திரையில் ஆக்ரோஷம், உள்ளுக்குள் அழுகை… கலங்கடிக்கும் மெளனிகாவின் கதை…

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அக்னி நட்சத்திரம்’, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும்’ஆயுத எழுத்து’ ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

By: December 3, 2019, 11:59:40 AM

Actress Mounika : தமிழ் சினிமாவில் இயக்குநராக துடிக்கும் பலருக்கும் இயக்குநர் பாலுமகேந்திரா பெரிய உதாரணமாக திகழ்வார். அவரால் அறிமுகப்படுத்த நடிகர்களும், அவரிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்களும், அவரைப் பின்பற்றி சினிமா துறைக்கு வந்தவர்களும் தங்கள் வாழ்வில் பெரும் உச்சத்தை அடைந்திருப்பார்கள்.

அந்த வகையில் இயக்குநர் பாலு மகேந்திராவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மெளனிகா. நடிகர் ரஜினிகாந்த், மாதவியை வைத்து அவர் இயக்கிய திரைப்படம் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’. 1985-ல் வெளியான இந்தப் படத்திலேயே மெளனிகா அறிமுகமானாலும், 1992-ல் வெளியான ‘வண்ண வண்ண பூக்கள்’ திரைப்படம் தான் அவரை அடையாளம் காட்டியது. பாலு மகேந்திரா இயக்கிய இந்தப் படத்தில் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க, முழு நீள பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மெளனிகா. செண்பகம் என்ற கதாபாத்திரத்தில் பிரஷாந்தை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரம்.

அதன் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்த மெளனிகா, மறுபுறம்  சீரியல்களில் மென்மையான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சொந்தம்’, ‘சொர்க்கம்’, ‘பாலு மகேந்திராவின் கதை நேரம்’, ‘ஆனந்தம் விளையாடும் வீடு’, ‘கலாட்டா குடும்பம்’ ஆகிய பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தார். தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘அக்னி நட்சத்திரம்’, விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும்’ஆயுத எழுத்து’ ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார். இதில் ஆயுத எழுத்து சீரியல்களில், ’லேடி டான்’ கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் மெளனிகா.

அதோடு பாலு மகேந்திராவுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பிலும் இருந்தார். இதனை பல நேர்க்காணல்களிலும், தனது ப்ளாக்கிலும் உறுதிப்படுத்தியிருந்தார் இயக்குநர். இவர்கள் 1998-ல் திருமணம் செய்துக் கொண்டாலும், அது 2004-ல் தான் வெளியுலகத்துக்கு தெரிய வந்தது. குழந்தை இல்லாத மெளனிகா, தன் அக்கா மகள் உதயாவை தனது சொந்த மகள் போல போற்றி வளர்த்திருக்கிறார். திருமணமான உதயா, சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் இரந்து விட, மெளனிகாவை வெறுமை தொற்றிக் கொண்டதாம். அதிலிருந்து மீண்டு வரவே மீண்டும் சீரியல்களில் நடிக்க வந்துவிட்டாராம் மெளனிகா.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Mounika balu mahendra ayutha ezhuthu serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X