Advertisment

Weight Loss Tips: உடல் சிக்குனு இருக்க டயட் கண்ட்ரோல் மட்டும் போதாது...நேரமும் முக்கியம்

Weight Lost Meal Strategy: உணவு எடுத்துக்கொள்ளும் நேரம், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்குவகிப்பதாக தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Weight Lost Tips, Weight Lost

Weight Loss,Weight Loss Tips,Weight Loss Diet Plan,Weight Loss Exercise,Quick Weight Loss,Time to Eat Food,Best Time To Eat To lose Weight,Meal Time To Lose weight,How to Improve Metabolism,Reduce Appetite,Right Time To Eat. உடல் எடை, உடற்பருமன்

Weight Lost Meal To Burn Fat Fast: உணவு கட்டுப்பாட்டு முறை, உடற்பருமனை தடுக்கும் காரணி ஆகும். ஆனால், அதுமட்டுமே முக்கிய காரணியாகிவிடாது, எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம், எந்த அளவிற்கு சாப்பிடுகிறோம் உள்ளிட்டவையும், உடற்பருமன், கலோரி எரிதல், வளர்சிதைமாற்றம் உள்ளிட்டவைகளுக்கு அடிப்படையாக அமைகிறது.

Advertisment

சமீபத்திய ஆய்வின்படி, உணவு எடுத்துக்கொள்ளும் நேரம், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்குவகிப்பதாக தெரியவந்துள்ளது. நேரந்தவறி உணவை எடுத்துக்கொள்ளும்போது, அது நம் உடலின் வளர்சிதைமாற்றத்தை கடுமையாக பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான ஆய்விற்காக 3 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவர்களிடம் 4 நாட்கள் வீதம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல் குழுவினருக்கு அன்றைய நாளின் முதல் உணவை காலை 8 மணிக்கு, இரண்டாவது உணவு 18 மணிநேரங்கள் கழித்து மறுநாள் பிற்பகல் 2 மணிக்கும் வழங்கப்பட்டது.

இரண்டாவது குழுவினருக்கு முதல் உணவு காலை 8 மணிக்கும், இரண்டாவது உணவு 12 மணிநேரம் கழித்து இரவு 8 மணிக்கும் வழங்கப்பட்டது. இதுபோன்று அவர்களுக்கு 4 நாட்கள் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு குழு உறுப்பினர்களுக்கும், பசியின்மையின் அளவு, மெட்டபாலிசம், பசியை ஏற்படுத்தும் ஹார்மோனின் அளவு, விருப்ப உணவுகள், உடல் எடை போன்றவை முன்னரே அளவிடப்பட்டிருந்தன.

சோதனையின் முடிவில், முதல் குழுவினருக்கு பசியை ஏற்படுத்தும் ஹார்மோனின் அளவு குறைந்திருப்பதும், பசியின்மையும் கணிசமான அளவு குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. அவர்களின் உடலில், அதிகப்படியான கொழுப்பு கலோரிகளாக எரிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா?

சரியான நேரத்தில் சாப்பிடுதல், உடற்எடை அதிகரிக்காமல் இருப்பதன் முக்கிய காரணம் ஆகும். உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்டவைகள். உடற்பருமனை கட்டுப்படுத்தும் என்றாலும், சரியான நேரத்திற்கு சாப்பிடுதல் என்பது அத்தியாவசிய ஒன்றாகும்.

சிறிய அளவிலான உணவை, அடிக்கடி உட்கொள்ளுதல் சிறந்த பயனையளிக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அன்றைய நாளின் இறுதி உணவை இரவு 7 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.

அதிக பசியுடன் இருக்கும் நிலையை எப்போதும் உருவாக்கி கொள்ளக்கூடாது. சீரான இடைவெளியில், குறைந்த அளவிலான உணவை அவ்வப்போது எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment