Advertisment

கறந்த பாலை அப்படியே குடிப்பது நல்லதா? ஷாக் ஆய்வு

Cow Milk: பசும் பாலை பச்சையாக பருகுவதால் பல நோய்கள் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கறந்த பாலை அப்படியே குடிப்பது நல்லதா? ஷாக் ஆய்வு

milk, cow milk, cow milk benefits, raw milk, cow raw milk, பசும் பால்

Cow Raw Milk: பசும் பால் மிகவும் சத்து மிகுந்ததாக கருதப்படுகிறது. இதை குளிர்வித்தோ அல்லது பச்சையாகவோ பருகும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கறந்த பசும் பாலை பச்சையாக பருகுவதால் பல நோய்கள் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய நோய்கள் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறது. பாக்டீரியா மூலம் பரவக் கூடிய நோய்கள் உடலில் வருவதற்கும் இது வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

Advertisment

சமூக வலைதளங்களை உபயோகிக்கும் முன்னர் சிந்தியுங்கள்...

கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of California, Davis) அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட 2000 க்கும் அதிகப்படியான பால் மாதிரிகளை பரிசோதித்தது. இதில் கறந்த பச்சை பால் மற்றும் பல வழிகளில் பதப்படுத்தப்பட்ட (pasteurised) பால் ஆகிய இரண்டும் உட்படும். அறை வெப்பநிலையில் கறந்த பாலை வைத்திருக்கும் போது அதிக அளவிலான ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நுண்ணியிர்கள் (antibiotic-resistant microbes) இருப்பதற்கான வாய்ப்பு கண்டறியப்பட்டது. ஆண்டிமைக்ரோபையல்-எதிர்ப்பு மரபணுக்களைக் (antimicrobial-resistant genes) கொண்ட பாக்டீரியாக்கள், ஒரு நோய்க்கிருமிக்கு (pathogen) அனுப்பப்பட்டால், அது “superbugs ஆக மாறும் திறன் உள்ளது, இதனால் நோய்த்தொற்று அல்லது நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருந்துகள் வேலை செய்யாத நிலை ஏற்படும். ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 3 மில்லியன் மக்கள் ஆண்டிபயாடிக் எதிர்ப்பு நோய்த்தொற்றை (antibiotic-resistant infection) உருவாக்குகிறார்கள், மேலும் 35,000க்கும் அதிகமானோர் இறக்கவும் செய்கின்றனர் என Centers for Disease Control தெரிவிக்கின்றது.

குழந்தைகளின் பாதத்தில் தோன்றும் தோல்புண்கள் கொரோனா வைரஸ் தொடர்பானதா?

இந்த ஆய்வுக்கு மக்களை பயமுறுத்தும் எண்ணம் இல்லை மாறாக அவர்களை பயிற்றுவிப்பது தான் நோக்கம் என ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இன்னும் நீங்கள் கறந்த பச்சை பாலை குடிக்க விரும்பினால், அதை குளிர்சாதன பெட்டியில் வைத்து அது ஆண்டிபயாடிக் எதிர்ப்பு மரபணுக்களுடன் பாக்டீரியாவை உருவாக்கும் அபாயத்தை குறைத்துவிட்டு பருகுங்கள், என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment