10000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனுக்கு எப்படி இந்த சிந்தனைகள் உதித்தது?

மாயன் எனும் மர்ம நாகரீகம்!

லியோ

உலகில் பல நாகரீகங்கள் தோன்றி மறைந்துவிட்ட காலத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றி இன்றளவும் தனக்கென தனி சட்ட திட்டங்களோடும் சில அதிசயங்களையும் பல அமானுஷ்யங்களையும் தன்னகத்தே கொண்டு உலகின் பல நாகரீகங்களுக்கு முன்னோடியாய் திகழும் ஒரு நாகரீகமே மாயன் எனப்படும் மர்ம நாகரீகம்.

மாயன் இனத்தவர். இவர்களை பற்றி பல முறை செவிவழி செய்தியாக மட்டுமே அறிந்திருப்போம். ஆனால் பல ஆயிரம் ஆண்டு பழமையான இவர்களை பற்றி வாருங்கள் விரிவாய் காண்போம்.

சூரியன், சந்திரன், வெள்ளி போன்ற கிரகங்களை பற்றியும் நட்சத்திரங்களை பற்றியும் நாம் அறிந்தது பல. ஆனால் 10,000 ஆண்டுகள் முன்னரே அவற்றின் பாதையை அறிந்து வானவியலில் புது புரட்சியை உருவாக்கி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என்றும் 4 வருடங்களுக்கு ஒரு முறை நம் பூமியின் பாதை சிறிது மாற்றம் பெற்று 365.24 நாட்களாக நீள்வதையும் துல்லியமாய் கண்டு கூறினார். 2012ம் ஆண்டு மாயன்கள் உருவாக்கிய நாள்காட்டி முடிவுறுவதாகவும் ஆதலால் உலகம் அழிய போகிறது என்றும் பரவிய வதந்தி நாம் அறிந்ததே. ஆனால் அதன் பின் மாயன் நாள்காட்டியின் ஒரு பாகம் மட்டுமே முடிவுற்று இருப்பதாகவும். இன்னும் பல லட்ச ஆண்டுகளுக்கான நாள்கட்டி உள்ளதாகவும் அறிவியலாளர்கள் கூறினார்.

மனிதனின் வளர்ச்சி ஒரு ஒரு காலகட்டத்திற்கு எவ்வாறு மாறுபடும் என்றும் அதை மனிதன் எவ்வாறு எதிர்கொள்வான் என்ற கூற்றையும் அவர்கள் அளித்துள்ளனர். விவசாயம், மனித வாழ்வில் விலங்குகளின் பங்கீடு, இயந்திரங்களின் பங்கீடு என்று இன்றளவு நடக்கும் மாற்றங்களையும் அன்றே கணித்தனர் மாயன்கள்.
கட்டிடக்கலை வல்லுனர்களாக திகழ்ந்த மாயன் இனத்தவர்கள் கட்டிய கட்டிடங்கள் இன்றளவும் மத்திய அமெரிக்காவில் தலைநிமிர்ந்து நிற்கிறது. Hieroglyphic System என்று கூறப்படும் உருவரை எழுத்துமுறை இந்த மாயன்கள் தந்ததே. முந்தய காலகட்டத்தில் இந்த முறை எழுத்துக்களே பழக்கத்தில் இருந்தது. இன்று மத்திய அமெரிக்காவில் வாழும் மாயன் இனத்தின் சந்ததியினர் இன்றளவும் இவ்வகை எழுத்துக்களை மறவாமல், அழியாமல் பாதுகாத்து வருகின்றனர்.

கணிதம், வானவியல், வாழ்வின் நெறி, விளையாட்டு என்று அவர்கள் இவர்கள் கால்பதியா துறை இல்லை என்றே கூறலாம். ஆனால் ஒரு ஆதிகால மனிதனுக்கு 10000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனுக்கு எப்படி இவ்வாறான சிந்தனைகள் உதித்தது?. அம்மக்களின் IQ எனப்படும் நுண்ணறிவு திறனின் அளவு கண்டறிய முடியவில்லை.

ஆனால் இவ்வளவு மதிப்பும் தொன்மையும் கொண்ட இந்த நாகரிகம் தானாக எதையும் கற்கவில்லை, என்ன? தானாக எதையும் கற்கவில்லையா? ஆம் இந்த மாயன் நாகரீகத்திற்கும் முன் தோன்றிய ஒரு நாகரீகம் அதே மத்திய அமெரிக்காவில் புதையுண்டு கிடக்கிறது. அதுவே OLMEC எனப்படும் மாயன் மக்களை விட பழமையான மக்கள் கூட்டம். இவர்களிடம் இருந்தே மாயன்கள் அனைத்தையும் கற்றுக்கொண்டனர்.
அறிவியலாளர்கள் இன்றும் OLMEC இனத்தவர்களின் அழிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை. மேலும் இம்மக்கள் மத்திய அமெரிக்காவில் 19ம் நூற்றாண்டு வரை வாழ்ந்து வந்ததாக தொல்பொருள் ஆராச்சியாளர்கள் ஒரு ஆய்வை கூறினாலும், அகழ்வாயப்பட்டது OLMEC மக்கள் தானா என்ற சந்தேகம் இன்றும் உள்ளது. வேளாண்மை, வேட்டையாடுதல், சேகரிப்பது, போக்குவரத்து போன்றவை OLMEC மக்கள் வழக்கமாக இருந்தது. ஆனால் நதி ஓட்டங்களின் மாற்றம் விவசாயத்திற்கு பொருந்தாத சுற்றுசூழல் மாற்றம் இவையே இவர்கள் மறைவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1997ம் ஆண்டு Santley என்பவர் அளித்த ஆய்வில், Olmec மக்கள் வாழ்ந்த நிலம் சுற்றிலும் எரிமலைகள் நிறைந்த பகுதியாக இருந்ததாகவும் அதை உணர்த்த மக்கள் அடிக்கடி தங்கள் இடங்களை மாற்றி வந்ததையும் தெரிவித்துள்ளார். இவ்வாறு குறுகிய காலகட்டத்தில் அதிக அளவிலான இடமாற்றமே இம்மக்கள் முழுமையாய் மறைந்ததின் காரணமாக அவர் கூறுகிறார்.

அம்மக்கள் முழுமையாய் அழிந்துவிட்டதாக அறிஞர்கள் நினைத்தாலும் அவர்கள் வாழ்ந்த மத்திய அமெரிக்கா பகுதியில் இருந்து 330 மயில் தொலைவில் Olmec இனத்தில் மூதாதையரான Epi-Olmec இனத்தவர்கள் இடம்பெயர்ந்த காட்சிகளை சிலர் கண்டுள்ளனர். ஆனால் அவர்கள் எங்கு சென்றனர் என்னவாயினர் என்பது எல்லாம் மர்மமே.

இதை போன்ற மர்மங்கள் ஆச்சர்யங்கள் நிறைந்த பல இனமக்கள் இன்னும் நம் கண்ணில் படாமல் வாழ்ந்துகொண்டு தான் உள்ளனர். ஏன் இந்த Epi-Olmec இனத்தவரே தெற்கிலிருந்து வந்த ஒரு நதிக்கரை நாகரீகம் அறிந்த மக்கள் கூட்டத்திடம் இருந்தே பல விஷயங்களை கற்றுள்ளனர். அந்த நதிக்கரை நாகரீக மக்கள் யாரென்றே ஆய்வு இன்றும் ஆய்வுக்கு உட்பட்டே உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close