Advertisment

பட்ஜெட் ஸ்மார்ட்போன்... ரூ.6,999 விலையில் “மோட்டோ சி ப்ளஸ்”!

ஆண்ட்ராய்டின் நௌகட் இயங்குதளத்தை கொண்டிருக்கிறது

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
motocplus

லெனோவோவின் மோட்டோ சி ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஜூன் 20-ந் தேதி முதல் ஆன்லைன் விற்பனை தளமான ப்ளிப்கார்.காம்-ல் மோட்டோ சி ப்ளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது. இதனையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு ஆஃபரும் வழங்கப்படுகிறது.

மோட்டோ சி வரிசையில் வரும் இரண்டாவது ஸ்மார்ட்போன் தான் இந்த மோட்டோ சி ப்ளஸ் ஆகும். முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ சி ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ சி ப்ளஸ் ரூ. 6,999 விலையில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி பார்ககும் போது முன்னதாக வெளியான மோட்டோ சி- ஸ்மார்ட்போனை விட மோட்டோ சி ப்ளஸ் போன் கொஞ்சம் காஸ்ட்லி தான்.

ப்ளிப்கார்ட் பேஷனில் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூன் 26-ம் தேதி வரை அறிமுக ஆஃபரில் வாங்கும்போது 20 சதவீத தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அறிமுக ஆஃபரையொட்டி இந்த மோட்டோ சி ப்ளஸ் வாங்கினால் அதனுடன் ரூ.949 மதிப்பிலான மோட்டோரோல பல்ஸ் மேக்ஸ் வயர்டு ஹெட்போனை ரூ.749 என்ற தள்ளுபடி விலையில் வாங்க முடியுமாம். மேலும், மோட்டோ சி ப்ளஸ்-உடன் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு 30 ஜி.பி கூடுதல் டேட்டா வழங்கும் ஆஃபரும் உள்ளது.

மோட்டோ சி ப்ளஸ் சிறப்பம்சங்கள்

  • 5இன்ச் டிஸ்ப்ளே மற்றும் எச்.டி சிசொலூசன் 1280 x 720 பிக்சல்ஸ்.
  • 64-பிட் க்வாட் கோர் மீடியாடெக் ப்ராசஸ்சர்,
  • 2 ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ்(மைக்ரோ எஸ்டி கார்டு 128ஜிபி எக்ஸ்பாண்டபிள்)
  • கேமரா 8 எம்.பி மற்றும் ஃப்ளாஸ் லைட்டுடன் கூடிய 2 எம்.பி செல்ஃபி கேமரா.
  • ஆண்ட்ராய்டின் லேடஸ்ட் வெர்ஸ்னான ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம்.
  • 4ஜி/எல்.டி.இ நெட்வொர்க் சப்போர்ட்.
  • கலர்ஸ்: மெடாலிக் ஜெர்ரி, ஃபைன் கோல்டு மற்றும் ஸ்டாரி ப்ளாக்

மோட்டோ சி ப்ளஸில் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது. இது நாள் முழுவதும் அல்லது இரண்டு நாட்கள் கூட அதன் பயன்பாட்டை பொறுத்து பேட்டரை திறனை வைத்திருக்கக் கூடியது.

டிசைனை பொறுத்தவரையில் முன்னதாக வெளியான மோட்டோ சி-க்கும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோட்டோ சி ப்ளஸ்-க்கும் அதிக மாற்றமும் இல்லை என்றே கூறலாம். ஆனால், ஸ்கிரீன் ரெசெலூசன், ரியர் கேமரா மற்றும் பேட்டரி ஆகியவற்றை ஒப்பிடும்போது இரு ஸ்டார்போன்களிடையே அதிக வித்தியாசம் இருப்பதை காணமுடிகிறது.

குறிப்பாக மோட்டா சி ப்ளஸ் பேட்டரி(4000 எம்ஏஎச்) மோட்டோ சி பேட்டரியை( 2350 எம்ஏஎச்) விட விட அதிக திறன் படைத்தது. அதேபோல மோட்டோ சி ஸ்மாட்போனில் 5 எம்.பி கேமராவே இருக்கும் நிலையில் மோட்டோ சி ப்ளஸ் 8 எம்.பி கேமராவை கொண்டுள்ளது.

ரூ.6,999 என்ற விலையில் வெளியாகும் இந்த மோட்டோ சி ப்ளஸ் ஸ்மார்ட்போன் தற்போது சந்தைகளில் கிடைக்கும் பட்ஜெட் போன்களின் பட்டியலியலுக்கு புதுவரவு தான். ஆனாலும், அதனுடன் போட்டியில் உள்ள சியோமி போன்ற ஸ்டார்ட்போன்கள் இன்னும் ஆண்ட்ராய்டின் மார்ஸ்மெல்லோ இயங்குதளத்தையே கொண்டிககும் நிலையில், மோட்டோ சி ப்ளஸ் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வெர்ஷனான நௌகட் இயங்குதளத்தை கொண்டிருக்கிறது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

Flipkart Lenovo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment