மிஸ் இந்தியா கர்வி 2019... எடை ஒரு தடை கிடையாது... தன்னம்பிக்கை மங்கைகள் சொல்வது என்ன?

Miss Curvy India 2019 : மெல்லிய இடை, பருக்கள் தடமில்லாத முகம், வென்மையான ஜொலிக்கும் சருமம், அடர்த்தியான கூந்தல்… இவை தான் அழகு என நினைப்பவர்களின் எண்ணத்தை தூள் தூளாக கிழித்தெரிய தயாராகிறார்கள் மிஸ் இந்தியா கர்வி 2019 அழகிகள்.

பொதுவாகவே உலக அழகிகள் அல்லது இந்தியா அழகிகள் என்றதும், பலரும் கவனமும் மனுஷி சில்லார், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் மீதே இருக்கும். ஆனால் உண்மையிலேயே எது அழகு என்பதை உலகிற்கு எடுத்துறைக்க வருகிறது மிஸ் இந்தியா கர்வி 2019 போட்டி.

Miss Curvy India 2019 : மிஸ் இந்தியா கர்வி 2019

ஒல்லியாக இருப்பது மட்டுமல்ல, உடல் பருமனுடன் இருந்தாலும் பெண்கள் அழகு என்பதை நிரூபிக்க இந்த போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் உடலின் எடை அல்லது அளவு குறித்து எந்த நிபந்தனையும் இல்லை. அழகி போட்டியில் பங்கேற்க வேண்டுமென்ற கனவில் இருக்கும் எந்த பெண்ணும் தனது உடல் வாகு குறித்து கவலைக் கொள்ளாமல் பங்கேற்கலாம் என்பது தனிச் சிறப்பு.

இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் ஆரோக்கியத்தை கவனித்து வரும், பயிற்சியாளர் அனிதா கிருஷன் பேசுகையில், “நிஜத்தில் இதுவே மகிழ்ச்சியான இடம். இங்கு இருக்கும்போது அனைவரும் தன்னம்பிக்கையை உணர்கிறோம். யார் என்ன சொல்வார்கள், என் உடல் எடையை பற்றி எதாவது சொல்வார்களா போன்ற எண்ணங்களே கிடையாது. இங்கு யாரும் அப்படி பேசுபவர்கள் இல்லை. அனைவரும் ஒவ்வொருவரையும் சமமாக நடத்துகிறார்கள்” என்றார்.

மிஸ் இந்தியா கர்வி போட்டியில் பங்கேற்கும் அனைத்து அழகிகளுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. அழகு பராமரிப்பு, எடை பராமரிப்பு, உணவு பழக்கம், ஃபேஷன் டிப்ஸ் போன்றவற்றில் தகுந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

கிளேமர் கூர்கவுன் என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி பர்கா நாங்கியா, “என்னை இதுவரை தாழ்த்தி பேசிய பல பெண்கள பார்த்திருக்கிறேன். அதன் காரணமாக தான் இந்த போட்டியை நடத்தவே திட்டமிட்டு அனைத்து போட்டியாளர்களையும் திரட்டினோம். அவர்களுக்கு உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டுகிறோம். பல்வேறு பிரபல ஆடை பிரேண்டுகளுக்கு இவர்கள் மாடலாக கவுரவிக்கப்படுவார்கள்” என்றார்.

இன்னும் சில போட்டியாளர்களுக்கு இந்த மிஸ் இந்தியா கர்வி 2019 போட்டி, தாழ்வு மனபான்மையை விட்டு வெளியேற உதவும். திருமணம் ஆக வேண்டும் அல்லது அழகாக இருக்க வேண்டுமென்றால் உடல் எடையை குறை என அதிகமானோர் கூறி மனதளவில் காயப்பட்டவர்கள் உண்டு. அத்தகை எண்ணங்களை உடைத்தெறியவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போட்டியில், இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரும் தன்னம்பிக்கையுடன் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close