Advertisment

ஜிம் தேவையில்லை.. தொப்பையைக் குறைக்க மிகச் சிறந்த வழி இதுதான்!

இந்த எளிமையான உடற்பயிற்சி செய்ய, உங்களுக்கு எந்த உபகரணமும் தேவையில்லை, உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய இது உதவும்.

author-image
WebDesk
New Update
Health Tips

Most effective exercise for reduce belly fat

நம்மில் பலருக்கு நமது பிஸியான வாழ்க்கை காரணமாக தவறாமல் உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்க முடிவதில்லை. இன்னும் பலர், எப்போதும் சோம்பேறியாக உணர்கிறார்கள், இதனால் உடற்பயிற்சிகளைத் தவிர்க்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, தினமும் உடற்பயிற்சி செய்வது மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது முக்கியம்.

Advertisment

இந்த எளிமையான உடற்பயிற்சி செய்ய, உங்களுக்கு எந்த உபகரணமும் தேவையில்லை, உங்கள் எடை இழப்பு இலக்குகளை அடைய இது உதவும்.

உடல் எடையை குறைக்க, உடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் நல்ல உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிக நேரம், உபகரணங்கள் அல்லது ஜிம் தேவைப்படாத ஒரு உடற்பயிற்சி இங்கே உள்ளது, அதேநேரம் வேகமான எடை இழப்புக்கு அதே அளவு கலோரிகளை எரிக்கிறது" என்று ஊட்டச்சத்து நிபுணர் ரிச்சா இன்ஸ்டாகிராமில் கூறினார்.

அது என்ன என்று யோசிக்கிறீர்களா? அதுதான் நடைபயிற்சி! ரிச்சாவின் கூற்றுப்படி, நடைபயிற்சி ஒருவரது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

வழக்கமான நடைபயிற்சி, விரைவான எடை இழப்பு உட்பட பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஒரு நபர் செய்யக்கூடிய எளிதான மற்றும் செலவு குறைந்த உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்றாகும். எனவே ஒருவர் தவறாமல் நடந்து, சுறுசுறுப்பாக இருப்பதன் பலனைப் பெறலாம்.

வயிற்று கொழுப்பைக் குறைப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, நடைபயிற்சி போன்ற ஏரோபிக் உடற்பயிற்சிகளை தவறாமல் கடைபிடிப்பதாகும். ஒரு மைல் (1.6 கிமீ) நடப்பது சுமார் 100 கலோரிகளை எரிக்கிறது,” என்று அவர் கூறினார்.

தினமும் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

*இது இலவசம் (உபகரணங்கள் தேவையில்லை)

*இது கலோரிகளை எரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது

* மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைகிறது

*மனநிலை/மகிழ்ச்சியை மேம்படுத்துகிறது

* காயம் ஏற்படும் அபாயம் குறைவு

* பசியை குறைக்கிறது

*நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகிறது

* மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது

* வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

ஒருவர் எவ்வளவு நடக்க வேண்டும்?

"சிறந்த ஆரோக்கியம் மற்றும் விரைவான எடை இழப்புக்காக, தினமும் 10,000 அடிகள் நடக்க ஆரம்பிக்கலாம்," என்று அவர் பரிந்துரைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment