Advertisment

அனைத்து ருசியும் சேர்ந்த கலவை... ஹெல்தியான மசாலா சாதம்!

வித்தியாசமாக மசாலா சாதம் செய்து கொடுத்து அசத்துங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
masala rice recipe masala rice recipe in tamil

masala rice recipe masala rice recipe in tamil

Masala rice recipe, masala rice recipe in tamil : டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த ஒரு கலவை சாதம் என்று சொன்னால், அது மசாலா சாதம் தான். இந்த சாதத்தில் கொழுப்புகள் குறைவு. குழந்தைகளுக்கு சாம்பார் சாதம், தயிர்சாதம், புளிசாதம் என்று ஒரே மாதிரி செய்து கொடுத்து அலுத்து போய் இருப்பீர்கள். வித்தியாசமாக மசாலா சாதம் செய்து கொடுத்து அசத்துங்கள்.

Advertisment

தேவையான பொருட்கள்

சாதம் - 2 கப்

தக்காளி - 2

பிரியாணி மசாலா - 4 தேக்கரண்டி

தயிர் - 6 தேக்கரண்டி

முட்டை - 7

வெங்காயம் - 4

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

மல்லித் தளை - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

கிராம்பு - 4

பட்டை - 2 துண்டு

வத்தல் மிளகாய் - 4

சோம்பு - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 4 மேசைக்கரண்டி

செய்முறை

முதலில் முட்டையை ஆம்லெட் போட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கிராம்பு சோம்பு பட்டை வத்தல் போன்றவைகளைப் போட்டு தாளித்து அதனுடன் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கி நிறம் மாறியதும் தக்காளியையும் சேர்த்து தக்காளி கரையும் வரை நன்றாக வதக்கவும்.

அதனுடன் பிரியாணி மசாலா உப்பு மற்றும் தயிர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக வதக்கவும்.

வதங்கிய பின்னர் வெட்டி வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளை போட்டு தண்ணீர் தெளித்து முட்டையில் மசாலா சேரும்படி கிண்டி விடவும்.

சிறிது நேரம் காத்திருந்து பின் சாதத்தையும் அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

இறுதியாக கொத்தமல்லி இலை போட்டு இறக்கி விடவும்

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment