Advertisment

தேங்காய் எண்ணெய், பால், பப்பாளி.. மீரா கிருஷ்ணா பியூட்டி சீக்ரெட்ஸ்

நடிகையாக இருப்பதால் தினமும் கூந்தலை அயர்னிங், டிரையிங், கர்ல்ஸ் பண்ண வேண்டியிருக்கும். அதனால் எனக்கு நிறைய முடி கொட்டியது- மீரா கிருஷ்ணா

author-image
WebDesk
New Update
Meeraa Krishna

Meeraa Krishna

கேரள மாநிலம் கோட்டயத்தை பூர்விகமாகக் கொண்ட மீரா கிருஷ்ணா, தமிழ் மற்றும் மலையாள சீரியல் உலகில் நன்கு பிரபலமானவர். தற்போது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

Advertisment

2003 ஆம் ஆண்டு ராஜீவ் விஜய் ராகவன் இயக்கிய ‘மார்கம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீரா ஒரு நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து சில படங்களில் நடித்த மீரா, சூர்யா டிவியில் தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கினார்.

மலையாளத்தில் ஸ்த்ரீஹிருதயம், தேவி மஹாத்மியம், கூடும் தேடி, தயா, மூணுமணி, பொக்கிஷம் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியதற்காக நன்கு அறியப்பட்டார். இப்போது தமிழில்’ சித்தி 2 சீரியலில் நடிக்கிறார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

மீரா கிருஷ்ணா முன்னதாக ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது தோல் மற்றும் முடி பரமாரிப்பு வழக்கத்தை பகிர்ந்து கொண்டார்.

வீடியோவில் தோல் பராமரிப்பு குறித்து  மீரா பேசுகையில்; நான் கற்றாழை ஜெல் தான் பயன்படுத்துகிறேன். அதனுடன் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தியே ஆகணும். நான் பியூட்டி பார்லருக்கு போகும் ஆள் கிடையாது. சிறுவயதில் இருந்தே வாரத்துக்கு ஒருமுறை தேங்காய் எண்ணெய் தேய்த்து குளிப்பது, வாரத்துக்கு மூன்று முறை தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பேன். அதைத்தான் இப்போது வரை கடைபிடிக்கிறேன். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

நடிகையாக இருப்பதால் தினமும் கூந்தலை அயர்னிங், டிரையிங், கர்ல்ஸ் பண்ண வேண்டியிருக்கும். அதனால் எனக்கு நிறைய முடி கொட்டியது. ஆனால் எனக்கு மீண்டும் முடி வளர்ந்ததற்கு காரணம் எண்ணெய் தேய்த்து குளிப்பதுதான். ஆனால் இப்போது வயதாவதால்’ சீரம் யூஸ் பண்ண ஆரம்பித்திருக்கிறேன்.

நேரம் கிடைக்கும் போது கற்றாழை, பால், பப்பாளி, தக்காளி, முல்தானி மட்டி போன்றவற்றை முகத்துக்கு அப்ளை செய்வேன். அதனால் முகத்தில் பருக்கள் வராமல் பொலிவாக இருக்கும். இரவு ஷூட்டிங் முடிந்து வரும்போது’ தவறாமல் ஃபேஸ் மசாஜ்  பண்ணுவேன். தேங்காய் எண்ணெய், ஏதாவது ஒரு மாய்ஸ்சரைசர், கற்றாழை ஜெல், ஏதாவது ஒன்றை பயன்படுத்தி ஃபேஸ் மசாஜ் செய்யலாம். சீரம் பயன்படுத்துவதால் முகத்தில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருக்கும்.

தேங்காய் எண்ணெயில் வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், செம்பருத்தி பூ, இலை, கொய்யா இலை இதையெல்லாம் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிய எண்ணெய் தான் கூந்தலுக்கு பயன்படுத்துவேன். இவ்வாறு மீரா கிருஷ்ணா ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது தோல் மற்றும் முடி பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.

இதோ அந்த வீடியோ!

&feature=emb_logo

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment