கோடையில் சின்னதா ஒரு கேரளா டூர்… மறக்காமல் இந்த அருவிக்கு செல்லுங்கள்

கடவுள் நிலம் என அன்போடு அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் புகப்பெற்ற குளு குளு அருவிகளின் பட்டியலை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தொகுப்பாக வழங்குகிறது. கடலென்றாலும் சரி, அருவி என்றாலும், சரி, காடுகள் என்றாலும் சரி, மலை என்றாலும் சரி நம் நாட்டில் கேரளத்தை தவிர்த்து வேறெதையும் யோசித்து விட முடியுமா என்ன? கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே அர்த்தத்தைதான் தரும். அவ்வளவு இயற்கை அழகு கொண்டிருக்கும் இந்த மாநிலத்திற்கு கோடைக் காலத்தில் மக்கள் அதிகமாக கிளம்பிச் […]

Kerala Waterfalls, கேரளா
Kerala Waterfalls, கேரளா

கடவுள் நிலம் என அன்போடு அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் புகப்பெற்ற குளு குளு அருவிகளின் பட்டியலை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தொகுப்பாக வழங்குகிறது.

கடலென்றாலும் சரி, அருவி என்றாலும், சரி, காடுகள் என்றாலும் சரி, மலை என்றாலும் சரி நம் நாட்டில் கேரளத்தை தவிர்த்து வேறெதையும் யோசித்து விட முடியுமா என்ன? கேரளா என்றாலும், சுற்றுலா என்றாலும் ஒரே அர்த்தத்தைதான் தரும். அவ்வளவு இயற்கை அழகு கொண்டிருக்கும் இந்த மாநிலத்திற்கு கோடைக் காலத்தில் மக்கள் அதிகமாக கிளம்பிச் செல்வது வழக்கம்.

Kerala Waterfalls: கேரளா அருவிகள்

அது போல வெயில் காலம் நெருங்கி விட்டதால் குடும்பத்துடன் குளு குளு இடங்களுக்கு சென்று ரிலாக்ஸ் ஆக வேண்டுமென்று உங்களுக்கு யோசனை இருந்தால் இந்த தொகுப்பு உங்களுக்காகத் தான். கேரளாவில் உள்ள பிரபலமான 5 அருவிகளை நிச்சயம் பார்க்க மறக்க வேண்டாம்.

அதிரப்பள்ளி அருவி

Athirapally kerala, கேரளா

அதிரப்பள்ளி அருவி. இந்த அருவி கேரளாவில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் இருக்கிறது. 24 மீட்டர் உயரமுள்ள இந்த அருவி சாலக்குடி என்னும் இடத்தில் அருகில் உள்ளது. கேரளாவில் உள்ள அருவிகளில் இந்த அருவியை மிகப்பெரியதாகும். இந்த அருவியை இந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கின்றனர்.

இந்த அருவிக்கு பயணம் செய்வதற்கு தொடர்வண்டி நிலையம் அருகில் சாலக்குடியில் அமைந்துள்ளது. அந்த நிலையத்திலிருந்து இந்த அருவி 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து மற்றும் வாடகை வாகனங்கள் மூலம் நாம் இங்கு வந்தடையலாம். விமான நிலையம் கொச்சினில் அமைந்துள்ளது. அங்கிருந்து இந்த அருவிக்கு வருவதற்கு 54 கிலோ மீட்டர் தொலைவாகும் ஆகும். வாடகை வாகனங்கள் அல்லது பேருந்து மூலம் இங்கு வந்தடையலாம்.

சூச்சிபாரா அருவி

soochipara falls kerala, கேரளா

கேரளத்தில் உள்ள முக்கியமான பிரபல அருவிகளில் ஒன்று சூச்சிபாரா அருவி. இந்த இடத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள், இந்த அருவிக்கு வந்து நீராடி, குளிர் காய்ந்து செல்கின்றனர்.

கேலிகட் விமான நிலையத்தில் இருந்து சுமார் 102 கிலோ மீட்டர் தொலைவிலும், கோழிகோடு ரயில் நிலையத்தில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது இந்த அருவி. கேலிகட்டில் இருந்து ஒரு கார் எடுத்தால், பார்க்கிங் இடத்தில் நிறுத்துவார்கள். அங்கிருந்து 2 கிலோ மீட்டர் நடந்து வர வேண்டும்.

பாலருவி

palaruvi kerala, கேரளா

மலை உச்சியில் இருந்து பால் போல் வெள்ளை நிரத்தில் நுரைத்து கொட்டுவதாலேயே இந்த அருவியை பாலருவி என்றும் அழைக்கின்றனர்.  இந்த அருவியில் குளிப்பதால் சருமத்தில் உள்ள எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி ஆகும் என்பது நம்பிக்கை. காட்டுப் பகுதிக்குள் அமைந்திருக்கும் இந்த அருவியை சற்று தொலைவு நடந்தே செல்ல வேண்டும்.

திஒருவநந்தம் விமான நிலையத்தில் இருந்து 103 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த அருவி. ஆனால் ஆர்யன்கவு ரயில் நிலையத்திற்கும் இந்த அருவிக்கும் இடையே வெறும் 6 கிலோ மீட்டர் தொலைவு தான் உள்ளது. எனவே ரயில் நிலையத்தில் இருந்து செல்வது மிகவும் சுலபம்.

மீன்முட்டி அருவி

Meenmuty kerala, கேரளா

கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய அருவியாக அறியப்படும் மீன்முட்டி அருவி 300 அடி உயரத்தில், கல்பெட்டா நகரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் காணப்படும் நீரில் இயற்கையாகவே மீன்கள் நீந்த முடியாத ஒரு சூழல் உள்ளது. இதன் காரணமாக ‘மீன்களை தடை செய்யும் பகுதி’ என்ற அர்த்தத்தில் இந்த அருவி மீன்முட்டி அருவி என்று அழைக்கப்படுகிறது.

கேலிகட் விமான நிலையம் அல்லது கோழிகோடு ரயில் நிலையத்தில் இருந்து இந்த அருவி சுமார் 110 கிலோ மீட்டரில் உள்ளது. ஆனால் ஊட்டி வழியாக மலையேற்றம் பயிற்சி மூலம் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த அருவிக்கு செல்ல முடியும்.

கும்பவுருட்டி அருவி

kumbhavurutty kerala, கேரளா

கேரளத்தில் உள்ள கொல்லம் பகுதிக்கு அருகே உள்ளது அச்சன் கோயில். இந்த பகுதியில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் கும்பவுருட்டி அருவி. திருவனந்தப்புரத்தில் இருந்து அச்சன் கோயிலுக்கு செல்லும் KSRTC பேருந்து மூலமாக இந்த அருவிக்கு செல்லலாம். அல்லது வாடகை கார் மூலமாகவும் செல்ல முடியும்.

 

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Most beautiful waterfalls in kerala you should not miss

Next Story
காலை வெறும் வயிற்றில் வாழைப்பழம் உண்பது நல்லதா?Should We Eat Bananas on an Empty Stomach? - காலை வெறும் வயிற்றில் வாழைப்பழம் உண்பது நல்லதா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express