Advertisment

மே 1 : நம்மைக் காக்க போராடும் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள்

நம் கண்களுக்கு தெரியாமல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம், கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நாம் இந்த உழைப்பாளர் தினத்தை அர்பணிப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
May Day tribute to all the health sector workers, clean workers, farmers, community kitchen staffs

May Day tribute to all the health sector workers, clean workers, farmers, community kitchen staffs

May Day tribute to all the health sector workers, clean workers, farmers, community kitchen staffs : 40 நாட்கள் ஆகப் போகின்றது, இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை மக்கள் வீட்டுக்குள் முடங்கி. அடுத்த என்ன நடக்க போகிறது என்ற தெளிவில்லாமல், மேக மூட்டமாய் மறைந்திருக்கும் எதிர்காலம். ஓட்டல், காய்கறி கடைகள், மருந்து கடைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், தீயணைப்பு துறை தவிர வேறேதும் இயங்கவில்லை. தொழிற்சாலைகள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் எப்போது வேலை பறிபோகுமோ என்ற அச்சத்தில் லட்ச கணக்கானோர் உள்ளனர்.

Advertisment

மேலும் படிக்க : சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: அனைத்துப் பள்ளிகளையும் மே 2-க்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு

லாக்டவுன் முடிந்த  பின்பே உண்மையான பிரச்சனை உள்ளது. வாழ்வாதாரம், தொழில், வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பின்மை, பசி, பிணி, பஞ்சம், கல்வி என அனைத்தும் கேள்வி குறியாக தொக்கி நிற்கிறது. ஆனாலும் மீண்டெழுவோம்.  ”அடுத்த 2-3 வருடங்களுக்கு ஒவ்வொரு இந்தியரும் 60 மணி நேரம் ஒரு வாரத்திற்கு உழைக்க வேண்டும். அப்போது ஒரு வாராக, வீழ்ச்சியில் சென்று கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை காக்க இயலும்” என்று இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். உழைப்பு இன்றி முடங்கியிருக்கும் நாளில் மே தினத்தால் என்ன பயன் என்றும் தோன்றும்.

ஆனாலும் நாற்பது நாட்கள் அல்லது இன்னும் சில வாரங்கள் கூடுதல் ஓய்வூதியத்திற்கு பிறகு நிச்சயமாக கொரோனாவை வென்றெடுத்துவிட்டு, வேலைகளுக்கு செல்வோம். அப்போது நாம், தெருவில் பார்க்கும் தூய்மை பணியாளர் தெய்வமாக தெரிவார். துப்புரவு தொழிலாளர்கள் ஒவ்வொருவரும், நாம் உயிருடன் இருக்க, நம்மை சுற்றியிருக்கும் ஒவ்வொரு அமைப்பையும் தூய்மை செய்து வருகிறார்கள்.

சாலையில் பார்க்கும் “போக்குவரத்து காவல்துறையினர்” தியாகிகளாக தெரிவார்கள். கொரோனாவால், வீட்டை விட்டு வெளியேற கூடாது என்று விதிகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, ஆயிர கணக்கானவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள், விழிப்புணர்வுகள் என அனைத்தையும் கூறி, கையெடுத்து கும்பிட்டு, சில நேரங்களில் “பிராங்கில்” ஈடுபட்டு, மக்கள் இந்த ஊரடங்கின் அவசியத்தை உணர்ந்து கொள்ள அயராது உழைத்தவர்களுக்கு நாம் நன்றி சொல்வோம். அல்லது ஒரு பொழுதேனும் அவர்களின் உழைப்பினை எண்ணி மனதிற்குள் வணங்கிக் கொள்வோம்.

இனிமேல், சம்பள உயர்வு, ஓய்வூதியம், கட்டிட பராமரிப்பு, இன்ன பிற தேவைகளுக்காக அரசு மருத்துவமனை ஊழியர்கள் போராட்டம் நடத்தினால், கண்களை மூடிக் கொண்டு, இது தவறு என்று சொல்லாமல், அவர்களின் நியாயமான கோரிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் சிந்திக்க துவங்கியிருப்போம்.

மேலும் படிக்க : சென்னையில் கொரோனா அதிகரிப்பு: அரசு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

இவர்கள் மட்டுமின்றி அம்மா உணவகங்கள், கம்யூனிட்டி கிச்சன்களில் பணியாற்றுபவர்கள், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள், மின்மயானத்தில் பணியாற்றுபவர்கள், தீயணைப்பு துறையினர், ஆரம்ப சுகாதார மைய ஊழியர்கள், உணவுப் பொருட்களை சிரமம் பாராமல் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் லாரி ஓட்டுநர்கள், இவர்கள் அனைவரையும் தாண்டி, நம் அனைவருக்கும் 3 நேர உணவினை உறுதி செய்யும் விவசாயிகள் தான் இன்று இந்தியாவை பாதுகாப்பாக இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.   நம் கண்களுக்கு தெரியாமல் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம், கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் நாம் இந்த உழைப்பாளர் தினத்தை அர்பணிப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment