துறுதுறு துருவன்.. மைனா விட்ட சேலஞ்ச்.. நொந்து போன யோகி.. யூடியூப் வீடியோ வைரல்!
கொஞ்சநேரம் கழித்து வந்த யோகி மகனை ஆசையாக தூக்கி சாப்பிட்டியா எனக் கேட்க, அப்போது, மைனா இன்னைக்கு நீதான் துருவுக்கு சாப்பாடு ஊட்ட வேண்டும் என சேலஞ்ச் விடுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து பிரபலமான ‘மைனா’ நந்தினி, இப்போது சீரியல், படங்கள், ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கிறார்.
Advertisment
நந்தினிக்கும், சீரியல் நடிகர் யோகேஷ்வரனுக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நந்தினி, அதில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள், ரீல்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நந்தினியை பின் தொடர்கின்றனர். அத்துடன் சொந்தமாக மைனா விங்ஸ் யூடியூப் சேனலையும் வைத்துள்ளார்.
இப்போது மைனா தனது யூடியூப் சேனலில் புதிதாக பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோ தொடங்கும்போதே, நான் யோகிக்கு சேலஞ் கொடுத்து ரொம்ப நாளாச்சு. இன்னைக்கு அவன் பண்ணாத ஒரு விஷயத்தை எப்படியாவது பண்ண வைக்கனும் என்று ஆரம்பிக்கிறார்.
பிறகு இன்னைக்கு துருவனுக்கு ஒரு ஸ்பெஷலான ரெசிபி பண்ண போறோம் என’ கேரட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பூண்டு, இஞ்சி, சோம்பு, மஞ்சள் பொடி சேர்த்து அது நன்றாக வதங்கிய பிறகு, ஏற்கெனவே ஊறவைத்த அரிசியை போட்டு காய்கறி சாதம் சமைக்கிறார்.
கொஞ்சநேரம் கழித்து வந்த யோகி மகனை ஆசையாக தூக்கி சாப்பிட்டியா எனக் கேட்க, அப்போது, மைனா இன்னைக்கு நீதான் துருவுக்கு சாப்பாடு ஊட்ட வேண்டும் என சேலஞ்ச் விடுகிறார்.
வேறு வழியில்லாமல் மைனாவின் சேலஞ்சை ஏற்றுக்கொண்ட யோகி, துருவனக்கு சாப்பாடு ஊட்ட, துருவ் ஓட, அவன் பின்னாலேயே யோகியும் சேர்ந்து ஓட, கடைசியில் மகனை வீட்டுக்கு வெளியே கொண்டுவந்து, இடுப்பில் தூக்கிவைத்து சாப்பாடு ஊட்டுகிறார். ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிய, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டமுடியாமல், யோகி சேலஞ்சில் தோற்று போகிறார்.
பிறகு நந்தினி, குழந்தைக்கு எப்படி சாப்பாட்டு ஊட்ட வேண்டும், சாப்பாடு ஊட்ட அம்மாக்கள் படும் பாடு குறித்து பேசுகிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “