வீடே மணக்கும் சுவையான வெண்டைக்காய் மோர் குழம்பு!

Mor Kolambu Tasty Ladysfinger Mor Kozhambu recipe இதன் ஸ்பெஷல் பேஸ்ட், மோர் குழம்பின் ருசியை அதிகரிக்கச் செய்கிறது.

Mor Kuzhambu recipe Tasty Ladysfinger Mor Kozhambu recipe Tamil
Tasty Ladysfinger Mor Kozhambu recipe Tamil

Tasty Ladysfinger Mor Kozhambu recipe Tamil : காரம் அதிகம் இல்லாத மோர்க் குழம்பு யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் வித்தியாச முறையில் இதுபோன்று மோர்க் குழம்பு செய்து பாருங்கள், மோர் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இதன் ஸ்பெஷல் பேஸ்ட், மோர் குழம்பின் ருசியை அதிகரிக்கச் செய்கிறது.

மசாலா பேஸ்டுக்கு:

துவரம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி  – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி விதைகள் – 1 டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
சுடுதண்ணீர் – ½ கப்
தேங்காய் (அரைத்தது) – ½ கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் – 1
இஞ்சி – 1 இன்ச்

குழம்புக்கு :

தயிர் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெண்டைக்காய் – 250 கிராம்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – ½ டீஸ்பூன்
வெந்தயம் – ¼ டீஸ்பூன்
உலர்ந்த சிவப்பு மிளகாய் (உடைந்தது) – 1
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை சிறிதளவு
மஞ்சள் – ¼ டீஸ்பூன்
உப்பு – ¾ டீஸ்பூன்

செய்முறை :
 
முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் துவரம் பருப்பு, பச்சரிசி, கொத்தமல்லி விதைகள் மற்றும் சீரகத்தை,
½ கப் சூடான தண்ணீரில் சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

இப்போது ஊறவைத்த பருப்பை தண்ணீருடன் மிக்சி ஜாருக்கு மாற்றி, அதில் தேங்காய், கறிவேப்பிலை, மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீரைச் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.

இந்தத் தேங்காய் கலவையை 1 கப் தயிருடன் ஒரு பெரிய கிண்ணத்தில் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பெரிய கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் சுத்தம் செய்த வெண்டைக்காயை சேர்க்கவும்.

மிதமான தீயில் வெண்டைக்காய் கருகாத அளவிற்கு அதன் ஒட்டும் தன்மை மாறும் வரை வறுக்கவும்.

கடாயிலிருந்து வறுத்த வெண்டைக்காயைத்  தனியே ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.

பிறகு அதே கடாயில் தேங்காய் எண்ணெய் மற்றும் கடுகு, சீரகம், வெந்தயம், உலர்ந்த சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், சில கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து தாளிக்கவும்.

ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட தேங்காய் தயிர் கலவையை இதில் ஊற்றி உப்பு சேர்க்கவும்.

இந்தக் கலவையை நன்கு கலந்துவிட்ட பிறகு, வறுத்த வெண்டைக்காயை சேர்க்கவும்.

5 நிமிடங்கள் வரை வேகவைத்து, தேவைப்பட்டால் தண்ணீரைச் சேர்த்து தேவையான நிலைத்தன்மையைச் சரிசெய்யவும்.

அவ்வளவுதான் சுவையான மோர் குழம்பு தயார். இதனை, சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Mor kolambu recipe tasty ladysfinger mor kozhambu recipe tamil

Next Story
கடலை மாவு, மஞ்சள், தயிர்.. இதயத்தைத் திருடாதே பிந்துவின் பியூட்டி அலெர்ட்ஸ்!Bindhu Hima Beauty tips skincare and hair tips idhayathai thirudadhey
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com