பிரிவில் வெற்றிப்பெற்றுள்ளார்.

TOI அறிக்கையின்படி, சில்லரின் இந்த அழகு பயணம் அவர் மருத்துவ கல்லூரியில் காலடி எடுத்து வைத்த போதே நிகழ்ந்துவிட்டது. அனைத்து இந்திய மருத்துவ கல்லூரி டெல்லி நடத்திய “எப்பிபி காம்பஸ் பிரின்சஸ் 2017ல்” வெற்றிப்பெற்று கிரிடத்தை தனதாக்கிக் கொண்டார்.

Miss India Manushi Chhillar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment