Advertisment

விஜய் சேதுபதியை ஓவர்டேக் செய்து 'சரவணன் மீனாட்சி' ஹீரோவான செந்தில் - சீரியல் உலகில் அசைக்க முடியா ஆளுமை

விஜய் தொலைக்காட்சியில் 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்ததில் சரவணனாகவே மக்கள் மனதில் வாழ்ந்த நிஜத்துக்கு பின்னால் ஒரு குட்டிக் கதையே இருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mirchi senthil saravanan meenatchi - விஜய் சேதுபதியை ஓவர்டேக் செய்து 'சரவணன் மீனாட்சி' ஹீரோவான செந்தில் - சீரியல் உலகில் அசைக்க முடியா ஆளுமை

Mirchi senthil saravanan meenatchi - விஜய் சேதுபதியை ஓவர்டேக் செய்து 'சரவணன் மீனாட்சி' ஹீரோவான செந்தில் - சீரியல் உலகில் அசைக்க முடியா ஆளுமை

பிரபலங்களில் அடைமொழியோடு அழைக்கப்படுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஏதாவது ஒரு அடைமொழியை அந்த பிரபலத்தின் பெயரோடு இணைத்து மக்கள் அழைப்பது வாடிக்கை. ஆனால், இவருக்கு மட்டும் இரு அடைமொழிகள் உண்டு.

Advertisment

மிர்ச்சி செந்தில்,

சரவணன் மீனாட்சி செந்தில்

வானொலி ரசிகர்கள் இவரை 'மிர்ச்சி' ரசிகர்கள் என்றும், டிவி ரசிகர்கள் இவரை 'சரவணன் மீனாட்சி' செந்தில் என்றும் அழைக்கின்றனர்.

மேலும் படிக்க - நட்புக்கு இலக்கணம் இப்படித் தான் இருக்கணும் - கெத்து காட்டும் விஜய்யின் 'ரியல் நண்பன்' சஞ்சீவ்

மக்கள் மனதில் இப்படியொரு இடத்தை அவர் அவ்வளவு சாதாரணமாக பிடித்துவிடவில்லை. அதற்காக அவர் விதைத்த உழைப்பு என்பது, சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் ஒரு தூண்டுகோலாக இருக்கும்.

செந்தில் அக்டோபர் 18, 1978ல் அன்று சென்னையில் கோவிந்தன், பிரேமாவதி தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோவில் பள்ளி படிப்பை முடித்தபின், பச்சையப்பா கல்லூரியிலும், மதுரை காமராஜ் பல்கலைகழகத்திலும் உயர் கல்வியை முடித்தார். சில மாதங்கள் வங்கித்துறையில் பணியாற்றிய செந்தில் குமார், அதன்பிறகே கலைத்துறைக்குள் நுழைந்தார்.

ரேடியோ மிர்ச்சி என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் 2003ம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கிய செந்தில், பின்பு கோவை ரேடியோ மிர்ர்ச்சியின் நிலைய தலைவராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். மிர்ச்சி கோல்ட், மிர்ச்சி பஜார், பேட்ட ராப், லவ் டாக்கீஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார். குறிப்பாக, 'நீங்க நான் ராஜா சார்' நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.

publive-image

விஜய் தொலைக்காட்சியில் 'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்ததில் சரவணனாகவே மக்கள் மனதில் வாழ்ந்த நிஜத்துக்கு பின்னால் ஒரு குட்டிக் கதையே இருக்கிறது.

ஆரம்பத்தில் அந்த தொடர் தொடங்கும் முன்பாக, அதை ஒரு குறும்படமாக எடுத்தனர். இதில் சரவணனாக டெஸ்ட் ஷூட்டில் நடித்தது விஜய் சேதுபதி தானாம். பிறகு தான் செந்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

அதன்பிறகு விஜய் சேதுபதி சினிமாவில் பெரும் உச்சத்திற்கு சென்றுவிட்டார் என்பது தனிக்கதை. இருப்பினும், அப்போது விஜய் சேதுபதியை ஓவர் டேக் செய்து செந்தில், அந்த பாத்திரத்துக்கு தேர்வானாராம்.

தவமாய் தவமிருந்து என்னும் திரைப்படத்தில் தொடங்கி, செங்காத்து பூமியிலே, கண் பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் செந்தில் நடித்துள்ளார்.

திரைப்பட இயக்குனர் மனோபாலாவின் இயக்கத்தில் பாலிமர் தொலைக்கட்சியில் குறுந்தொடரிலும் நடித்துள்ளார்.

விஜய் டிவியில் மாப்பிளை, மற்றும் நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொடர்களைத் தவிர செந்தில் பல நிகழ்ச்சிகளை ஸ்டார் விஜய்க்காக தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இந்த வாரம் என்னும் நிகழ்ச்சியில் பல திரைப்பட குழுவினருடன் இணைந்து பட விமர்சனம் செய்துள்ளார். பாலிமர் தொலைக்கட்சியில் பெண்களுக்கான பாக்சிங் நிகழ்ச்சியை செய்தார்.

தவமாய் தவமிருந்து திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் பெரும் உயரத்தை செந்தில் தொடவில்லை என்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் வானொலி மற்றும் டிவி வாயிலாக ஆளுமை செய்துக் கொண்டிருக்கிறார்.

நடிச்சா ஹீரோ தான் என்றில்லாமல், அனைத்து வித சவால்களுக்கும் தன்னை பொருத்திக் கொண்டதே இன்று இவரை பல தளங்களில் வெற்றிகரமாக இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment